Kohli: பிறந்தநாளில் சதம்! சச்சினின் சாதனையை சமன் செய்த கோலி; புதிய சாதனை படைத்த ஜடேஜா

சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் அதிக சதமடித்திருந்த (49) முன்னாள் இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்திருக்கிறார் கோலி. அதுவும் 277 போட்டிகளில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.
Kohli: பிறந்தநாளில் சதம்! சச்சினின் சாதனையை சமன் செய்த கோலி; புதிய சாதனை படைத்த ஜடேஜா
Kohli: பிறந்தநாளில் சதம்! சச்சினின் சாதனையை சமன் செய்த கோலி; புதிய சாதனை படைத்த ஜடேஜாட்விட்டர்

தனது 35வது பிறந்தநாளில், 49வது சதமடுத்து, சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்துள்ளார் இந்திய அணி வீரர் விராட் கோலி.

இவருடன் இணைந்து ஜடேஜாவும் தன் பங்கையாற்ற, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான நேற்றைய போட்டியில் இந்திய அணி 243 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இதன் மூலம், புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் அசைக்கமுடியாத இடத்தை பிடித்தது ரோஹித் சர்மாவின் படை.

உலகக்கோப்பை 2023 தொடர் அரையிறுதி கட்டத்தை நெருங்கிவருகிறது. இந்தியா மற்றும் சவுத் ஆஃப்ரிக்கா அணிகள் ஏற்கனவே செமி பைனலுக்கு தேர்வாகிவிட்டன. இன்னும் இரண்டு அணிகள் யார் என்பது முடிவாகவில்லை.

டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார் கேப்டன் ரோஹித் சர்மா.

தொடக்க வீரராக களமிறங்கிய ரோஹித் வழக்கம் போல 40 ரன்களுக்கு பின் அவுட் ஆகினார். கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் களம் தான் ரோஹித் சர்மா 264 அடித்த இடமாகும். இதனால் அவரது விக்கெட் சற்றே ஏமாற்றத்தை வழங்கியது.

அடுத்து களமிறங்கிய விராட் கோலி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 49வது ஓவரில் சதத்தை பூர்த்தி செய்தார். இது அவரது 49வது சதம் ஆகும்.

சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் அதிக சதமடித்திருந்த (49) முன்னாள் இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்திருக்கிறார் கோலி.

அதுவும் 277 போட்டிகளில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். இன்னும் ஒரு சதமடித்தால், ஒரு நாள் போட்டிகளில் அதிக சதம் அடுத்த ஒரே வீரர் என்ற பெருமையை அடைவார்.

Fingers Crossed 🤞

Kohli: பிறந்தநாளில் சதம்! சச்சினின் சாதனையை சமன் செய்த கோலி; புதிய சாதனை படைத்த ஜடேஜா
விராட் கோலி: அணல் பறக்கும் 45வது ஒரு நாள் சதம்! சச்சினின் சாதனையை சமன் செய்த இந்திய வீரர்

ஷ்ரேயாஸ் ஐயர் 77, ஜடேஜா 29 ரன்கள் எடுக்க, 50 ஓவர்கள் முடிவில் இந்தியா 326 ரன் எடுத்திருந்தது.

பெரும் இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க பேட்டர்களை பதம் பார்த்தது இந்திய அணியின் பந்துவீச்சு. ஜடேஜா 5 விக்கெட்களை வீழ்த்தினார். இதன் மூலம், உலகக்கோப்பையில் 5 விக்கெட்கள் எடுத்த ஒரே இந்திய சுழற்பந்துவீச்சாளர் என்ற சாதனையை இவர் படைத்தார்.

83 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களும் இழந்து தோல்வியை தழுவியது சவுத் ஆஃப்ரிக்கா.

16 புள்ளிகளுடன் இந்திய அணி முதலிடத்தை தக்கவைத்தது.

Kohli: பிறந்தநாளில் சதம்! சச்சினின் சாதனையை சமன் செய்த கோலி; புதிய சாதனை படைத்த ஜடேஜா
விராட் கோலி டு ரோஹித் சர்மா: உலகக்கோப்பையில் அதிக சதம் விளாசிய வீரர்கள் யார் யார்?

இதில் கவனிக்கப்பட வேண்டிய மற்றொரு விஷயமும் உள்ளது. இந்த உலகக்கோப்பை தொடரில் ரோஹித் சர்மாவின் ஆட்டம், பெரிதும் பேசப்பட்டு வருகிறது.

தொடக்க வீரராக களமிறங்கும் ரோஹித் சர்மா, ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவரது தனிப்பட்ட ஸ்கோர் 40ஐ அடையும் தருவாயில் நிதானமாகிறார், அல்லது அவுட் ஆகி பெவிலியன் திரும்புகிறார்.

களத்தில் நின்று ஆடாமல், இவன் என்னயா விக்கெட்ட பறிகொடுக்குறான் என்று சாதாரணமாக நாம் நினைக்கலாம். தவறு இல்லை.

ஆனால் வல்லுநர்களின் கூற்று என்னவோ, ரோஹித்தின் இந்த செயல் மிக முதிர்ச்சியானதாக உள்ளது என்பது தான். ஆட்டத்தின் தொடக்கத்தில் இவர் அமைத்து தரும் அடித்தளம், அடுத்தடுத்து களம் இறங்கும் வீரர்களை அழுத்தத்தில் இருந்து பாதுகாக்கிறது, அணியின் வெற்றியின் மீது பிரதிபலிக்கிறது.

இதையே பௌலிங்கில் ஜஸ்ப்ரீத் பும்ராவும் செய்கிறார்.

மொத்தத்தில் இந்திய அணி இந்த தொடரில் வெளிப்படுத்தி வரும் ஆல் ரௌண்ட் பெர்பாமன்ஸ், கோப்பையை பெற்று தரும் என்பதில் பலரும் நம்பிக்கையுடன் உள்ளனர். 2015 உலகக்கோப்பையில், அரையிறுதி வரை தோல்வியடையாமல் இருந்தது இந்திய அணி.

ஆனால் அதன் பிறகு என்ன ஆனது என்று நமக்கு தெரியும். ரசிகர்களாக நமக்கு கொஞ்சம் ஓவர் கான்ஃபிடன்ஸ் தான், பார்க்கலாம்!

Kohli: பிறந்தநாளில் சதம்! சச்சினின் சாதனையை சமன் செய்த கோலி; புதிய சாதனை படைத்த ஜடேஜா
Virat Kohli : 1021 நாட்களுக்கு பிறகு சதம் விளாசிய விராட் - கொண்டாடித் தீர்த்த ரசிகர்கள்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com