இன்று இரண்டாவது டி20 உலகக்கோப்பை அரையிறுதியில் இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்திய அணி கடந்த 15 வருடங்களில் முதன்முறையாக தோனி இல்லாமல் விளையாடும் முதல் நாக் அவுட் போட்டி இது!
8வது 20 ஓவர் உலகக்கோப்பை போட்டிகள் அரையிறுதி சுற்றை எட்டியுள்ளது. நேற்று நடந்த முதல் அரையிறுதியில் பாகிஸ்தான் நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் பாகிஸ்தான் அணி வென்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.
இந்நிலையில், இன்று இந்திய அணி இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. இதில் வெற்றி பெறும் அணி வரும் 13 ஆம் தேதி நடக்கவுள்ள இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ளும். தோல்வியுறும் அணி தொடரை விட்டு வெளியேறும்.
இந்த போட்டி இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி இல்லாமல் இவர்கள் விளையாடும் முதல் ICC நாக் அவுட் போட்டி. இதற்கு முன்னர் 2019ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை அரையிறுதியில் இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதின. அதில் இந்திய அணி தோற்றது. இதுவே தோனி அணியில் விளையாடிய கடைசி நாக் அவுட் போட்டி.
இதற்கு பின்னர், இதுவரை நடந்த ICC போட்டிகளில் இந்திய அணி பெரிதும் சாதிக்கவில்லை. இன்றைய போட்டியில், இங்கிலாந்தை வென்று இறுதிப்போட்டிக்குள் சென்றால், 2007ல் நடந்தது போல மீண்டும் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, அணியில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். 2013க்கு பிறகு எந்த ICC கோப்பையையும் இந்தியா வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust