IPL 2022 - MI vs LSG : அப்போ சாம்பியன்; இப்போ அடிவாங்காத இடமே இல்லை - மும்பை முடிந்த கதை

அட பங்காளிகள் திருந்தி ஒழுங்காக விளையாட ஆரம்பித்து விட்டார்களே என சற்று சந்தோஷப்படுவதற்குள் முதல் விக்கெட்டாக இஷான் கிஷன் நடையாய் கட்டினார்
Mumbai Indians
Mumbai IndiansTwitter
Published on

ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்று ஐபிஎல்லில் அதிக முறை கோப்பையை வென்ற அணியாக வலம் வந்த மும்பை இந்தியன்ஸ் அணி , இந்த முறை தொடர்ச்சியாக எட்டு போட்டிகளில் தோல்வியைத் தழுவி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளது.

இதன் மூலம் ஐபிஎல் 2022 சீசனில் பிளே ஆஃபுக்கு தகுதி பெரும் வாய்ப்பை இழந்த முதல் அணியாகியுள்ளது ரோகித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ்.

இந்த ஐபிஎல் சீசனில் லீக் போட்டிகள் முழுக்க மகாராஷ்டிரா மண்ணில் நடைபெறும் நிலையில், சொந்த ஊரில் எட்டு போட்டிகளில் விளையாடி ஒன்றைக் கூட வெல்ல முடியாமல் ரசிகர்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது அந்த அணி.

நேற்றைய தினம் லக்நௌ அணியைச் சந்தித்தது மும்பை இந்தியன்ஸ். இந்த போட்டியில் டாஸ் வென்ற ரோகித் ஷர்மா சேஸிங்கை தேர்ந்தெடுத்தார்.

பும்ரா பந்தில் டீ காக் அவுட் ஆனாலும், கே எல் ராகுலின் பொறுப்பான ஆட்டத்தால் பவர்பிளேவில் மேற்கொண்டு விக்கெட் சரியாமல் பார்த்துக்கொண்டது லக்நௌ. ஆனால் ரன்ரேட் மந்தமாகவே இருந்தது. ஆறு ஓவர்கள் முடிவில் 32 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

பத்தாவது ஓவரை மெரிடித் வீசினார், அந்த ஓவரில் 17 ரன்கள் எடுத்ததன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 72 ரன்களை குவித்தது. பொல்லார்டு பந்தில் மணீஷ் பாண்டே அவுட் ஆனார். அவர் 22 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார்.

அதற்கடுத்து பேட்டிங் பிடிக்க வந்த எந்தவொரு லக்நௌ வீரரும் நிலைத்து நின்று விளையாடவில்லை. எனினும் கே.எல்.ராகுல் மட்டும் உயிரைக் கொடுத்து விளையாடிக் கொண்டிருந்தார். கடைசி ஓவரை மெரிடித் வீசினர். அப்போது ஒரு சிக்ஸர் வைத்து தனது சதத்தை நிறைவு செய்தார். 20 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட்டுகள் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது லக்நௌ.

கே.எல்.ராகுல் 62 பந்துகளில் 103 எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த ஐபிஎல் சீசனில் கே.எல்.ராகுல் அடிக்கும் இரண்டாவது சதம் இது. இந்த இரண்டு சதமும் மும்பை அணிக்கு எதிராகவே வந்தது குறிப்பிடத்தக்கது.

Mumbai Indians
IPL 2022 : RCB-க்கு ஏப்ரல் 23-ல கண்டம்? முரட்டு ஃபார்மில் திமிறும் காவ்யா மாறன் அணி

169 ரன்கள் எனும் டார்கெட்டுடன் சேஸிங்கை தொடங்கியது மும்பை.

முதல் ஓவரில் 11 ரன்கள்; பவர்பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் முடித்திருந்தது மும்பை.

அட பங்காளிகள் திருந்தி ஒழுங்காக விளையாட ஆரம்பித்து விட்டார்களே என சற்று சந்தோஷப்படுவதற்குள் முதல் விக்கெட்டாக இஷான் கிஷன் நடையாய் கட்டினார். அவர் 20 பந்துகளில் வெறும் எட்டு ரன்கள் அடித்தார்.

அடுத்து வந்த டெவால்டு ப்ரீவிஸ் மூன்று ரன்களில் பெவிலியனுக்குச் சென்றார். இதனால் கடுப்பானாரோ என்னவோ, அதுவரை நன்றாக விளையாடிக் கொண்டிருந்த கேப்டன் ரோகித் ஷர்மா 31 பந்துகளில் ஐந்து பௌண்டரி, ஒரு சிக்ஸருடன் 39 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார்.

Mumbai Indians
Mumbai IndiansTwitter

விக்கெட் இழப்பின்றி 49 ரன்கள் எடுத்திருந்த மும்பை திடீரென மூன்று ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்தது. பத்து ஓவர்கள் முடிவில் அந்த அணியின் ஸ்கோர் மூன்று விக்கெட்டுகள் இழப்புக்கு 59 ரன்கள்.

அதன் பின்னர் சூரிய குமார் யாதவும் ஏழு ரன்களில் நடையை கட்டினார். திலக் வர்மாவுடன் பொல்லார்டு ஜோடி சேர்ந்தார். பொல்லார்டு சொதப்பினாலும் திலக் வர்மா அதிரடியால் மும்பை மெல்ல மெல்ல மீண்டது. 16 ஓவர்கள் முடிவில் 110 ரன்கள் எடுத்திருந்தது.

ஆனால், கடைசி ஓவர்களில் லக்நௌ பௌலர்ர்கள் அபாரமாக பந்துவீச 36 ரன்கள் வித்தியாசத்தில் மீண்டுமொரு மோசமான தோல்வியை சந்தித்தது மும்பை இந்தியன்ஸ்.

இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் நான்காவது இடத்துக்கு முன்னேறியது லக்நௌ. ஒரு கட்டத்தில் இரண்டாவது இடத்தில் நீடித்த பெங்களூரு அணி கடந்த போட்டியில் மோசமான முறையில் தோற்றதால் தற்போது ஐந்தாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்றைய தினம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் மோதவுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Mumbai Indians
நெல்லை : பெண் எஸ்.ஐ-யை தாக்கி கைதான குற்றவாளி கழிவறையில் விழுந்து கை எலும்பு முறிவு

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com