ஐபிஎல் 2023 இறுதிப்போட்டிக்காக நேற்றைய நாள் பரபரப்பாக இருந்தது. ஆனால் மாலையில் நடந்த நிகழ்வுகள் அனைவருக்கும் ஏமாற்றத்தைத் தந்தன.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் போட்டி அட்டவணை செய்யப்பட்டிருந்தது. ஆனால் மழை குறுக்கிட்டதால் போட்டி நடத்தப்படாமல் போனது.
இறுதிப்போட்டியில் நுழைய இரண்டு அணிகளும் இந்த சீசன் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தின. முதல் போட்டியில் இருந்தே யாரும் வெல்ல முடியாத வீரனாக வலம் வந்தது குஜராத் டைட்டன்ஸ் அணி.
மறுபக்கம் முதலில் கொஞ்சம் சறுக்கல்களை சந்தித்தாலும் தொடரின் இரண்டாவது பாதியில் உறுதியாக கர்ஜித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
இளம் வீரர்களின் வித்தையும், அனுபவம் வாய்ந்த கேப்டனின் விவேகமும் வெற்றிப்பாதைக்கு சென்னையைக் கைப்பிடித்து அழைத்து வந்தது.
இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்காக அதுவரை வென்றிராத குஜராத் டைடன்ஸ் அணிக்கு தோல்வியைக் காட்டியது சிஎஸ்கே.
தோல்வியடைந்தாலும் மும்பை அணியை 62 ரன்கள் வித்தியாசத்தில் வென்று எழுச்சியோடு வந்தது குஜராத் அணி.
இந்த இரண்டு அணிகளும் மோதும் இறுதிப்போட்டி நிச்சயமாக ரசிகர்களுக்கு பெருவிருந்தாக இருக்கும். ஆனால் ஒரு ரிலாக்ஸான ஞாயிறு மாலையில் இந்த போட்டியை கண்டுகழிக்கும் வாய்ப்பை நாம் இழந்துவிட்டோம்.
இன்று போட்டிகள் நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ள நிலையில் ஒருவேளை இன்றும் மைதானம் விளையாடுவதற்கு உகந்ததாக இல்லை என்றால் என்ன செய்வது என்ற கேள்வி எழுந்துள்ளது.
இன்றும் மழைக் குறுக்கிட்டால் இரண்டு அணிகளுக்கும் இடையில் சூப்பர் ஓவர் போட்டி மட்டும் நடத்தப்பட்டு வெற்றியாளர் அறிவிக்கப்படுவார்.
சூப்பர் ஓவர் நடத்தக் கூட அகமதாபாத் வானிலை அனுமதிக்கவில்லை என்றால் புள்ளிப்பட்டியலில் உச்சத்தில் இருக்கும் அணி வெற்றியாளராக அறிவிக்கப்படும்.
அந்த வகையில் நாளை குஜராத் அணி "ஆடாமல் ஜெயிச்சோமடா" என அஜித் பாடலுக்கு ஆட்டம் போட அதிக வாய்ப்புகள் உள்ளது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust