IPL 2023ன் முதல் சதம்: மாஸ் காட்டிய ப்ரூக்; விட்டுக்கொடுக்காத ரிங்கு - SRH எடுத்த பாடம்!

ஆனால் ஸ்க்ரிப்டில் இம்முறை மாற்றம் இருந்தது! 23 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவின் வெற்றியை தட்டிப்பறித்தது எய்டன் மார்க்ரம் படை.
IPL 2023ன் முதல் சதம்: மாஸ் காட்டிய ப்ரூக்; விட்டுக்கொடுக்காத ரிங்கு - ஐபிஎல் பரபரப்பு!
IPL 2023ன் முதல் சதம்: மாஸ் காட்டிய ப்ரூக்; விட்டுக்கொடுக்காத ரிங்கு - ஐபிஎல் பரபரப்பு!Twitter

ஐபிஎல் 2023ன் 19வது போட்டி நேற்று கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸில் நடந்தது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சன் ரைசர்ஸ் ஹைதராபாத்தை எதிர்கொண்டது.

ஹோம் கிரவுண்டில் நடக்கும் போட்டி என்பதாலும், கொல்கத்தாவின் முந்தையை போட்டிகளின் நிலவரங்களாலும், கே கே ஆர் தான் வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.

ஆனால் ஸ்க்ரிப்டில் இம்முறை மாற்றம் இருந்தது! 23 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவின் வெற்றியை தட்டிப்பறித்தது எய்டன் மார்க்ரம் படை.

டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் நிதிஷ் ரானா பௌலிங்கை தேர்வு செய்தார். களமிறங்கிய ஹைத்ராபாத்தின் தொடக்க வீரர் ஹேரி ப்ரூக் நம்பிக்கை அளித்தார். மயான்க் அகர்வால், ராகுல் திரிபாத்தி இருவரும் தலா 9 ரன் எடுத்து அவுட் ஆகினர். பின்னர் இணைந்த எய்டன் மார்க்ரம் ஹேரி ப்ரூக் ஜோடி அதிரடி காட்டியது.

55 பந்துகளில் 12 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் சதமடித்தார் ஹேரி ப்ரூக். இது இந்த சீசன் ஐபிஎல்லின் முதல் சதம், ஹேரி ப்ரூக்கிற்கும் ஐபிஎல்லில் முதல் சதம்.

மறுபக்கம் மார்க்ரமும் தனது பங்கிற்கு அரைசதம் கடந்தார். ஆனால், வருண் சக்கரவர்த்தியின் சுழலில் வீழ்ந்தார்.

20 ஓவர் முடிவில் ஹைதராபாத் அணி 228 ரன்கள் எடுத்திருக்க 4 விக்கெட்கள் மட்டுமே பறிக்கொடுத்திருந்தது. கொல்கத்தா தரப்பில் ஆன்ட்ரே ரஸல் 3 விக்கெட் எடுத்திருந்தார். கடசி வரை ஹேரி ப்ரூக் அட்டமிழக்கமால் இருந்தார்.

இதுவே இந்த சீசனில், தற்போது அதிகபட்ச முதல் இன்னிங்க்ஸ் ஸ்கோர்.

IPL 2023ன் முதல் சதம்: மாஸ் காட்டிய ப்ரூக்; விட்டுக்கொடுக்காத ரிங்கு - ஐபிஎல் பரபரப்பு!
IPL 2023: முதல் வெற்றியை பதித்த ஹைதராபாத்; வீணாய் போன தவானின் 99 - காவ்யா மாறன் ஹேப்பி!

229 என்ற இமாலய இலக்கை துரத்திய கொல்கத்தாவுக்கு, தொடக்க வீரர் குர்பாஸ், இம்பாக்ட் பிளேயர் வெங்கடேஷ் ஐயர், நம்பிக்கை நட்சத்திரம் சுனில் நரேன் ஏமாற்றம் அளித்தனர். நான்கு ஒவர்களில் 20 ரன் மட்டுமே எடுத்து 3 விக்கெட்களை பறிகொடுத்திருந்தது கொல்கத்தா.

போட்டி ஹைதராபாத்தின் பக்கம் என்றிருந்த நிலையில் இணைந்த நிதிஷ் ரானா ஜெகதீசன் இணை, அதிரடியை வெளிப்படுத்த கொல்கத்தா பக்கம் காற்றடித்தது.

ஆனால் தக்க சமயத்தில் ஜெகதீசன், அதிரடி ஆட்டக்காரர் ரஸல் ஆகியரின் விக்கெட்களை எடுத்த ஹைதராபாத் அணி, கொல்கத்தாவை விட்டுப்பிடித்தது எனலாம்.

IPL 2023ன் முதல் சதம்: மாஸ் காட்டிய ப்ரூக்; விட்டுக்கொடுக்காத ரிங்கு - ஐபிஎல் பரபரப்பு!
IPL 2023 : 10 ஆண்டுகளுக்கு பிறகு ஓபனிங் செய்த அஷ்வின்; ஏன்? - கேப்டன் சஞ்சு சொன்னது என்ன?

கேப்டன் நிதிஷ் ரானாவுடன் இணைந்தார் ரிங்கு சிங். 36 பந்துகளில் 94 ரன்கள் தேவையாக இருந்தது. ரிங்கு சிங்க் களத்தில் இருந்ததால் வெற்றி யார் பக்கம் என்ற முடிவு கடினமாக தான் இருந்தது.

சளைக்காமல் பவுண்டரிகளும், சிகசர்களுமாக பொழிந்தாலும், ஹைதராபாத்தின் திறமையான பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங்க், வெற்றியை கொல்கத்தாவிடம் இருந்து தட்டிப்பறித்தது.

23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது ஹைதராபாத் அணி. நிதிஷ் ரானா 75 ரன்கள், ரிங்கு சிங் 57 ரன்கள் எடுத்திருந்தனர்.

"கொல்கத்தா அணியின் திறனுக்கு முன்னே இந்த இலக்கும் எளிது தான். ஆனால் எங்கள் அணியின் பௌலர்கள் சிறப்பாக விளையாடினர். புவனேஸ்வர் குமாரை எப்பொழுதும் நம்பலாம்.

சொந்தமண்ணை விட்டு வெளியில் பெற்ற வெற்றி இன்னும் ஸ்பெஷல். ஹேரி ப்ரூக்கின் திறனை நாம் அனைவரும் அறிவோம், அவரது சதம் அணிக்கு வலுவான இலக்கை பெற்று தந்தது.

என்ன நடந்தாலும், இறுதியில் இது ஒரு போட்டி. ஏதாவது ஒரு வகையில் நமக்கு பாடம் கற்று தரும்" என்று பேசியிருந்தார் மார்க்ரம்.

4 போட்டிகளில் 2ல் வென்றுள்ள ஹைதராபாத் அணி, தற்போது புள்ளிப்பட்டியலில் 7வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. கொல்கத்தா 4வது இடத்தில் அதே 4 புள்ளிகளுடன் இருக்கிறது

IPL 2023ன் முதல் சதம்: மாஸ் காட்டிய ப்ரூக்; விட்டுக்கொடுக்காத ரிங்கு - ஐபிஎல் பரபரப்பு!
IPL 2023: ரிங்கு சிங் - தரையில் தொடங்கிய பயணம் விண்ணை எட்டிய கதை! யார் இவர் ?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com