IPL 2022 - MI vs KKR : என்னா அடி...! மும்பை அணியை  சவக்குழி தோண்டி புதைத்த Pat Cummins 

நேற்றைய போட்டியால் சென்னை ரசிகர்களுக்கு ஒரு ஆறுதல் என்னவெனில் மோசமான தோல்வியால் ரன்ரேட் குறைந்து புள்ளிபட்டியலில் சென்னையை விட பின்தங்கி இருக்கிறது மும்பை.
Pat Cummins 
Pat Cummins NewsSense
Published on

ஐபிஎல்லில் அதிக முறை சாம்பியன் பட்டத்தை வென்றது அம்பானியின் மும்பை அணி தான். ஆனால் நேற்றைய தினம் ஷாருக்கானின் கொல்கத்தா அணியிடம் வாங்கிய அடியை ஆயுசுக்கும் மும்பையால் மறக்கவே முடியாது. 

இந்த ஐபிஎல் சீசனில் முதல் வெற்றிக்காக ஏங்கும் மும்பை இந்தியன்ஸ் நேற்று இரவு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு அணி எப்போதும் மும்பையிடம் அடி வாங்கிக் கொண்டே இருக்கும் என்றால் அடித்து கொல்கத்தா தான். 

இந்த முறையும் கொல்கத்தாவை அடிச்சு ஃபாரர்முக்கு வந்துவிடலாம் என கணக்கு போட்டது ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ். 

ஆனால், ஒரே ஒரு ஓவரில் மும்பை அணிக்கு சங்கு ஊதிவிட்டார் கொல்கத்தாவின் பேட் கம்மின்ஸ். 

கொல்கத்தா நேற்று டாஸ் வென்று பௌலிங்கை தேர்ந்தெடுத்தது. 

ஆட்டம் தொடங்கியபோது மைதானம் பௌலிங்குக்கு சாதகமாகவே இருந்தது. எனினும் தான் ஆடுவது டி20 மேட்ச் என்பதை  மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் மறந்துவிட்டார் போல. ஆம். 12 பந்துகளில் வெறும் மூன்று ரன்கள் எடுத்து அவர் ஆட்டமிழந்தார். 

Newssense

இனிமேல் என் ஆட்டம் வெறித்தனமா இருக்கும் என கங்கணம் கட்டிக்கொண்டு இந்த ஐபிஎல் சீசனில் நுழைந்தாரோ என்னவோ, பந்துவீச்சில் தெறிக்க விட்டுக் கொண்டிருக்கிறார் உமேஷ் யாதவ்.

நேற்றைய ஆட்டத்தில் முதல் இரண்டு ஓவர்களில் வெறும் 3 ரன்கள் மட்டும் கொடுத்து ரோகித் ஷர்மா விக்கெட்டை கைப்பற்றினார்.

11 ஓவர்கள் முடிவில் மும்பை தேமேவென ஆடி மூன்று விக்கெட்டுகள் இழப்புக்கு 55 ரன்கள் எடுத்திருந்தது. அதன் பின்னர் சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா ஜோடி ஓரளவு சிறப்பாக விளையாடி மும்பை அணி கௌரவமான ரன்களை குவிக்க உதவியது.

ஆட்டத்தின் கடைசி ஓவரை வீசினார் பேட் கம்மின்ஸ், அவரது முதல் பந்திலேயே அரை சதம் விளாசியிருந்த சூர்யகுமார் அவுட் ஆனார். அதற்கடுத்த ஐந்து பந்துகளையும் எதிர்கொண்ட பொல்லார்டு சாத்து சாத்து என சாத்தினார். மூன்று சிக்ஸர்கள் உட்பட 23 ரன்கள் குவித்தார்.

கடைசி ஓவரில் மிகப்பெரிய அளவில் ரன்கள் கிடைத்ததால் மும்பை அணியின் ஸ்கோர் திடுமென 161 ரன்களாக உயர்ந்தது. கடைசி 5 ஓவர்களில் மட்டும் 76 ரன்கள் எடுத்தது மும்பை.

கொல்கத்தா 13 ஓவர்களுக்கு பிறகு 101 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்து விட்டிருந்தது. அடித்துவிடக் கூடிய இலக்கு தான் எனினும் ஓரிரு விக்கெட்டுகள் போனால் கூட கதை கந்தல் என்ற நிலையில் இருந்தது கொல்கத்தா.

தைமல் மில்ஸ் வீசிய 14-வது ஓவரில் ஒரு சிக்ஸர், ஒரு பௌண்டரி விளாசினார் பேட் கம்மின்ஸ். இதையே அடுத்த ஓவரை வீசிய பும்ராவுக்கும் செய்தார் கம்மியின்ஸ்.

மும்பை அணிக்காக 16-வது ஓவரை வீச ஆஸ்திரேலியாவின் டேனியல் சாம்ஸ் வந்தார். அந்த ஓவரை கொல்கத்தா அணிக்காக ஆடும் ஆஸ்த்ரேலிய வீரர் பேட் கம்மின்ஸ் எதிர்கொண்டார்.

Pat Cummins 
Smell Therapy : வாசனை மனதை ரிலாக்ஸ் ஆக்கும் - இது குறித்து அறிவீர்களா?

டேனியல் வீசிய ஒவ்வொரு பந்தையும் கம்மின்ஸ் விளாசி தள்ளினார். கம்மின்ஸின் ஒவ்வொரு அடியும் இடியாய் இறங்கியது. மும்பை இந்தியன்ஸ் வீரார்களுக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. ரோகித் ஷர்மா மிரட்சியுடன் பார்த்தார்.

சிக்ஸர், பௌண்டரி, சிக்ஸர், சிக்ஸர், நோ பாலில் 2 ரன்கள், பௌண்டரி, சிக்ஸர் என ஒரே ஓவரில் 35 ரன்களை விளாசி தள்ளினார் கம்மின்ஸ். அந்த ஓவரின் கடைசி பந்தில் கம்மின்ஸ் அடித்த சிக்ஸரோடு மும்பை அணி நிர்ணயித்த இலக்கை கொல்கத்தா தாண்டிவிட்டது.

14 பந்துகளில் அரை சதம் அடித்து ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக சதமடித்தவர்கள் பட்டியலில் கே.எல்.ராகுலோடு இணைந்து முதலிடத்தில் இருக்கிறார் கம்மின்ஸ்.

Pat Cummins 
கல்லீரல், குடலில் தேங்கியுள்ள கழிவுகளை நீக்கும் 4 பானங்கள்

பேட் கம்மின்ஸின் பேட்டிங்கில் நேற்று மும்பை அணி மட்டுமல்ல ஒட்டுமொத்த ஐபிஎல் கிரிக்கெட் ரசிகர்களுமே அதிர்ந்துதான் போயினர்.

அசால்டாக 16வது ஓவரில் மேட்சை முடித்ததால் நல்ல ரன்ரேட்டுடன் தற்போது புள்ளிபட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.

நேற்றைய போட்டியால் சென்னை ரசிகர்களுக்கு ஒரு ஆறுதல் என்னவெனில் மோசமான தோல்வியால் ரன்ரேட் குறைந்து புள்ளிபட்டியலில் சென்னையை விட பின்தங்கி இருக்கிறது மும்பை.

அதிக முறை கோப்பையை வென்ற அணிகளான மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்க்ஸும் இந்த ஐபிஎல் சீசனில் ஒரு போட்டியில் கூட இன்னும் வெற்றிபெறவில்லை.

Pat Cummins 
இலங்கை : நாட்டைவிட்டு வெளியேறுகிறதா ராஜபக்சே குடும்பம், என்ன நடக்கிறது அங்கே?

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com