Smell Therapy : வாசனை மனதை ரிலாக்ஸ் ஆக்கும் - இது குறித்து அறிவீர்களா?

மன அமைதி, முகத்தில் வழியும் எண்ணெய்ப் பசையை நீக்கம், மூட்டுவலி, முடக்குவாதம், எலும்புருக்கியால் ஏற்படும் வலிக்கு நிவாரணி இன்னும் பல பல நன்மைகள் இந்த Smell Therapy மூலம் பெற முடியும்!
Lemon Oil
Lemon Oil Twitter
Published on

நுகர்ந்து பார்த்தாலே நோய்கள் பறந்துபோகுமாம். Smell and relax treatment இது. மனதையும் உடலையும் ஒருநிலைப்படுத்தி பிரச்னைக்குத் தீர்வு காண உதவுகிறது நறுமண சிகிச்சை. மூக்கில், உள்ள சிறு முடிகள் (Cillia) வாசனையை உள்வாங்கி மூளைக்கு அனுப்பும். மூளையானது மற்ற உறுப்புகளுக்குக் கட்டளையிடுவதால் நோய்கள் தீரவும், நோய்களின் தீவிரம் குறையவும் வாய்ப்புகள் அதிகம். பூக்கள், பழங்கள், மூலிகைகள் போன்றவற்றை நுகர்ந்தோ, அதைச் சருமத்தில் பூசியோ நற்பலன்களைப் பெற முடியும். எந்த எண்ணெய்யை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம் எனப் பார்க்கலாம்.

லெமன் எண்ணெய் (Lemon oil)

லெமன் எண்ணெய் இந்த எண்ணெய்யைப் பாதிக்கப்பட்ட இடத்தில் மட்டும் அதாவது புண், மரு ஆகியவற்றில் தடவி வந்தால் விரைவில் சரியாகும். சருமத்தின் உட்புறத் தோலில் உள்ள அழுக்கைச் சுத்தம் செய்யும். உடலில் உள்ள செல்களுக்குப் புத்துயிர் தரும். பாதித்த செல்களை இயல்பாக்கும். சென்சிட்டிவ் சருமத்தினருக்கு மட்டும் எரிச்சல் கொடுக்கலாம். மற்ற அனைத்துச் சருமத்திலிருக்கும் ஏற்ற எண்ணெய் இது. முகத்தில் வரக்கூடிய கரும்புள்ளிகளைக் குணமாக்கும். முகத்தைப் புத்துணர்வாக்கும்.

Lavender oil
Lavender oilTwitter

லாவெண்டர் எண்ணெய் (Lavender oil)

ஐந்து நிமிடங்கள் சுவாசித்தாலே நல்ல தூக்கத்தைப் பெறலாம். பூச்சிக்கடி, சரும நோய்கள் சரியாகும். நகம் உடையும் பிரச்சினை இருப்பின், நகத்தைச் சுற்றித் தடவி வர நகங்கள் ஆரோக்கியமாகும். பாத வெடிப்புகளைக் குணமாக்கும்.

Ginger oil
Ginger oilPixabay

இஞ்சி எண்ணெய் (Ginger oil)

உடலில் சேரும் கொழுப்பைத் தடுக்கும். மலமிளக்கியாகவும் செயல்படும். தொப்பை இருப்பவர்கள், இந்த எண்ணெய்யைத் தடவி மசாஜ் செய்துவரக் கொழுப்பைக் கரைக்க உதவும். செல்லுலாயிட் என்ற கொழுப்பு, சருமத்தில் எங்கு வேண்டுமானாலும் படியலாம். அதைக் கரைக்கும். வெந்நீரில் இரண்டு சொட்டுகள் விட்டு வாய் கொப்பளித்தால், தொண்டைவலி, வறட்டு இருமல் குணமாகும்

Eucalyptus oil
Eucalyptus oilTwitter

யூகலிப்டிக்ஸ் எண்ணெய் (Eucalyptus oil)

மூக்கடைப்பு, தலைவலி, நீர் கோத்தல், சைனஸ் பிரச்னைக்கு நிவாரணம் அளிக்கும். மனச்சோர்வு நேரத்தில், இந்த எண்ணெய்யைப் பஞ்சில் நனைத்து, ஐந்து நிமிடங்கள் சுவாசிக்கலாம். தலைமுடியில் துர்நாற்றம் வீசும், பிரச்னையைப் போக்கும். சுவாசப் பாதைகளில் உள்ள பிரச்னைகளைச் சரிசெய்யும். தலைவலி, தலை பாரம் தீரும்

Peppermint oil
Peppermint oilTwitter

பெப்பர்மின்ட் எண்ணெய் (Peppermint oil)

மென்தால் இருப்பதால், சுவாசப் பாதையில் உள்ள அடைப்புகள் நீங்கும். சருமத்தில் அடைபட்டிருக்கும் அழுக்கைப் போக்கும். கை, கால்கள் போன்ற இடங்களில் திடீர் வீக்கம் வரும்போது, இந்த எண்ணெய்யைத் தடவி மசாஜ் கொடுக்கையில் வலி நீங்கும்

Black pepper oil
Black pepper oilTwitter

மிளகு எண்ணெய் (Black pepper oil)

மூட்டுவலி, முடக்குவாதம், எலும்புருக்கியால் ஏற்படும் வலிக்கு நிவாரணியாகச் செயல்படும். சிறந்த வலி நிவாரணி. உடனடியாக வலி குறையும். ஒற்றைத் தலைவலி, இடுப்பு வலி சரியாகும். மாதவிடாய் சுழற்சி சரியாக இல்லாதோருக்கு, இந்த எண்ணெய்யைத் தடவி மசாஜ் கொடுத்துவர மாதவிலக்கு சீராகும்.

Rosemary oil
Rosemary oilTwitter

ரோஸ்மெரி எண்ணெய் (Rosemary oil)

கூந்தலுக்கு கிளென்ஸராகச் செயல்படும். பொடுகு நீங்கும். கூந்தல் வளர உதவும். எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது, இரண்டு சொட்டு ரோஸ்மெரி எண்ணெய்விட்டு குளித்தால், கூந்தல் பளபளப்புடன், ஃபிரெஷ்ஷாக இருக்கும். ரோஸ்மெரியைப் பயன்படுத்தும்போது அளவு மிகவும் முக்கியம். தெரப்பிஸ்ட் பரிந்துரைத்த அளவைத் தாண்டினால், வலிப்பு நோய் வரலாம். இந்த எண்ணெய்யைப் பயன்படுத்துவதற்கு முன் அருகில் உள்ள அரோமா தெரபிஸ்டிடம் ஆலோசனை பெற்ற பின் தேவையான அளவில் மட்டும் பயன்படுத்துங்கள். குளிக்கும் நீர், ஃபேஷியல் கலவை, கூந்தலில் தடவும் எண்ணெய்யோடு இரண்டு சொட்டுகள் ரோஸ்மெரி எண்ணெய்யைக் கலந்திட இரட்டிப்புப் பலன்களைப் பெற முடியும்

Lemon Oil
தேநீர் வரலாறு : இதுதான் டீ-யின் கதை |History of Tea
Tea Tree Oil
Tea Tree OilTwitter

டீ ட்ரீ எண்ணெய் (Tea Tree oil)

ஆன்டிசெப்ட்டிக்காக பயன்படும். முகப்பருக்கள், எண்ணெய் வழிதல், பொடுகு, படை, தேமல், அலர்ஜி, பூச்சிக்கடி, கொப்புளங்களுக்கு மருந்தாகச் செயல்படும். இந்த எண்ணெய் பயன்படுத்துவதற்கு முன் அருகில் உள்ள அரோமா தெரபிஸ்டை கலந்து ஆலோசிப்பது நல்லது. காயங்களை சுத்தப்படுத்தி சுகாதாரமாக வைக்க உதவும். அக்கி, அம்மைத் தழும்புகள் சரியாகும்

Cedarwood oil
Cedarwood oilTwitter

சிடர்வுட் எண்ணெய் (Cedarwood oil)

தேவதாரூ என்ற மூலிகையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் இது. பார்க்கத் தெளிவாகவும், எடை குறைந்தும் இருக்கும். சருமத்தில் ஆன்டிசெப்டிக்காகச் செயல்பட்டு, தொற்றுகளை நீக்கும். சருமத்தை மிருதுவாக்கி ஆரோக்கியமாக்கும். கால், முழங்காலில் நீர் கோத்து மூட்டுக்கள் வீங்கும் பிரச்னைக்கு நல்ல தீர்வு. பிசுக்கான பொடுகு, எண்ணெய் வழிதல் பிரச்னையைப் போக்கும். முகப்பரு, அரிப்பு, சொரி போன்ற சருமத் தொல்லைகளை நீக்கும்.

Sweet orange oil
Sweet orange oilTwitter

ஸ்வீட் ஆரஞ்சு எண்ணெய் (Sweet orange oil)

கிளென்ஸராகச் செயல்படும். முகத்தில் வழியும் எண்ணெய்ப் பசையை நீக்கும். ஆரஞ்சின் தோலிலிருந்து எடுக்கக்கூடிய எண்ணெய் ஒரு மூட் க்ரியேட்டராகச் செயல்படும். மாணவர்களுக்கு, கவனக்குறைவு, சோர்வான உணர்வு இருப்பின், கைக்குட்டையில் இரண்டு சொட்டுகள் விட்டு, அவ்வப்போது நுகர்ந்தால் நல்ல பலன் தெரியும். சோர்வைப் போக்கும். வீட்டில் இரண்டு சொட்டுகள் விட்டால், இந்த வாசனை மனதை ரம்மியமாக்கும். சரும துர்நாற்றத்தைப் போக்கும். வயதானவர்களின் மனநிலையை உற்சாகமாக்க இந்த எண்ணெய் உதவியாக இருக்கும்.

மெல்லிசா
மெல்லிசாTwitter


மெல்லிசா (Melissa), மிர் (Myrrh)

மெல்லிசா , மிர் போன்ற எண்ணெய்களின் வாசம் அறை முழுவதும் பரவி, மன அமைதி கிடைக்கச் செய்யும். மெல்லிசா எண்ணெய் மன அமைதியை ஏற்படுத்தும். மிர் உடலில் உள்ள ஆல்ஃபா, பீட்டா செல்கள் அதிகமாவதைக் கட்டுப்படுத்தும். இது, சென்ட் பாட்டில் மற்றும் ரோல் ஆன் வடிவங்களில் கிடைக்கிறது. உள்ளங்கையில் சில துளிகள் விடலாம் அல்லது படுக்கும் அறையில் சில துளிகளைத் தெளிக்கலாம். தூக்கமின்மை பிரச்னையால் அவதிப்படுபவர்களுக்கு ஆழ்ந்த தூக்கத்தைத் தரும். எதிர்மறை எண்ணங்கள் மறையும். மன உளைச்சலில் அவதிப்படுபவர்களுக்கு ஆன்டி டிப்ரஷன் டிப்ஃயூசர் நன்மையைச் செய்யும். முதலில், ஒரு மாதம் தொடர்ந்து நுகரலாம். பிறகு, தேவைப்படும்போது பயன்படுத்தலாம்.

Lemon Oil
வெடிக்குண்டை கண்டுபிடிக்கும் இயற்கை போலீஸ் - ஒரு மருத்துவ பதிவு

ஹெலிசைசம் (Helichysum) மற்றும் லாங் லாங் (Ylong Ylong) எண்ணெய்கள் இதயப் பிரச்னை உள்ளவர்களுக்கு மிகவும் சிறந்தது. இதயத் துடிப்பைச் சீர்செய்யும். இதயச் சுவர்களில் ஏற்பட்ட வலியைக் குறைக்கும். உணர்வுகளைக் கட்டுப்படுத்தும். பதற்றத்தை நீக்கும். கெட்ட கொழுப்புச் சேர்வதைத் தடுக்கும். உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மன அழுத்தம் போன்ற காரணங்களால் வரும் இதயப் பாதிப்புகளுக்குச் சிறந்த முதலுதவி. இதயப் பிரச்னை இருப்பவர்கள், 40 வயதைக் கடந்தவர்கள் தினமும் இருமுறை இந்த வாசத்தை முகரலாம். இதை முகர்ந்தால், 15 நொடிகளில் இதயம் இயல்புநிலைக்கு வந்துவிடும். திடீரென்று மாரடைப்பு வலி ஏற்பட்டால், முதலுதவியுடன், இந்த வாசனையையும் முகரச் செய்துவிட்டு, உடனடியாக மருத்துவமனைக்குச் செல்லலாம்.

நறுமணத்துக்கும் சுவைக்கும் சேர்க்கப்படும் பட்டையில் (Cinnamon) இருந்து தயாரிக்கப்பட்ட எண்ணெய்யை முகரும்போது, சர்க்கரை நோய், கணையத்தில் இன்சுலின் சுரப்பு சீரற்ற நிலை கட்டுக்குள் வரும். பட்டை எண்ணெய்யுடன் நான்கைந்து காம்பினெஷன் எண்ணெய் வகைகளும் சேர்த்து சுவாசிக்கலாம். இந்தக் கலவையை அரோமா தெரப்பிஸ்ட், அந்தந்த நோயாளிக்கு ஏற்ப பரிந்துரைப்பார். தினமும் ஐந்து வெண்டைக்காய்களைப் பச்சையாக சாப்பிட, இன்சுலின் சுரப்பு சீராகும்.

Lemon Oil
Weight loss drink : கொழுப்பைக் கரைப்பதில் நம்பர் 1 மூலிகை!

மரத்திலிருந்து வரும் பிசின் மூலம் எடுக்கப்படும் ஃப்ரான்கின்சென்ஸ் (Frankincense) எண்ணெய்யுடன் வெர்ஜின் ஆலிவ் எண்ணெய் கலந்து முகத்தில் பூசலாம். சரும சுருக்கங்கள் நீங்கி, புத்துணர்வு நிறைந்த இளமையான சருமத்தைப் பெறலாம். மூப்படைதலைத் தாமதப்படுத்தலாம். முகத்தைச் சுத்தமாகக் கழுவி, ஆவி பிடித்து, முகத்தில் எண்ணெய்களைப் பூசி, மசாஜ் செய்து, 40 நிமிடங்கள் கழித்துக் கழுவ வேண்டும். இதன் மூலம், ரத்த ஓட்டம் சீராகும். தசைகளின் இறுக்கம் குறையும். ரிலாக்ஸான உணர்வு கிடைக்கும். முகம் பளிச்செனப் பிரகாசிக்கும். முதலில் மூன்று நாட்கள் இதைச் செய்ய வேண்டும். பிறகு, வாரத்துக்கு அல்லது மாதத்துக்கு ஒருமுறை எனச் சருமத்தின் தன்மையைப் பொருத்துச் செய்யலாம்.

எதிர்மறை எண்ணங்கள் நீங்க, ஜெர்மன் ப்ளு சமொமைல், ரோஸ் ஒட்டோ (Rose otto), ஏஜ்ஜெலிக்கா (Angelica) போன்ற எண்ணெய்கள் மனப் பதற்றத்தைக் குறைத்து, அமைதியடையச் செய்யும். தீர்க்கமான முடிவுகளை எடுக்கும் அளவுக்கு மூளை சரியாகச் செயல்படும். எதிர்மறை எண்ணங்கள் மறைந்து, தன்னம்பிக்கை துளிர்விடும். எதற்கெடுத்தாலும் பயம், பதற்றம் எனக்கு ஏதாவது ஆகிவிடுமோ அல்லது மற்றவருக்கு ஏதாவது நேர்ந்துவிடுமோ எனத் தேவையற்ற கற்பனைகளால் குழம்புபவர்கள், ஒரு வாரத்துக்குத் தொடர்ந்து பயன்படுத்தலாம். நல்ல மாற்றம் தெரியும். பிறகு, மாதம் இருமுறை முகரலாம்.

Lemon Oil
கல்லீரல், குடலில் தேங்கியுள்ள கழிவுகளை நீக்கும் 4 பானங்கள்

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com