RR vs PBKS : தவானை குறும்பாக எச்சரித்த அஷ்வின் - ஐபிஎலில் நடந்த கலாட்டா! | வீடியோ

மேன்கட் முறையில் பேட்ஸ்மேன்களை பெவிலியனுக்கு அனுப்புவதில் அஷ்வின் பெயர்பெற்றவர். பஞ்சாப் அணியின் கேப்டனும், மூத்த பேட்ஸ்மேனுமான தவானுக்கு மேன்கட் எச்சரிக்கை விடுத்தார்.
RR vs PBKS : தவானை குறும்பாக எச்சரித்த அஷ்வின் - ஐபிஎலில் நடந்த கலாட்டா! | வீடியோ
RR vs PBKS : தவானை குறும்பாக எச்சரித்த அஷ்வின் - ஐபிஎலில் நடந்த கலாட்டா! | வீடியோTwitter
Published on

நேற்றைய பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்தன.

குறிப்பாக ஸ்பின் பௌலர் அஷ்வின், பஞ்சாப் அணியின் கேப்டனும், மூத்த பேட்ஸ்மேனுமான தவானுக்கு மேன்கட் எச்சரிக்கை விடுத்தார்.

மேன்கட் முறையில் பேட்ஸ்மேன்களை பெவிலியனுக்கு அனுப்புவதில் அஷ்வின் பெயர்பெற்றவர்.

நேற்றைய போட்டியில் 7வது ஓவரை வீசியபோது சிக்கர் பிரப்சிம்ரன் பேட்டிங் செய்தார்.

எதிர்முனையில் இருந்த சிக்கர் தவான் பந்து வீசுவதற்கு முன்னரே கிரீஸை விட்டு வெளியே வந்ததால் அவரை மேன்கட் முறையில் அவுட் செய்யும் வாய்ப்பு இருப்பதை சுட்டிக்காட்டினார் அஷ்வின்.

இந்த சம்பவமே ஆடியன்ஸை சிரிக்க வைக்க கேமராவில் உடனடியாக ஜாஸ் பட்லரின் முகத்தைக் காட்டினார்கள். இது மேட்சைப் பார்த்துக்கொண்டிருந்த அனைவரையும் சிரிக்க வைத்தது.

2019ம் ஆண்டில் அஷ்வின் பஞ்சாப் அணிக்காக விளையாடினார். அப்போது ராஜஸ்தான் அணியின் பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லரை மேன்கட் முறையில் அவுட் செய்தார். அப்போது மேன்கட் முறை சர்ச்சையை எழுப்பியது குறிப்பிடத்தக்கது.

RR vs PBKS : தவானை குறும்பாக எச்சரித்த அஷ்வின் - ஐபிஎலில் நடந்த கலாட்டா! | வீடியோ
GT vs DC : "முதல் அடி என்னோடதா இருக்கும்" - வெற்றிக்கு பிறகு ஹர்திக் பேசியது என்ன?

மேன்கட் முறை :

இரண்டு பேட்ஸ்மேன்களில் நான் - ஸ்ட்ரைக்கர் எண்ட் எனப்படும் பந்துவீச்சாளர் பக்கம் இருப்பவர், பந்து வீசப்படுவதற்கு முன்னால் கிரீஸை விட்டு வெளியேறினால் பந்துவீச்சாளர் அவரை நேரடியாக ரன்அவுட் ஆக்கும் முறையே மேன்கட்.

எனினும் 2022ம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக மேட்கட் முறை ரன் அவுட் என அங்கீகரிக்கப்பட்டது.

RR vs PBKS : தவானை குறும்பாக எச்சரித்த அஷ்வின் - ஐபிஎலில் நடந்த கலாட்டா! | வீடியோ
ரிஷப் பண்ட் முதல் ஷ்ரேயஸ் ஐயர் வரை - ஐபிஎல் 2023ஐ மிஸ் செய்யும் வீரர்கள் யார் யார்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com