"பெங்களூரு அணிக்கு கப் வாங்கி கொடுங்க" தோனியிடம் ரசிகர் கோரிக்கை - தல சொன்ன பதில் என்ன?

RCB அணியின் ரசிகர் ஒருவர் தோனியிடம் எங்கள் அணிக்கு சப்போர்ட் செய்து ஒரு கோப்பையை வென்று தருமாறு கோரிக்கை வைக்க அதற்கு தல சொன்ன பதில் அனைவரையும் கவர்ந்துள்ளது.
"பெங்களூரு அணிக்கு கப் வாங்கி கொடுங்க" தோனியிடம் ரசிகர் கோரிக்கை - தல சொன்ன பதில் என்ன?
"பெங்களூரு அணிக்கு கப் வாங்கி கொடுங்க" தோனியிடம் ரசிகர் கோரிக்கை - தல சொன்ன பதில் என்ன?Twitter

ஐபிஎல் போட்டிகள் உலக அளவில் கிரிக்கெட் ரசிகர்களால் அதிகம் விரும்பப்படும் தொடர் ஆகும். ஒவ்வொரு அணியும் ஒரு இந்திய மாநிலத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாக உள்ளன.

2008 முதல் நடைபெற்றுவரும் ஐபிஎல் போட்டிகளில் பல அணிகள் கோப்பையை வென்றுள்ளன. குறிப்பாக மும்பை மற்றும் சென்னை அணிகள் தலா 5 முறை கோப்பையை வென்றுள்ளன.

கொல்கத்தா அணி 2 முறையும் ராஜஸ்தான், சன் ரைசஸ் ஹைத்ராபாத், குஜராத் டைடன்ஸ், டெக்கான் சார்ஜஸ் அணிகள் தலா 1 முறையும் கோப்பையை வென்றுள்ளனர்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் இதுவரை ஒருமுறை கூட கோப்பையை கைப்பற்றவில்லை.

இதில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 3 முறை இறுதிப்போட்டிவரை சென்று கோப்பையை நழுவவிட்டது. இந்தியாவின் முன்னணி பேட்ஸ்மேனான விராட் கோலி பங்கேற்கும் ஆர்.சி.பி அணி கோப்பையை வெல்லாததற்காக அதிகமாக கேலி செய்யப்படுவதுண்டு.

இந்த நிலையில் அந்த அணியின் ரசிகர் ஒருவர் தோனியிடம் எங்கள் அணிக்கு சப்போர்ட் செய்து ஒரு கோப்பையை வென்று தருமாறு கோரிக்கை வைக்க அதற்கு தல சொன்ன பதில் அனைவரையும் கவர்ந்துள்ளது.

"பெங்களூரு அணிக்கு கப் வாங்கி கொடுங்க" தோனியிடம் ரசிகர் கோரிக்கை - தல சொன்ன பதில் என்ன?
IPL 2023 Finals: "நிம்மதியா தூங்க முடியல” ஐபிஎல் தோல்விக்கு பிறகு மனமுடைந்த மோஹித் சர்மா!

அந்த ரசிகருக்கு பதிலளித்த தோனி, "பெங்களூரு மிகச்சிறந்த அணி. ஆனால், கிரிக்கெட்டில் அனைத்து நேரங்களிலும் நாம் திட்டமிட்டபடி நடக்காது. 10 ஐபிஎல் அணிகளும் மிகவும் வலுவாக உள்ளன. காயம் உள்ளிட்ட பல காரணங்களுக்காக சில வீரர்கள் விளையாட முடியாமல் போவதுதான் பின்னடைவுக்கு காரணமாக அமையும். இப்போதைக்கு நான் எனது அணியை பற்றி கவலைப்படுவதற்கே நிறைய உள்ளன. நான் மற்ற அணிகளை ஆதரிப்பதற்காக எனது அணியில் இருந்து வெளியேறினால், CSK ரசிகர்கள் என்ன நினைப்பார்கள்?" என பதிலளித்துள்ளார்.

"பெங்களூரு அணிக்கு கப் வாங்கி கொடுங்க" தோனியிடம் ரசிகர் கோரிக்கை - தல சொன்ன பதில் என்ன?
அடுத்த சீசனுக்கும் தோனி தான் சிஎஸ்கே கேப்டன்? சென்னை அணி குறித்த புதிய அப்டேட்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com