Virat Kohli: மிக பிரபலமான ஸ்போர்ட்ஸ் அணிகள் - டாப் 5யில் RCB; மற்ற அணிகள் என்னென்ன?

மிகவும் பாப்புலராக இருக்கும் டாப் 5 விளையாட்டு அணிகள் எவை என்ற இந்த பட்டியலில் 5வது இடத்தில் 948 மில்லியன் தொடர்புகளை கொண்டுள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. முதல் நான்கு இடங்களில் கால்பந்து அணிகள் உள்ளன.
Virat Kohli
Virat Kohliட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் மிகப் பிரபலமாக இருக்கும் டாப் 5 கணக்குகளில் ஒன்றாக இடம்பெற்றுள்ளது விராட் கோலியின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.

ஐபிஎல்லின் அதிக ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டுள்ள அணிகளுள் ஒன்று ராயல் சேலஞர்ஸ் பெங்களூரு. இதுவரை ஒரு முறைக் கூட ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை ஆர்சிபி.

ஆனால் ஒரே ஒரு பெயர், இந்த அணியை அனைவரும் விரும்பும் அணியாக நம் மனங்களில் நிலைநிறுத்தியிருக்கிறது.

அந்த பெயர், விராட் கோலி!

என்ன தான் “ஈ சாலா கப் நம்தே” என்றும், CSK won the Match but RCB won the Heart என்று கிண்டலடித்தாலும், இந்த அணியின் கோப்பைக் கனவை நம்மில் பலரும் சுமந்துக்கொண்டு தான் இருக்கிறோம்

அந்த வகையில், சமூக வலைதளப்பக்கமான இன்ஸ்டாகிராமில் மிகப் பிரபலமாக இருக்கும் விளையாட்டு அணி கணக்குகள் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது ஆர்சிபி.

மிகவும் பாப்புலராக இருக்கும் டாப் 5 விளையாட்டு அணிகள் எவை என்ற இந்த பட்டியலில் 5வது இடத்தில் 948 மில்லியன் தொடர்புகளை கொண்டுள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. முதல் நான்கு இடங்களில்

1.realmadrid - 2,09B

2.FCBarcelona - 1,78B

3.ManUtd - 1,41B

4.PSG_inside - 1,07B ஆகிய கால்பந்து அணிகள் உள்ளன.

இதன் மூலம், பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய அணி மற்றும் ஒரே கிரிக்கெட் அணியாகிறது ஆர்சிபி!

Virat Kohli
விராட் கோலி : சதங்களை துரத்தும் வீரர் - முறியடிக்கப்பட்ட சச்சின் சாதனைகள் என்ன?

டிபோர்ட்ஸ் அண்ட் ஃபினான்சஸ் என்ற சமூக ஊடக பகுப்பாய்வு நிறுவனம் நடத்திய தனிப்பட்ட ஆய்வில், ஆர்சிபி அணி, 948 மில்லியன் இண்ட்ராக்‌ஷன்களை பெற்றுள்ளது. இது ஒரு இந்திய விளையாட்டு அணிக்கு அதிக எண்ணிகையாகும்.

விராட் ஆர்சிபி அணிக்காக கடந்த 15 வருடங்களாக விளையாடி வருகிறார். ஒரு வீரர் ஒரே அணிக்காக ஐபிஎல்லில் விளையாடியது இதுவே அதிகபட்சம்.

விராட் கோலியும் இன்ஸ்டாகிராமில் 234 மில்லியன் பின்தொடர்பவர்களை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவும் ஆர்சிபி அணி பிரபலமாக இருக்க முக்கிய காரணமாகும்

ஆர்சிபி அணியின் மற்ற நட்சத்திர வீரர்களாக கிறிஸ் கெயில், ஏபி டிவில்லியர்ஸ், தற்போது மேக்ஸ்வெல் மற்றும் தினேஷ் கார்த்திக் உள்ளிட்டோர் உள்ளனர்.

இந்நிலையில், பெண்களுக்கான ஐபிஎல் அணிகளில், பெங்களூரு அணியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு சொந்தமாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Virat Kohli
”தோனி உலகக்கோப்பை வென்றுவிட்டால்?” ரசிகர்களின் வாயை அடைத்த அஷ்வின் - என்ன பேசினார்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com