இந்திய பௌலரான முகமது சிராஜ் முன்னாள் கேப்டன் விராட் கோலி அனைவருக்கும் இன்ஸ்பிரேஷனாக இருப்பதாக வாழ்த்திப் பேசியுள்ளது வைரலாகி வருகிறது.
முகமது சிராஜ் மற்றும் விராட் கோலி மைதானத்துக்கு உள்ளேயும் வெளியிலும் நட்புறவு பாராட்டி வருகின்றனர். கோலியை தனது அண்ணா என பல இடங்களில் சிராஜ் குறிப்பிட்டுள்ளார்.
சிராஜின் திறமையை வெளிக்காட்டும் விதமாக விராட் வாய்ப்புகள் வழங்கியுள்ளார். பல இடங்களில் அவருக்கு பக்க பலமாக இருந்துள்ளார்.
இந்த ஆண்டு ஐபிஎலில் நட்சத்திர பௌலராக திகழ்கிறார் சிராஜ். இந்த ஆண்டு 11 போட்டிகளில் 15 விக்கெட்களை எடுத்துள்ளார்.
மறுபக்கம் விராட் கோலி 11 போட்டிகளில் 420 ரன்கள் ஸ்கோர் செய்துள்ளார். இதில் 6 போட்டிகளில் அரை சதம் அடித்துள்ளார்.
விராட் குறித்து சிராஜ்,"விராட் அண்ணா அதிகபட்சமாக 11 மணிக்குள் படுக்க வந்துவிடுவார். அவர் அன்று 100 ரன்கள் எடுத்தாலும் டக் அவுட் ஆனாலும் அதே தினசரி சுழற்சியைத் தான் ஃபாலோ செய்வார். " எனப் பேசினார்.
மேலும், "என்னை ஜிம்மிலும் காலை உணவருந்தும் போதும் சந்திப்பார். அவருடை ஃபிட்னஸ் வேற லெவல். அவர் எவ்வளவோ சாதித்திருந்தாலும் ரிலாக்ஸாக இல்லை. இன்னும் சிறப்பாக விளையாட வேண்டுமென்ற பசியுடன் இருக்கிறார். அவர் தான் எங்களுக்கு இன்ஸ்பிரேஷன்" என சிராஜ் பேசியுள்ளார்.
சமீபத்தில் பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கு முன்னர் சிராஜின் தந்தை கொரோனாவால் மரணமடைந்தார். சிராஜ் தனது தந்தைக் குறித்தும் பேசியுள்ளார். அவரது தந்தை சிராஜின் முதல் டெஸ்ட் போட்டியின் போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust