கால்பந்து வீரர் க்றிஸ்டியானோ ரொனால்டோ மான்சஸ்டர் யுனிடட் க்ளப்பிலிருந்து வெளியேறியப் பிறகு அவரது பழைய தவறுக்காக 50,00,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து கால்பந்து கூட்டமைப்பு இந்த அபராதத்தை விதித்துள்ளது. அத்துடன் இவர் இரண்டு போட்டிகளில் விளையாடவும் தடை செய்து தண்டித்திருக்கிறது.
37 வயது போர்ச்சுகல் அணி வீரரான ரொனால்டோ கடந்த ஏப்ரல் மாதம் ரசிகர் ஒருவரின் கைப்பேசியைத் தட்டிவிட்டதனால் அவருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.
22 நவம்பர் 2022, செவ்வாயன்று ரொனால்டோ மான்செஸ்டர் யுனைடட் க்ளபிலிருந்து நீங்குவதாக அறிவிப்பு வெளியானது.
கடந்த ஏப்ரல் மாதம் யுனைடட் மற்றும் எவர்டன் க்ளப்களுக்கு இடையில் போட்டி நடந்தது. இதில் யுனைடட் தோல்வியைத் தழுவியதனால் ரொனால்டோ மோசமான மனநிலையுடன் மைதானத்திலிருந்து திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது எவர்டன் ரசிகரான டீனேஜர் ரொனால்டோவுடன் செல்ஃபி எடுக்க முயற்சி செய்தார். இதனால் கடுப்பான ரொனால்டோ அவரது மொபைலை தட்டிவிட்டார்.
இந்த சம்பவத்தால் அந்த ரசிகர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். 6 மாத காலம் கழித்து இப்போது இதற்காக ரொனால்டோவுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
ரொனால்டோ 50,000 யூரோ அபராதம் வழங்க வேண்டும். அத்துடன் அடுத்த இரண்டு போட்டிகளில் விளையாடக் கூடாது என்று இங்கிலாந்து கால்பந்து அமைப்புக் கூறியுள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கின்றனர்.
மான்சஸ்டர் க்ளபிலிருந்து வெளியேறியிருக்கும் ரொனால்டோவை சேர்த்துக்கொள்ள மற்ற க்ளப்கள் போட்டியிட்டு வருகின்றன.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust