ரஷ்யா: உடையில் Z குறியீடு; ரஷ்ய போட்டியாளருக்கு ஒரு ஆண்டு தடை!

உலகக்கோப்பை போட்டியின் பதக்கம் அளிக்கும் தறுவாயில் Z குறியீடு பொறிக்கப்பட்ட உடையுடன் கலந்து கொண்டார் இவாண். இதனால் இவர் வென்ற வெண்கல பதக்கத்தையும் திருப்பி அளிக்க வேண்டும் என்று சர்வதேச ஜிம்மாஸ்டிக் கூட்டமைப்பு கூறியுள்ளது.
இவாண் குலியாக்
இவாண் குலியாக்Twitter
Published on


இவாண் குலியாக் எனும் ரஷ்ய ஜும்மாஸ்டிக் வீரர் அணிந்திருந்த உடையில் ரஷ்யா - உக்ரைன் போரில் ரஷ்ய படையால் பயன்படுத்தப்படும் Z குறியீடு இருந்தது. இது ரஷ்யாவின் உக்ரைன் ஆக்கிரமிப்பை ஆதரிப்பது போல வெளிப்படுவதனால் அவருக்கு ஒரு ஆண்டு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இந்த Z குறியீடு ரஷ்ய டாங்கிகள் ராணுவ வாகனங்கள் போன்றவற்றில் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது. ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை ஆதரிப்பவர்கள் இந்த அடையாளத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.

உலகக்கோப்பை போட்டியின் பதக்கம் அளிக்கும் தறுவாயில் அந்த குறியீடு பொறிக்கப்பட்ட உடையுடன் கலந்து கொண்டார் இவாண். இதனால் இவர் வென்ற வெண்கல பதக்கத்தையும் திருப்பி அளிக்க வேண்டும் என்று சர்வதேச ஜிம்மாஸ்டிக் கூட்டமைப்பு கூறியுள்ளது.

இவாண் குலியாக்
புடின், செளதி அரசர் முதல் கிம் ஜாங் உன் வரை : உலகின் ரகசிய பணக்காரார்கள் - அட்டகாச தகவல்

ஆனால் தனக்கு பதக்கமாக்கும் விழாவில் கலந்துகொள்ள மற்றொரு வாய்ப்பு கிடைத்தாலும் அதே Z பொறிக்கப்பட்ட ஆடையில் தான் கலந்து கொள்வேன் என்று கூறியிருக்கிறார் இவாண். அவர் கூறியதாவது, “நான் எங்கள் நாட்டு இராணுவத்தில் இந்த Z குறியீட்டைப் பார்த்தேன். இதன் அர்த்தத்தைத் தெரிந்துகொண்டேன். இது வெற்றி மற்றும் அமைதியைக் குறிக்கிறது. நான் என்னுடைய நிலைப்பாட்டை வெளிப்படுத்துகிறேன். ஒரு விளையாட்டு வீரனாக வெற்றிக்காகப் போட்டியிடுகிறேன் அமைதிக்காக விளையாடுகிறேன்” என்றார்.

இவாண் குலியாக்
Putin: "ரஷ்ய அதிபர் புடின் படுத்தபடுக்கையாக உள்ளார்" - உளவாளி சொல்லும் பகீர் தகவல்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com