
வாழ்ந்து கெட்ட குடும்பங்கள் பலவற்றை ஊர்களில் கண்டிருப்போம். வாழ்க்கையில் அதிக செல்வாக்கினைப் பெற்ற பலர் கண்முன்னே சரியும் கதைகளைக் கேட்டிருப்போம். அதில் சில கதைகள் பெரும் அதிர்ச்சிக்குரியதாக இருக்கும். அப்படி சில தகவல்கள் தான் இப்போது கேட்போரைத் திடுக்கிட வைக்கின்றன.
இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் சுராஜ் ரன்தீவ், சிந்தக ஜயசிங்கே ஆகியோர் தற்போது ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் பேருந்து ஓட்டுநராக இருக்கின்றனர். அவர்களுடன் அதே நகரில் ஜிம்பாப்வே வீரர் ஒருவரும் அந்த பணியில் ஈடுபட்டிருக்கிறார்.
நட்சத்திர வீரர்களின் இந்த நிலை கேட்பவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இவர்கள் மூவருமே ட்ரான்ஸ் தேவ் என்ற நிறுவனத்தில் பணியாற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனத்தில் பணியாற்றும் 1200 பணியாளர்களில் ஒருவராகவே இவர்களும் இருக்கின்றனர்.
இலங்கை சுழற்பந்து வீச்சாளரான ரன்தீவ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரராகவும் இருந்தவர். இரண்டு சீசன்கள் சென்னை அணிக்காக விளையாடி 8 போட்டிகளில் 6 விக்கெட்களை வீழ்த்தியிருக்கிறார்.
36 வயதாகும் ரன்தீவ் இலங்கைக்காக 12 டெஸ்ட் போட்டிகளில் 43 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். 31 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்று 36 விக்கெட்களையும் 7 டி20 போட்டிகளில் 7 விக்கெட்களையும் வீழ்த்தியிருக்கிறார்.
2011 உலகக் கோப்பை அணியிலும் இவர் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பஸ் ஓட்டுவதுடன் டாண்டினாங் என்ற உள்ளூர் கிரிக்கெட் கிளப்பில் மாவட்ட அளவிலான போட்டிகளில் விளையாடி வருகிறார் ரன்தீவ். 2020-21ல் பார்டர் - கவாஸ்கர் தொடருக்காக ஆஸ்திரேலிய அணியில் நெட் பவுளராக இருக்க இவருக்கு அழைப்பு வந்தது குறிபிடத்தக்கது.
இலங்கை ஆல் - ரவுண்டரான சிந்தக ஜயசிங்கேவும் ஆஸ்திரேலியாவில் பஸ் ஓட்டி வருகிறார். 42 வயதாவும் இவர், 5 டி20 போட்டிகளை இலங்கைக்காக விளையாடி இருக்கிறார்.
2009ம் ஆண்டு முதல் இலங்கை அணிக்காக விளையாடிய இவர் 2010 டி20 உலகக் கோப்பை அணியிலும் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வயங்காவும் ஒரு ஆல்ரவுண்டர். 2005ம் ஆண்டில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இவர் அறிமுகமானார். முதல் போட்டியிலேயே சவுரவ் கங்குலியின் விக்கெட்டை வீழ்த்தி அசத்திய இவர் இப்போது வாழ்வாதாரத்துக்காக பஸ் ஓட்டும் நிலையில் இருக்கிறார். இவர் ஜிம்பாப்வே அணிக்காக பல போட்டிகளை விளையாடியிருக்கிறார்.
காலம் யாரையும் எந்த நிலைமைக்கும் தள்ளிவிடக் கூடியது என்பதற்கு இவர்கள் தான் உதாரணம். ஆனாலும் மீண்டும் தங்களால் கிரிக்கெட் விளையாட முடியும் என்ற நம்பிக்கை இவர்களுக்கு இருக்கிறது. தொடர் பயிற்சிகளிலும் ஈடுபடுகின்றனர். ஆஸ்திரேலியாவின் பிக் பேஷ் லீக் இவர்களின் இலக்கு.
இந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் எப்போதிலிருந்து வெளிநாட்டுக்கு சென்று வேலை செய்கின்றனர் என்பது தெரியவில்லை. ரன்தீவ் மற்றும் சிந்தக ஜயசிங்கே திரும்பி தாய் நாட்டுக்கு வரும் நிலையில் இலங்கை இப்போது இல்லை என்பதை மட்டும் அழுத்தமாக சொல்ல முடியும்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust