விராட் கோலி உபயோகித்த High Altitude Mask - பயன்கள் என்ன? விலை என்ன?

பவுண்டரி, சிக்ஸர்களை விட அதிக ரன்களை ஓட்டங்களில் சேகரித்து விளையாடுபவர் விராட். இதனால் அவருக்கு அதிக ஸ்டாமினா தேவைப்படும். தற்போது அவர் பயன்படுத்தும் இந்தப் ஹை ஆல்டிட்யூட் மாஸ்க்கும் அவரது ஸ்டாமினாவை அதிகரிக்கவே பயன்படுத்தப்படுகிறது.
விராட் கோலி உபயோகித்த High Altitude Mask - பயன்கள் என்ன? விலை என்ன?
விராட் கோலி உபயோகித்த High Altitude Mask - பயன்கள் என்ன? விலை என்ன?Twitter
Published on

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி பயிற்சியின் போது High Alititude Mask என்ற முகக்கவசத்தை உபயோகித்து வருகிறார். அது என்ன மாஸ்க்? அதிலென்ன சிறப்புகள் இருக்கின்றன?

இந்திய கிரிக்கெட் வீரர்களில் விராட் கோலி ஃபிட்னஸ்காக ராசிகர்களால் கொண்டாடப்படுபவர். அவரது ஜிம் வீடியோக்கள் எப்போதும் இன்ஸ்டாகிராமில் ட்ரெண்டாகும். அவரது பேட்டிங் ஸ்டைலும் அதிக ஆற்றலை வெளிப்படுத்தக் கூடியது.

பவுண்டரி, சிக்ஸர்களை விட அதிக ரன்களை ஓட்டங்களில் சேகரித்து விளையாடுபவர் விராட். இதனால் அவருக்கு அதிக ஸ்டாமினா தேவைப்படும். தற்போது அவர் பயன்படுத்தும் இந்தப் ஹை ஆல்டிட்யூட் மாஸ்க்கும் அவரது ஸ்டாமினாவை அதிகரிக்கவே பயன்படுத்தப்படுகிறது.

High Altitude Mask எப்படி வேலை செய்கிறது?

முதலில் High Altitude Mask என்பது என்ன என தெரிந்து கொள்வோம். மலை உச்சிகளை High Altitude என்பர்.

அந்த இடங்களில் ஆக்ஸிஜன் அளவு மிகக் குறைவாக இருக்கும்.

இதனால் அங்கு கடினமான வேலைகளை செய்யக் கூடாது எனக் கூறுவர்.

இந்த மாஸ்க் ஆக்ஸிஜன் அளவை கட்டுப்படுத்தி செயற்கையாக மலை உச்சியில் இருப்பது போல சுவாச மண்டலத்தை உணரவைக்கும்.

இப்படி ஆக்ஸிஜன் குறைந்த சூழலில் வொர்க் அவுட் செய்வது, நுரையீரல் மற்றும் சுவாசத் தசைகளை வலுப்படுத்தும். இதனால் சாதாரணமாக அதிக ஆக்ஸிஜன் கிடைக்கும் சூழலில் விளையாடும் போது சுவாச மாண்டலம் சிறப்பாக பணியாற்றுவதால் அதிக ஸ்டாமினாவுடன் இருக்க முடியும்.

விராட் கோலி உபயோகித்த High Altitude Mask - பயன்கள் என்ன? விலை என்ன?
விராட் கோலி :"90 நிமிடங்கள் நிற்காமல் ஆடினேன்" - அதிரடி ஆட்டத்தின் ரகசியம் பகிர்ந்த நாயகன்

மாரத்தான் போன்ற வெகு தொலைவு ஓட்டப்பந்தயத்தில் ஈடுபடும் வீரர்கள், டென்னிஸ் வீரர்கள் இதனை பொதுவாக பயன்படுத்துவர். இந்த மாஸ்க் 6,500 ரூபாயிலிருந்து ஆன்லைனில் கிடைக்கிறது.

இதற்கு முன்னர் விராட் கோலி அல்க்லைன் தண்ணீர் பருகிய புகைப்படம் ட்ரெண்ட் ஆனது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆசியக் கோப்பை போட்டியில் மீண்டும் பழைய ஃபார்முக்கு திரும்பி வந்துக்கொண்டிருக்கிறார் விராட். அவரது விளையாட்டை அனைவருமே எதிர்பார்த்து வருகின்றனர். இன்று மாலை 7:30 மணிக்கு இந்தியா vs பாகிஸ்தான் போட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.

விராட் கோலி உபயோகித்த High Altitude Mask - பயன்கள் என்ன? விலை என்ன?
அடுத்த சீசனுக்கும் தோனி தான் சிஎஸ்கே கேப்டன்? சென்னை அணி குறித்த புதிய அப்டேட்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com