IPL 2023: ஐபிஎல்லில் புதிய மைல்கல்லை எட்டிய Virat Kohli, ருதுராஜ் - என்ன சாதனை?

கடந்த ஆண்டு குஜராத், மற்றும் லக்னோ என இரு அணிகள் அறிமுகமானது. கடந்த சீசன் ஐபிஎல்லில் குஜராத்துக்கு எதிராக மட்டுமே கோலி அரைசதம் அடித்திருந்தார்.
Virat Kohli: ஐபிஎல்லில் புதிய மைல்கல்லை எட்டிய கோலி - ருதுராஜ் - என்ன சாதனை?
Virat Kohli: ஐபிஎல்லில் புதிய மைல்கல்லை எட்டிய கோலி - ருதுராஜ் - என்ன சாதனை?Twitter
Published on

ஐபிஎல் விளையாடும் அனைத்து அணிகளுக்கு எதிராகவும் அரைசதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற அரிய சாதனையை படைத்திருக்கிறார் விராட் கோலி.

இந்த சாதனையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ருதுராஜ் கெய்க்வாடுடன் சம செய்திருக்கிறார் கோலி.

Virat Kohli: ஐபிஎல்லில் புதிய மைல்கல்லை எட்டிய கோலி - ருதுராஜ் - என்ன சாதனை?
தோனி: சேப்பாக்கில் CSKவுக்கு முதல் வெற்றி- வெளுத்துக்கட்டிய ருதுராஜ்; தல கொடுத்த வார்னிங்!

நேற்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் முதலில் பேட் செய்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.

தொடக்க வீரராக களமிறங்கிய விராட் கோலி 61 ரன்கள் எடுத்தார்.

இதன் மூலம் அனைத்து ஐபிஎல் அணிகளுக்கும் எதிராக (தங்களுடைய அணி அல்லாது) அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்திருக்கிறார் கோலி.

சொல்லப்போனால், இந்த சாதனையை படைத்த இரண்டாவது வீரர் ஆகியுள்ளார். கோலிக்கு முன் இந்த அரிய சாதனையை படைத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ருதுராஜ் கெய்க்வாட்.

கடந்த ஆண்டு லக்னோ அணிக்கு எதிராக விளையாடிய போட்டியில் அரைசதம் அடித்த போது இந்த சாதனையை படைத்தார் ருதுராஜ்.

2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடரில் மொத்தம் 8 அணிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், ராஜஸ்தான், டெல்லி, பஞ்சாப், மும்பை, கொல்கத்தா அணிகள் விளையாடின.

அதன் பிறகு 2010ஆம் ஆண்டு, பூனே, கேரளா என இரு அணிகள் அறிமுகமாயின. 2011 ஆம் ஆண்டு பிசிசிஐயின் விதிமுறைகளை மீறிய காரணத்திற்காக கேரளா அணி கலைக்கப்பட்டது. 2013ல் பூனே அணியும் விலகியது.

மீண்டும் அதே 8 அணிகள் மோதிய நிலையில், சூதாட்ட பிரச்னையில் சிக்கி, ராஜ்ஸ்தான் மற்றும் சென்னை அணிகள் இரண்டு ஆண்டுகள் தடையை சந்தித்தது.

Virat Kohli: ஐபிஎல்லில் புதிய மைல்கல்லை எட்டிய கோலி - ருதுராஜ் - என்ன சாதனை?
IPL 2023: ரிங்கு சிங் - தரையில் தொடங்கிய பயணம் விண்ணை எட்டிய கதை! யார் இவர் ?

அப்போது குஜராத், பூனே என இரு அணிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. ராஜஸ்தான், சென்னை அணி வீரர்களும், மற்ற அணியில் ஏலத்தில் விடப்பட்ட வீரர்களும் அதில் விளையாடினர்.

இரண்டு ஆண்டுகள் தடைக்கு பின், மீண்டும் சென்னை ராஜஸ்தான் அணிகள் விளையாட தொடங்கின. புதிய இரு அணிகள் கலைக்கப்பட்டன.

கடந்த ஆண்டு குஜராத், மற்றும் லக்னோ என இரு அணிகள் அறிமுகமானது. கடந்த சீசன் ஐபிஎல்லில் குஜராத்துக்கு எதிராக மட்டுமே கோலி அரைசதம் அடித்திருந்தார். நேற்றைய போட்டிக்கு பின், ஐ பி எல்லில் அனைத்து அணிகளுக்கு எதிராகவும் அரைசதம் கடந்த வீரர் என்ற சாதனையை படைத்திருக்கிறார்.

Virat Kohli: ஐபிஎல்லில் புதிய மைல்கல்லை எட்டிய கோலி - ருதுராஜ் - என்ன சாதனை?
RCB vs LSG : பூரன், பதோனி அதிரடி; கடைசி பந்து வரை இழுத்த போட்டி - லக்னோ திக் திக் வெற்றி!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com