Virat Kohli, Rohit Sharma T20 உலக கோப்பையில் விளையாடுவார்களா?

இறுதியாக கடந்த டி20 உலகக் கோப்பை போட்டியில் தான் இருவரும் பங்கேற்றனர். நடந்துகொண்டிருக்கும் இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான டி20 தொடரிலும் பங்கேற்கவில்லை. வருகின்ற டி20 உலகக் கோப்பையில் ரோஹித்தும் விராட்டும் பங்கேற்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Virat Kohli, Rohit Sharma T20 உலக கோப்பையில் விளையாடுவார்களா?
Virat Kohli, Rohit Sharma T20 உலக கோப்பையில் விளையாடுவார்களா?Twitter

நடந்து முடிந்த உலகக் கோப்பைத் தொடரில் இந்திய கிரிக்கெட் அணி சிறப்பாக செயல்பட்டிருந்தாலும் கோப்பையை வெல்ல முடியாதது ஏமாற்றமாக அமைந்தது.

2011 உலகக் கோப்பையில் வெற்றி பெற்று சச்சின் கௌரவிக்கப்பட்டதுபோல விராட் கோலி கௌரவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ரோஹித் சர்மாவும் அடுத்த உலகக் கோப்பையில் பங்கேற்பாரா என்ற சந்தேகம் நிலவுகிறது. உலக கோப்பைத் தொடரை முன்னிட்டு டி20 போட்டிகளில் விளையாடுவதை விராட்டும் ரோஹித்தும் தவிர்த்து வந்தனர்.

இறுதியாக கடந்த டி20 உலகக் கோப்பை போட்டியில் தான் இருவரும் பங்கேற்றனர். நடந்துகொண்டிருக்கும் இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான டி20 தொடரிலும் பங்கேற்கவில்லை. வருகின்ற டி20 உலகக் கோப்பையில் ரோஹித்தும் விராட்டும் பங்கேற்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சமீபத்தில் பிசிசிஐ அடுத்த 4 ஆண்டுகளை கருத்தில் கொண்டு அணியை தேர்வு செய்ததாக அறிவித்திருந்தது. இதனால் இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்புகள் கொடுக்கப்படும்.

இதனால் வருகின்ற ஏப்ரல் மாதம் நடக்கவிருக்கும் டி20 உலகக் கோப்பைத் தொடரில் விராட், ரோஹித் சர்மா பங்கேற்காமல் இருக்க வாய்ப்புகள் அதிகம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், உலகக் கோப்பைத் தொடரில் இரண்டு சீனியர் வீரர்களும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியிருப்பதனால் டி20 உலகக் கோப்பையிலும் அவர்களது தேவை நீளலாம்.

Virat Kohli, Rohit Sharma T20 உலக கோப்பையில் விளையாடுவார்களா?
இந்தியா: ஹாட் ட்ரிக் டக் அவுட் ஆன சூர்யகுமார் யாதவ் - வைரலாகும் ரோஹித்தின் பழைய ட்வீட்

ரோஹித், விராட் குறித்த கேள்விகளுக்கு விளக்கம் அளித்துள்ளது பிசிசிஐ.

பிசிசிஐ தரப்பில், டி20 உலகக் கோப்பையில் விளையாடுவது குறித்து ரோஹித்தும் விராட்டும் சுயமாக முடிவெடுக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Virat Kohli, Rohit Sharma T20 உலக கோப்பையில் விளையாடுவார்களா?
World Cup: தோல்விக்கு பிறகு வீரர்களை தேற்றிய மோடி - விராட், ரோஹித்திடம் கூறியது என்ன?

மேலும் ஒருநாள் போட்டிகளுக்கு கே.எல்.ராகுலை கேப்டனாக அறிவிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்திய கிரிக்கெட் அணிகளில் நிலையற்ற தன்மை இருந்துவந்தாலும் விரைவில் புதுப்பொலிவுடன் இந்திய வீரர்கள் களத்துக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கலாம்.

Virat Kohli, Rohit Sharma T20 உலக கோப்பையில் விளையாடுவார்களா?
ஷாருக் கான் முதல் விஜய் சேதுபதி வரை: இந்தியாவின் பிரபலமான டாப் 10 நடிகர்கள் - IMDB லிஸ்ட்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com