World Cup: "இது என் கனவு இன்னிங்ஸ்" - சதம் விளாசிய விராட் பேசியது என்ன?

இந்த நாள் விராட் ரசிகர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியானதாக அமைந்துள்ளது போலவே விராட்டும் மகிழ்ச்சியாக பேட்டி கொடுத்துள்ளார்.
World Cup: "இது என் கனவு இன்னிங்ஸ்" - சதம் விளாசிய விராட் பேசியது என்ன?
World Cup: "இது என் கனவு இன்னிங்ஸ்" - சதம் விளாசிய விராட் பேசியது என்ன?Twitter

15-11-2023 கிரிக்கெட் வரலாற்றில் குறித்துக்கொள்ள வேண்டிய நாளாக மாறியிருக்கிறது. விராட் கோலி தனது 50வது சதத்தை நிறைவு செய்து ஒருநாள் கிரிக்கெட் (ODI) வரலாற்றில் அதிக சதம் அடித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இந்தியா, நியுசிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டி நடைபெற்று வருகிறது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 2 விக்கெட் இழப்புக்கு 397 ரன்கள் குவித்துள்ளது.

இந்த போட்டியில் சச்சினின் 49 ஒரு நாள் சதங்களை விராட் முறியடித்துவிட்டதால் சச்சின் விராட்டுக்கு மகுடம் சூட்டுவது போன்ற படங்கள் ட்விட்டரில் பகிரப்பட்டு வருகின்றன.

சச்சின் 49 சதங்களை அடிக்க 451 போட்டிகள் விளையாடினார். ஆனால் விராட் 291 போட்டிகளில் 50 சதங்கள் விளாசியுள்ளார்.

மறுபுறம் ஒரே உலகக்கோப்பைத் தொடரில் 700க்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்த முதல் பேட்ஸ்மேன் என்ற சாதனையையும் விராட் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நாள் விராட் ரசிகர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியானதாக அமைந்துள்ளது போலவே விராட்டும் மகிழ்ச்சியாக பேட்டி கொடுத்துள்ளார்.

World Cup: "இது என் கனவு இன்னிங்ஸ்" - சதம் விளாசிய விராட் பேசியது என்ன?
Kohli: பிறந்தநாளில் சதம்! சச்சினின் சாதனையை சமன் செய்த கோலி; புதிய சாதனை படைத்த ஜடேஜா

போட்டிக்கு பிறகு பேசிய விராட், "நான் எப்போது என் அணியை வெல்ல வைக்கும் நோக்கத்தோடுதான் விளையாடுகிறேன். அணி என்னை அதிக ரன்கள் குவிக்க சொல்லும் போது வேகமாக ஓடுகிறேன். தேவையான நேரத்தில் பௌண்டரி, சிக்ஸர் அடிக்கவும் தயாராக இருக்கிறேன்." எனப் பேசினார்.

World Cup: "இது என் கனவு இன்னிங்ஸ்" - சதம் விளாசிய விராட் பேசியது என்ன?
”விராட் கோலிக்காக இதை செய்யவேண்டும்” உருக்கமான கோரிக்கை வைத்த சேவாக் - என்ன பேசினார்?

மேலும் அவரது சாதனைக் குறித்து, "நான் உலகிலேயே அதிகம் நேசிக்கும் என் மனைவி இங்கு இருக்கிறார். என்னுடைய ஹீரோ பார்த்துக்கொண்டிருக்கிறார். இவ்வளவு ரசிகர்கள் முன்னிலையில் இப்படி ஒரு போட்டியில் விளையாட வேண்டும் என்பது எல்லா கிரிக்கெட்டர்களுக்கும் கனவாக இருக்கும்." என்றும் கூறியிருக்கிறார்.

World Cup: "இது என் கனவு இன்னிங்ஸ்" - சதம் விளாசிய விராட் பேசியது என்ன?
விராட் கோலி டு ரோஹித் சர்மா: உலகக்கோப்பையில் அதிக சதம் விளாசிய வீரர்கள் யார் யார்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com