தமிழ்நாட்டில் இதுவரை மூடப்பட்ட 1500 மதுபான கடைகள் - டாஸ்மாக் வருவாய் பாதிக்கப்பட்டதா?

அதிமுக ஆட்சியில் 1000 மதுபான கடைகள் மூடப்பட்டும் தமிழக அரசின் மது வருவாய் பாதிக்கப்படவே இல்லை, அதாவது குறையவே இல்லை, இன்னும் சொல்லபோனால் டாஸ்மாக் வருமானம் அதிகரிக்க தான் செய்தது.
தமிழ்நாட்டில் இதுவரை மூடப்பட்ட 1500 மதுபான கடைகள் - டாஸ்மாக் வருவாய் பாதிக்கப்பட்டதா?
தமிழ்நாட்டில் இதுவரை மூடப்பட்ட 1500 மதுபான கடைகள் - டாஸ்மாக் வருவாய் பாதிக்கப்பட்டதா?Twitter
Published on

தமிழகத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் ( Tamil Nadu State Marketing Corporation Limited ) மதுபான கடைகளில் 500 கடைகள் இன்று முதல் மூடப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

எதனடிப்படையில் இந்த கடைகள் மூடப்படுகிறது? திமுக ஆட்சியில் தான் முதன்முதலில் மதுபான கடைகள் மூடப்படுவதற்காக நடிவடிக்கை மேற்கொள்ளப்பட்டதா? என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெற்ற தமிழ்நாட்டு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரில் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி டாஸ்மாக் தொடர்பாக அறிவிப்புகளை வெளியிட்டார்.

"தமிழ்நாட்டில் செயல்பட்டுவரும் 5,329 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் கண்டறியப்பட்டு மூடப்படும்" என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, இன்று முதல் தமிழகத்தில் செயல்பட்டு வந்த 500 டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மண்டலத்தில் -138

கோவை மண்டலத்தில் -78

மதுரை மண்டலத்தில் -125

சேலம் மண்டலத்தில் -59

திருச்சி மண்டலத்தில்-100 டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளன.

எதனடிப்படையில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன?

  • குறைந்த வருவாய் உள்ள மதுபானக்கடைகள்

  • வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிலையங்களுக்கு அருகே உள்ள மதுபானக் கடைகள்

  • நீண்ட நாட்களாக மக்கள் எதிர்ப்பு தெரிவித்துவரும் மதுபானக் கடைகள்

  • மூடக்கோரி நீதிமன்றத்தில் வழக்கை சந்தித்து வரும் மதுபானக் கடைகள்

  • கட்டிடத்தின் உரிமையாளர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் மதுபானக் கடைகள்

ஆகியவற்றின் அடிப்படையில் இந்த மதுபான கடைகள் மூடப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

அதிமுக - திமுக ஆட்சியில் நடவடிக்கை

தமிழகத்தில் தற்போது தான் முதன்முறையாக மதுபான கடைகள் மூடப்படுகிறதா?

இல்லை, அதிமுக ஆட்சியில் 1000 மதுக் கடைகள் மூடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி நீண்ட காலமாக போராடி வருகின்றனர்.

2015ஆம் ஆண்டில் இந்த கோரிக்கை தீவிரமடைந்தது. கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே உள்ள உண்ணாமலைக்கடையில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி அங்கிருந்த செல்போன் டவரில் ஏறி சசி பெருமாள் என்பவர் போராட்டத்தில் ஈடுபட்டார்.

பல மணி நேரமாக செல்போன் டவரில் இருந்த அவர், ரத்த வாந்தி எடுத்து அங்கேயே உயிரிழந்தார். டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர்.

இதையடுத்து 2016ஆம் சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தில் திமுக, அதிமுக இரண்டுமே மதுவிலக்கு பற்றி பேசின.

தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதாக திமுக அறிவித்தது. அதிமுகவும் தேர்தல் அறிக்கையில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று அறிவித்திருந்தது.

தேர்தலில் வெற்றிப் பெற்ற ஜெயலலிதா 2016 ஜூன் மாதத்தில் 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு உத்தரவிட்டார். ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து முதலமைச்சராக பதவியேற்ற எடப்பாடி பழனிசாமி 2017ஆம் ஆண்டு பிப்ரவரியில் மேலும் 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு உத்தரவிட்டார்.

தமிழ்நாட்டில் இதுவரை மூடப்பட்ட 1500 மதுபான கடைகள் - டாஸ்மாக் வருவாய் பாதிக்கப்பட்டதா?
அதிமுக உடன் கூட்டணி வைத்தால் பதவியை ராஜினாமா செய்வேன் - அண்ணாமலை ஆவேசம்

கடைகள் குறைந்தால் மது பயன்பாடு குறையுமா?

அதிமுக ஆட்சியில் 1000 மதுபான கடைகள் மூடப்பட்டும் தமிழக அரசின் மது வருவாய் பாதிக்கப்படவே இல்லை, அதாவது குறையவே இல்லை, இன்னும் சொல்லபோனால் டாஸ்மாக் வருமானம் அதிகரிக்க தான் செய்தது.

டாஸ்மாக் மதுபான கடைகளை முழுதாக மூடாமல் எண்ணிக்கையை மட்டும் குறைப்பதால் பலன் இல்லை என்று பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கூறுகிறார்.

ஏற்கனவே அதிமுக ஆட்சியில் இப்படிதான் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை குறைத்தார்கள். ஆனால், விற்பனையும் வருவாயும் குறையவில்லையே, ஏறிக்கொண்டே தானே இருந்தது. தற்போதும் அதே நிலைதான். கடைகளை மூடினாலும், தனியார் பார்களுக்கு அதிகளவில் அனுமதிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மது அனைவருக்கும் கிடைப்பதற்கு என்ன செய்ய வேண்டுமோ அது செய்யப்படுகிறது" என்றார்.

தமிழ்நாட்டில் இதுவரை மூடப்பட்ட 1500 மதுபான கடைகள் - டாஸ்மாக் வருவாய் பாதிக்கப்பட்டதா?
Senthil Balaji: 1996ல் திமுக தொண்டர், இன்று 3 துறைகளுக்கு அமைச்சர்- விறுவிறு அரசியல் பயணம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com