புடவை அணிந்துகொண்டு ஜிம்மில் கெத்தாக ஒர்க் அவுட் செய்யும் 56 வயது பெண் | Viral Video

52 வயதில் அவருக்கு மூட்டு வலி ஏற்பட்டதாகவும், அதற்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொள்ள பரிந்துரைத்ததாகவும் கூறினார். ஆனால் அவர்கள் அதற்கு தயாராக இருக்கவில்லை.
புடவை அணிந்துகொண்டு ஜிம்மில் கெத்தாக ஒர்க் அவுட் செய்யும் 56 வயது பெண்
புடவை அணிந்துகொண்டு ஜிம்மில் கெத்தாக ஒர்க் அவுட் செய்யும் 56 வயது பெண்Instagram
Published on

புடவை அணிந்துகொண்டு ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் 56 வயது பெண்ணின் வீடியோ இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.

பொதுவாகவே 50 வயதை தொட்டவுடன், ஆண்களும் சரி பெண்களும் சரி, அவரவர் உடல் ஆரோக்கியத்தின் மீது கூடுதல் கவனம் செலுத்த தொடங்குவர். இதை ஒரு விதத்தில் நாம் இளமையாக இருக்கவேண்டும் என்ற ஆசையின் வெளிப்பாடாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

உணவு பழக்கங்களில் மாற்றங்கள், யோகாசனம், உடற்பயிர்சிகளை செய்யத் தொடங்குவோம். இங்கும் சென்னையை சேர்ந்த ஒரு பெண், தனது 56வது வயதில் ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்கிறார். இவர் தனது மருமகள் உடன் சேர்ந்து ஜிம்மிற்கு செல்கிறார்.

Humans of Madras and Madras Barbell ஆகிய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிரப்பட்ட அந்த பெண்ணின் வீடியோ பலரையும் ஊக்குவித்து வருகிறது. புடவை அணிந்துக்கொண்டு ஜிம்மில் பவர் லிஃப்டிங் மற்றும் புஷ் அப் போன்ற உடற்பயிற்சிகளை சாதாரணமாக செய்கிறார்.

பெயர் குறிப்பிடப்படாத அந்த பெண் அவரது கதையை பகிர்ந்திருந்தார். 52 வயதில் அவருக்கு மூட்டு வலி ஏற்பட்டதாகவும், அதற்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொள்ள பரிந்துரைத்ததாகவும் கூறினார். ஆனால் அவர்கள் அதற்கு தயாராக இருக்கவில்லை.

புடவை அணிந்துகொண்டு ஜிம்மில் கெத்தாக ஒர்க் அவுட் செய்யும் 56 வயது பெண்
மகன் - மருமகளுக்கு குழந்தை பெற்றுக் கொடுத்த 56 வயது தாய் : எங்கே?

அறுவை சிகிச்சை செய்துகொள்ளாமல், வலியிலிருந்து விடுபட என்ன செய்யலாம் என்று ஆராய்ந்து உடற்பயிற்சி மேற்கொள்ள முடிவெடுத்துள்ளார் அந்த பெண். மெட்ராஸ் பார்பெல் என்ற பெயரில் அவரது மகன் ஜிம் ஒன்றை நடத்தி வருகிறார். முதலில் குறைவான கனம் உள்ள உடற்பயிற்சிகள், வாக்கிங் போன்றவற்றை பின்பற்றினார். பின்னர் படிப்படியாக அவரது உடற்பயிற்சியின் தீவிரம் அதிகரிக்கப்பட்டது.

“நான் ஏற்றுக்கொண்ட முயற்சிகளுக்கான பலன் எனக்கு உடனடியாக கிடைக்கவில்லை. ஆனால் என் மூட்டு வலி கொஞ்சம் கொஞ்சமாக குறைவதை நான் கவனித்தேன். வலி முழுவதுமாக குறைய எனக்கு ஐந்து மாதங்கள் ஆனது. ” என்றார்.

தற்போது தன் மருமகளுடன் சேர்ந்து அவரது மகனின் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து வருகிறார். இவரை பார்த்து பலரும், தங்களுக்கு இது ஊக்கமளிக்கிறது எனவும்,

வலி மற்றும் தடைகள் நம் முன் தோன்றும்போது அதை பெரிது படுத்தாமல், எப்படி எதிர்கொண்டு மீண்டு வரவேண்டும் என, இந்த பயனம் எனக்கு உணர்த்தியது என்றார். “முயற்சி என்ற ஒன்று இருந்தால், நீங்கள் அணியும் ஆடைக் கூட உங்களை தடுக்காது” என்றார்.

புடவை அணிந்துகொண்டு ஜிம்மில் கெத்தாக ஒர்க் அவுட் செய்யும் 56 வயது பெண்
Super Dad : மகளை கவனித்து கொள்ள ஐடி வேலையை விட்ட அப்பா - ஓர் நெகிழ்ச்சிக் கதை!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com