சென்னை, திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா மையத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் மீது அங்கு படிக்கும் மாணவர்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர்.
இந்த வழக்கில், அங்கு பணியாற்றிய ஆசிரியர் ஹரிபத்மன் என்பவர் கடந்த 3ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
இந்த விவகாரம் தொடர்பாக பேசிய நடிகையும், கலாஷேத்ராவின் முன்னாள் மாணவியுமான அபிராமி
"மாணவிகள் இந்த விவகாரத்தில் சில ஆசிரியைகளால் தூண்டிவிடப்படுகிறார்கள். நான் அங்கு பயின்ற வரை ஹரிபத்மன் எந்தவித பாலியல் தொல்லைகளையும் செய்யவில்லை” என்று தெரிவித்தார்.
”இந்த விவகாரம் குறித்து நான் பேசுவதால் என்னை சங்கி என்றும் பலர் கூறி வருகின்றனர்” என்று ஆவேசமாக பேசியிருக்கிறார்.
கலாஷேத்ராவில் பணிபுரியும் ஹரிபத்மன் உள்ளிட்ட நான்கு பேர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுவதாக அங்கு படிக்கும் மாணவர்கள் குற்றம்சாட்டினர்
புகார்கள் அளித்தும்கூட அவர்கள் தொடர்ந்து பாடம் நடத்த அனுமதிக்கப்பட்டதாக மாணவர்கள் கடந்த வாரம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டம் தீவிரமடைந்த நிலையில் கலாக்ஷேத்ரா நிறுவனம் ஏப்ரல் 6ஆம் தேதி வரை விடுமுறை அறிவித்தது.
இந்நிலையில், அந்த நிறுவனத்தில் நடன பிரிவில் பணியாற்றி வரும் ஹரிபத்மன் 2019ஆம் ஆண்டு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக முன்னாள் மாணவி ஒருவர் அடையாறு காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் ஹரிபத்மன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனை அடுத்து ஏப்ரல் 3ஆம் தேதி ஹரிபத்மன் கைது செய்யப்பட்டார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய நடிகை அபிராமி,
”நான் கலாஷேத்ராவின் முன்னாள் மாணவி. 89 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் ஒரு நிறுவனம் குறித்து இப்படி கூறுகிறார்கள்.
எப்போதும் ஒரு பிரச்னையில் ஒருதரப்பு விளக்கத்தை மட்டுமே கேட்டுவிட்டுப் பேசக்கூடாது” என்று கூறினார்.
குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர் தரப்பில் என்ன உள்ளது என்று பேச வாய்ப்பளிக்கப்படவே இல்லை. நாங்கள் பெருமையாகப் பார்த்த ஆசிரியர்களை மிகவும் இழிவுபடுத்திப் பேசுகிறார்கள்.
பாலியல் துன்புறுத்தலோ அல்லது எந்தப் பிரச்னையாகவோ இருந்தாலும் அது நடந்த நேரத்தில் வெளிப்படையாகப் பேசியிருக்க வேண்டும். தவறு நடக்கிறது என்றால், அந்த நேரத்திலேயே அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
அதைச் செய்யாமல், ‘நான் பயந்துட்டேன்’ என்று சொல்வது சரியல்ல. ”நாம் சொல்வது உண்மையாக இருந்தால், எதற்கும் பயப்படத் தேவையில்லை” என்று அபிராமி கூறியிருந்தார்.
நேற்று காவல் ஆணையரை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அபிராமி,
இந்த விவகாரத்தில் மாணவிகளை இரண்டு ஆசிரியைகள் தூண்டிவிடுவதாகத் தெரிவித்துள்ளார்.
2012-13 காலகட்டத்தில் இயக்குநராக இருந்த லீலா சாம்சன் மீது, பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி அவருக்கு எதிரான ஒரு சூழலை உருவாக்கினார்கள்.
தற்போதும் அதேபோலத்தான் ஆசிரியர் ஹரிபத்மனுக்கு எதிராக இந்தப் பிரச்னையை உருவாக்கியுள்ளார்கள். நான் படிக்கும் காலத்திலேயே ஆசிரியை ஒருவர், ஆசிரியர் ஹரிபத்மனுக்கு எதிராகப் பேசும்படி என்னை வற்புறுத்தினார். நான் அதற்குச் சம்மதிக்கவில்லை.
இத்தனை நாட்களாக எதுவுமே நடக்காதது போல் அமைதியாக இருந்துவிட்டு, இப்போது மாணவிகளைத் தூண்டிவிட்டு இந்த விவகாரத்தை பெரிதாக்குகிறார்கள்
ஹரிபத்மன் எங்களுக்கு வகுப்பெடுத்த வரைக்கும் எந்தவித பாலியல் தொல்லைகளையும் கொடுத்ததே இல்லை.
எனவே பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் நான் நேரடியாக அமர்ந்து பேசி என்ன நடந்தது என்பதை அறிய விரும்புகிறேன்.
சில ஆசிரியைகளால் இந்த விவகாரத்தில் மாணவிகள் பலிகடா ஆக்கப்படுகிறார்கள் என்று அவர் கூறினார். இந்த விவகாரம் குறித்து நான் பேசுவதால் என்னை சங்கி என்றும் சிலர் கூறி வருகின்றனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust