கொடைக்கானல் பூம்பாறை போறீங்களா? - நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில தகவல்கள்

பூம்பாறையில் குழந்தை வேலப்பர் கோயிலில் இருந்து தொடங்கலாம். சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன், போகர் சித்தரால் கட்டப்பட்ட கோயில் இது. இங்கு முருகர், ஒரு குழந்தை வடிவில் தன் வெற்றிவேலோடு அருள்பாலிக்கிறார்.
கொடைக்கானல் பூம்பாறை
கொடைக்கானல் பூம்பாறைIStock
Published on

கொடைக்கானல் என்ற உடன், நம் மக்கள் வழக்கம் போல கொடைக்கானல் ஏரி, குணா குகை, சைலெண்ட் வேலி வியூ பாயின்ட், பில்லர் ராக்ஸ்.... போன்ற டெம்பிளேட் இடங்களை மட்டும் சுற்றிப் பார்த்துவிட்டு வீட்டுக்கு திரும்பிவிடுகிறார்கள்.

ஆனால் அதைத் தாண்டி பூம்பாறை என்றொரு அழகான இடம் இருக்கிறது. கொடைக்கானல் ஏரியிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது இந்த அழகிய கிராமம்.

இந்த கிராமத்துக்கு செல்லும் வழி எங்கும் படம் எடுத்து ஸ்மார்ட்ஃபோன்கள் மற்றும் லேப்டாப்பில் ஸ்கிரீன் சேவர்களாக வைக்கும் அளவுக்கு இயற்கை எழில் கொஞ்சம் பிளாக்குகள் தான். ஆக செல்ஃபி வெறியர்கள் மற்றும் போட்டோ ஆர்வலர்களுக்கு ஏற்ற தளம் எனலாம்.

Pexels

பூம்பாறையில் குழந்தை வேலப்பர் கோயிலில் இருந்து தொடங்கலாம். சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன், போகர் சித்தரால் கட்டப்பட்ட கோயில் இது. இங்கு முருகர், ஒரு குழந்தை வடிவில் தன் வெற்றிவேலோடு அருள்பாலிக்கிறார்.

முருகன் கோயிலுக்கு வெளியிலேயே இந்தியப் புகழ்பெற்ற மலைப் பூண்டுச் சந்தை இருக்கிறது. பூம்பாறை மலைப் பூண்டின் வாசனை, சுவை, மருத்துவ குணங்களுக்கு இந்தியா முழுக்க ஒரு பெரிய சந்தையே உண்டு எனலாம்.

அப்படியே மன்னவனூர் ஏரிக்கு வந்து நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரோடு ஒரு நல்ல விருந்தை சாப்பிட அருமையான தளம். ஒரு நல்ல உணவுக்குப் பிறகு அப்படியே ஏரியைச் சுற்றி போட்டோக்களாக எடுத்துத் தள்ளலாம். காதலர்கள், அந்த இதமான குளிரில் கை கோர்த்து கதகதப்பான அன்பைப் பரிமாரிக் கொள்ள அருமையான இடம்.

அப்படியே கொஞ்சம் பயணித்தால் அல்லி மலர்கள் நிறைந்த கூக்கல் ஏரியை வந்தடையலாம். மீண்டும் ஸ்மார்ட்ஃபோன் கையுமாக ஒரு சில மணி நேரங்கள் வலம் வந்து சில பல ஜிபிக்களை போட்டோக்களால் நிரப்பலாம்.

கொடைக்கானல் பூம்பாறை
வேடர்கள்: இலங்கையின் கடைசி பழங்குடி மக்களின் அவல வாழ்க்கை
Pexels

எங்கே தங்குவது?

கொடைக்கானல் போன்ற மலை வாசஸ்தலத்தில் கேம்பிங் செய்வது ஒரு பிரமாதமான அனுபவத்தைக் கொடுக்கும். ஆனால் இங்கு வெறுமனே கேம்பிங் செய்யாமல், சொகுசாக சகல வசதிகளோடு கேம்பிங் செய்ய லக்ஸிகிளாம்ப் (Luxeglamp) என பூம்பாறையிலேயே ஓர் அருமையான இடம் உள்ளது. பிரமாதமான வியூ உடன் ஒய்யாரமாகத் தங்கலாம். சீசன் என்றால் உங்கள் அறையில் இருந்து நீர் வீழ்ச்சியைக் கூட காண வாய்ப்பு இருக்கிறது.

அது போக, ஜி ஆர் டி குழும ஹோட்டல்களால், பாரதி நகர் வில்பட்டியில் சுவிட்சர்லாந்தின் மலைத் தொடர்களில் காணப்படும் மரத்தாலான சிறிய கேபின் அறைகளைப் போலவே கொடைக்கானலில் தங்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

அந்த அளவுக்கு எல்லாம் பட்ஜெட் செலவழிக்க விருப்பமில்லையா, ஈகில் உட்ஸ் என்கிற விடுதிக்குச் செல்லலாம். அது கூக்கலில்தான் இருக்கிறது.

என்ன சாப்பிடுவது, எங்கே சாப்பிடுவது?

Passiflora Café என ஒரு கடை பூம்பாறை கிராமத்திலேயே இருக்கிறது. நிறைய கோவா கலாச்சார மக்களை அல்லது அக்கலாச்சாரத்தில் வாழும் மக்களைப் பார்க்கலாம். இந்த கடையில் பொதுவாக இத்தாலிய உணவுகள் அதிகம்.

கொடைக்கானல் நகரத்துக்குச் சென்றால் 10 டிகிரீஸ் என்றொரு கடை இருக்கிறது. அருமையான அசைவ உனவுகள், லீச் கேக் & பேஸ்ட்ரிகள் இங்கு பிரபலம்.

கேஃப் கரியப்பா என்கிற கடை, மிகச் சிறிய காபி கடைகளில் ஒன்று. ஆனால் கொடைக்கானல் குளிருக்கு இதமான தரமான காபி இங்கு கிடைக்கும். அதோடு கேரட் கேக்குகளையும் நாக்குக்கு அறிமுகப்படுத்த மறந்துவிடாதீர்கள்.

கொடைக்கானல் பூம்பாறை
பாஸ்போர்ட் பற்றி நீங்கள் அறியாத 11 ஆச்சரியமான உண்மைகள்!

பூம்பாறையில் என்ன வாங்குவது?

உண்மையில் மலைப் பூண்டு, நல்ல தேனைத் தவிர பூம்பாறையில் வாங்க பெரிதாக ஒன்றும் இல்லை. கோடை சீஸ் என்கிற நிறுவனம் பார்மசன், ஃபெட்டா, பெப்பர் செட்டர், சில்லி செட்டர்... என பல வகையான சீஸ் வகைகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறார்கள். சீஸ் பிரியர்கள் அதை வேண்டுமானால் வாங்கி வந்து ஒரு கை பார்க்கலாம்.

அது போக ஜார்ஜ்'ஸ் கார்மெட் கிச்சன் என்கிற நிறுவனம் பாஸ்டா சாஸ், தக்காளி சாஸ், கடுகு சாஸ்களைத் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று இருக்கிறது. இத்தாலிய மற்றும் அமெரிக்க உணவுகளை காதலிப்பவர்கள் இதையும் வாங்கி உங்கள் உணவில் சேர்த்துப் பார்க்கலாம்.

இந்த முறை கொடைக்கானல் செல்கிறீர்கள் என்றால், இந்த இடங்களையும் உங்கள் லிஸ்டில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

கொடைக்கானல் பூம்பாறை
Travel : இயற்கை எழில் கொஞ்சும் தமிழகத்தின் 5 சுற்றுலா தலங்கள் - இவற்றைத் தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com