பாக்கிய ராஜ்
பாக்கிய ராஜ் Twitter

மோடியை விமர்சிப்பவர்கள் குறைப் பிரசவத்தில் பிறந்தவர்கள் : பாக்கியராஜ் பேச்சு

இக்கட்டான சூழல்களைச் சமாளிப்பது கடினம். என்ன செய்தாலும் விமர்சனங்கள் வரும். மோடியை விமர்சிப்பவர்கள் குறைப்பிரசவத்தில் பிறந்தவர்கள் என நினைத்துக்கொள்ளுங்கள். இவர்கள் எந்த நல்ல விஷயங்களையும் பேச மாட்டார்கள். - பாக்கியராஜ்
Published on

சென்னை பாஜக அலுவலகமான கமலாலயத்தில் நடந்த "பிரதமரின் மக்கள் நலத்திட்டங்கள் - புதிய இந்தியா 2022" என்ற புத்தக வெளியீட்டுவிழாவில் கலந்துகொண்ட பாக்கிய ராஜ் “மோடி போன்ற தலைவர்கள் இந்தியாவுக்குத் தேவை, மோடியைக் குறை சொல்பவர்கள் குறை மாதத்தில் பிறந்தவர்கள்” எனப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

புத்தகத்தைத் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட நடிகரும் இயக்குநருமான பாக்கிய ராஜ் பெற்றுக்கொண்டார். அதன் பிறகு பேசிய அவர். “நான் கர்நாடகா சென்றிருந்த போது அண்ணாமலை குறித்து பெருமையாகக் கேள்விப்பட்டேன். இது பாராட்டத்தக்கது. பாஜகவுக்கு சரியான ஆளைத்தான் தலைவராகப் போட்டிருக்கிறார்கள்” என்றார்.


மேலும் பேசிய அவர், “பிரதமரின் திட்டங்கள் குறித்த புத்தகத்தைப் பெற்றுக்கொள்வதால் பெருமையடைகிறேன். அவர் எப்போதும் வெளிநாடுகளுக்குச் செல்வதால் அவரை விமர்சிக்கின்றனர். ஆனால் ஒரு மனிதர் எப்படி ஓய்வின்றி பயணிக்கிறார் என வியப்படைகிறேன். அவரைப் போன்ற எனர்ஜியான மனிதர்கள் நாட்டிற்குத் தேவை” என்றார்.

பாக்கிய ராஜ்
இளையராஜா தான் அடுத்த குடியரசு தலைவரா? பாஜக-வின் கணக்கு என்ன?

அத்துடன், “இக்கட்டான சூழல்களைச் சமாளிப்பது கடினம். என்ன செய்தாலும் விமர்சனங்கள் வரும். மோடியை விமர்சிப்பவர்கள் குறைப்பிரசவத்தில் பிறந்தவர்கள் என நினைத்துக்கொள்ளுங்கள். இவர்கள் எந்த நல்ல விஷயங்களையும் பேச மாட்டார்கள். பிறர் பேசுவதையும் கேட்க மாட்டார்கள். பிரதமரின் பெயர் மக்கள் மனதில் எழுதப்பட்டிருக்கிறது” என்றார்.

பாக்கிய ராஜ்
பணக்கார இந்தியர்கள் : யார் யார் சொந்தமாக ஜெட் விமானங்கள் வைத்திருக்கிறார்கள் தெரியுமா?
logo
Newssense
newssense.vikatan.com