இந்தி எதிர்ப்பு தொடர்ந்து தமிழக அரசியலில் பற்றி எரிந்துகொண்டிருக்கும் சூழலில் பாஜகவைச் சேர்ந்த அலிஷா அப்துல்லா ஏன் பெண்கள் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என்பது குறித்துப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
குஷ்பு, காயத்ரி ரகுராம், மதுவந்தி, நமிதா வரிசையில் பாஜகவில் இணைக்கப்பட்டவர் பிரபல ரேசிங் வீராங்கனை அலிஷா அப்துல்லா. இவர் விளையாட்டுத்துறையில் பெண்களை ஈடுபடுத்தவும் பெண்களின் முன்னேற்றத்துக்கு உழைக்கவும் பாஜகவில் இணைந்ததாக நேர்காணல்களில் கூறியிருக்கிறார்.
இரு மாதங்களுக்கு முன் அவர் அளித்த நேர்காணலில் இந்தி திணிப்பு குறித்த கேள்விக்கு, தமிழகத்திலும் தமிழ் திணிக்கப்படுவதாக வாதாடினார். மேலும் அவர் கூறிய பதில்கள் இணையத்தில் வைரலாகின.
"பெங்களூர், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் கூட மக்களுக்கு இந்தி தெரியும். அங்கு ஒரு கடையில் எதாவது தமிழில் கேட்டு வாங்கினால் கூடுதலாக விலை வைத்து விற்றுவிடுவர். ஆனால் இந்தியில் வாதாடி விலையைக் குறைக்கலாம்." என ஒரு நேர்காணலில் கூறியிருந்தார்.
"டெல்லியில் மாலை 9 மணிக்கு ஒரு பெண் தனியாக போகும் போது ஆண்கள் வந்து டார்ச்சர் செய்கிறார்கள் என வைத்துக்கொள்வோம். அந்த நேரத்தில் இந்தி தெரிந்திருந்தால் அவர்களிடம் கெட்டவார்த்தை பேசி நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம்" என மற்றொரு நேர்காணலில் பேசியிருக்கிறார் அலிஷா அப்துல்லா.
மேலும் அவர் தமிழகத்துக்கு வெளியில் எல்லா மாநிலத்தவர்களும் இந்தி தான் பேசுகிறார்கள் என்றும் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியிருந்தார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust