சென்னை : "இந்த கண்ணாடியில் பார்த்தால் நிர்வாணமாக தெரிவார்கள்" - சினிமா பாணியில் மோசடி!

இந்த கண்ணாடியை 1 கோடி ரூபாய் என விலை வைத்து பணக்கார தொழிலதிபர்கள் இருவரிடம் விற்றுள்ளானர்.
சென்னை : "இந்த கண்ணாடியில் பார்த்தால் நிர்வாணமாக தெரிவார்கள்" - சினிமா பாணியில் மோசடி!
சென்னை : "இந்த கண்ணாடியில் பார்த்தால் நிர்வாணமாக தெரிவார்கள்" - சினிமா பாணியில் மோசடி! twitter
Published on

பூவே பூச்சூடவா என்ற பழைய படத்தில் வரும் நகைச்சுவைக் காட்சி ஒன்றில் நதியா தனது கூலிங் கிளாசைக் குறிப்பிட்டு, "இது அபூர்வமானது. இந்த கண்ணாடிய காஸ்மோஃபில்னு சொல்லுவாங்க. இத என் ஃபிரண்ட் ஃபிலடோபில இருந்து வாங்கிட்டு வந்தாங்க. இதப் போட்டுகிட்டா எதிர்க்க இருக்குறவங்க சட்டையே தெரியாது உடம்பு மட்டும் தான் தெரியும்" என அளந்துவிட அதை நம்பிக்கொண்டு நடிகர் பம்மி ஓடுவார்.

இந்த காட்சியே பழையபடத்தில் உள்ளது என்றால் இந்த நிர்வாண கண்ணாடி டெக்னிக் எவ்வளவு பழையதாக இருக்க வேண்டும். இந்த டெக்னிக்கை பயன்படுத்தி மோசடி செய்ய நினைத்த நான்குபேரை சென்னை காவல்துறையினர் சமீபத்தில் கைது செய்துள்ளனர்.

இந்த கண்ணாடியை 1 கோடி ரூபாய் என விலை வைத்து பணக்கார தொழிலதிபர்களிடம் விற்கும் திட்டத்துடன் ஒரு கும்பல் களமிறங்கியுள்ளது.

பெங்களூருவைச் சேர்ந்த சூர்யா என்ற 39 வயது தொழிலதிபர் ஒருவர் தான் இந்த கும்பலுக்கு தலைமைத் தாங்கியுள்ளார். குபாபித் (37), ஜித்து ஜெயன் (24), எஸ்.இர்ஷத் (21) ஆகியோர் உடனிருந்துள்ளனர். 

சென்னை : "இந்த கண்ணாடியில் பார்த்தால் நிர்வாணமாக தெரிவார்கள்" - சினிமா பாணியில் மோசடி!
Facebook : பேஸ்புக் பயனர்கள் ஜாக்கிரதை! ஏமாற்று ஃபிஷிங் மோசடி உஷார்!

நால்வரையும் கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த மோசடி கும்பல் குறித்து ஒரு பிசினஸ் மேன் தான் காவலர்களிடம் புகாரளித்துள்ளார்.

அவர் ஏற்கெனவே சூர்யாவால் தொல்லியல் பொருட்கள் தருவதாகக் கூறி 5 லட்சம் ஏமாற்றப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் தனது பணத்தை திரும்பப் பெறுவதற்காக சூர்யாவைச் சந்தித்துள்ளார்.

சென்னை : "இந்த கண்ணாடியில் பார்த்தால் நிர்வாணமாக தெரிவார்கள்" - சினிமா பாணியில் மோசடி!
போலி சான்றிதழ் : தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறித்த வட மாநில ஊழியர்கள்

அப்போது போலி துப்பாக்கியை வைத்து சூர்யா அவரை மிரட்டி அனுப்பியுள்ளார். இறுதியாக அவர் காவல்துறையில் புகாரளித்ததால் சூர்யா கைது செய்யப்பட்டார்.

இந்த கும்பல் பணக்காரர்களுக்கு கண்ணாடியை ட்ரயல் காட்டுவதாகக் கூறி வீடியோக்களை காண்பித்து நம்பவைத்துள்ளனர். சிலரை இரகசிய அறைக்கு வரவைத்து நிர்வாண மாடல்களைக் நடிக்க வைத்து ஏமாற்றியுள்ளனர்.

இப்படி அவர் இரண்டு கண்ணாடியை விற்றிருக்கிறார் என்பதும் இதுபோல கதைகளைக் கட்டி பல பொருட்களை விற்க திட்டமிட்டுள்ளார் என்பது காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சென்னை : "இந்த கண்ணாடியில் பார்த்தால் நிர்வாணமாக தெரிவார்கள்" - சினிமா பாணியில் மோசடி!
அமெரிக்கா மத போதகர் : 900 மக்களை தற்கொலை செய்ய வைத்த ஒரு போலி சாமியாரின் விறு விறு கதை

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com