போலி சான்றிதழ் : தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறித்த வட மாநில ஊழியர்கள்

அஞ்சல் ஊழியர் பணி, சி.ஆர்.பி.எஃப், இந்தியன் ஆயில் உள்ளிட்ட பல மத்திய அரசின் நிறுவனங்களில் 200-க்கும் அதிகமான வட மாநிலத்தவர்கள் போலி மதிப்பெண் சான்றிதழ்கள் கொடுத்து பணியில் சேர்ந்துள்ளது உறுதியாகியிருக்கிறது.
தமிழ்நாடு தேர்வாணையம்
தமிழ்நாடு தேர்வாணையம்Twitter
Published on

தமிழகத்தின் தேர்வுத் துறையின் போலி சான்றிதழ் கொடுத்து முறைகேடாக வட மாநிலத்தவர்கள் வேலைக்குச் சேர்ந்துள்ளது அம்பலமாகியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்திலிருக்கும் நிறுவனங்களில் வட மாநிலத்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தமிழக இளைஞர்கள் வேலையில்லா திண்டாட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வட மாநிலத்தவர்களுக்கு அரசு வேலை வாய்ப்புகளை அள்ளிக்கொடுப்பதாகவும் இந்த நிலை மாற வேண்டும் எனவும் பல அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. மத்திய அரசின் வேலை வாய்ப்பு கொள்கைகள் மீதே மற்ற கட்சிகள் ஆட்சோபனை தெரிவித்து வரும் நிலையில் முறைகேடாகவும் தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்புகள் பறிபோகும் நிகழ்வுகள் அதிர்ச்சியளிக்கின்றன.

அஞ்சல் ஊழியர் பணி, சி.ஆர்.பி.எஃப், இந்தியன் ஆயில் உள்ளிட்ட பல மத்திய அரசின் நிறுவனங்களில் 200-க்கும் அதிகமானோர் போலி மதிப்பெண் சான்றிதழ்கள் கொடுத்து பணியில் சேர்ந்துள்ளது உறுதியாகியிருக்கிறது.

போலி சான்றிதழ்
போலி சான்றிதழ்Twitter
தமிழ்நாடு தேர்வாணையம்
உக்ரைன் பெண்களை பயன்படுத்த ரஷ்ய வீரருக்கு அனுமதி வழங்கிய மனைவி - வெளியான ஆடியோ

வட மாநிலத்தவர்கள் பல நூறு பேர் இந்த முறைகேட்டில் ஈடுபட்டிருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. நம் மாநில இளைஞர்கள் பல ஆண்டுகளாகப் படித்து எப்படியாவது ஒரு அரசு வேலை கிடைத்து விடாதா என ஏங்கிக்கொண்டிருக்கும் சூழலில் வட மாநிலத்தவர்கள் திருட்டுத்தனமாகத் தமிழகத்தில் படித்தது போன்ற தேர்வு சான்றிதழ்களை உருவாக்கி பணியில் சேர்ந்திருக்கின்றனர்.

யு.பி.எஸ்.சி கொடுத்த சரிபார்ப்பு நடவடிக்கையில், போலி சான்றிதழ்களை கண்டறிந்து அரசு தேர்வுகள் துறை உறுதி செய்திருக்கிறது. போலி சான்றிதழ் கொடுத்த நபர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்கவும் அரசு தேர்வுகள் துறை அஞ்சல் துறைக்கு பரிந்துரை செய்துள்ளது.

தமிழ்நாடு தேர்வாணையம்
உத்தர பிரதேசம்: கைத்துப்பாக்கியுடன் சென்ற பள்ளி ஆசிரியர் கைது

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com