சென்னையில் மினி ராபின் ஹுட் : 10 ஆண்டுகள் திருடிய நபர் - சிக்கியது எப்படி?

அன்புராஜ் மிகவும் கட்டுப்பாடான திருடராக இருந்திருக்கிறார். அதாவது ஒரு மாதத்துக்கு ஒரு முறை மட்டுமே திருடுவாராம். திருடிய பணத்தை சாலையோரம் வசிக்கும் மக்களுக்காக செலவிட்டிருக்கிறார்.
சென்னையில் மினி ராபின் ஹுட் : 10 ஆண்டுகள் திருடிய நபர் - சிக்கியது எப்படி?
சென்னையில் மினி ராபின் ஹுட் : 10 ஆண்டுகள் திருடிய நபர் - சிக்கியது எப்படி?Twitter
Published on

பணக்காரர்களிடம் இருந்து செல்வத்தைத் திருடி ஏழைகளுக்கு வழங்குபவர் தான் ராபின் ஹுட். தமிழில் ஜென்டில் மேன், கந்தசாமி படங்கள் இதற்கு எடுத்துக்காட்டு. ராபின் ஹுட்கள் சினிமாவின் கதாநாயகனாக இருக்க 100% தகுதியானவர்கள். சினிமாவைத் தாண்டி நிஜ வாழ்விலும் ஒரு மினி ராபின் ஹூட்டை கண்டறிந்துள்ளனர் சென்னை காவல்துறையினர்.

அன்புராஜ் என்பது தான் அவரின் பெயர். இவருக்கு இருப்பதற்கு வீடு கூட கிடையாது. எழும்பூரில் சாலையோரம் வசித்து வந்திருக்கிறார். கடந்த 10 ஆண்டுகளாகவே இவர் இந்த திருட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.

அன்புராஜ் மிகவும் கட்டுப்பாடான திருடராக இருந்திருக்கிறார். அதாவது ஒரு மாதத்துக்கு ஒரு முறை மட்டுமே திருடுவாராம்.

எழும்பூரில் இருந்து மின்சார தொடர்வண்டி பிடித்து தாம்பரம் பகுதிக்கு செல்வார். அங்கு வீடுகளிலோ அல்லது நபர்களிடமோ இருந்து நகைகளைப் பறிப்பதை வழக்கமாக கடைபிடித்திருக்கிறார். பின்னர், அந்த நகைகளை விற்று பணமாக்கி சாலையோரம் வசிக்கும் மக்களுக்காக செலவிட்டிருக்கிறார்.

கடைசியாக பெருங்களத்தூரில் உள்ள வீடுகளில் தொடர்ந்து கொள்ளையடித்து வந்திருக்கிறார். வரதராஜன் என்ற நபர் சிகிச்சைக்காக இரண்டு நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவரது வீட்டில் கைவரிசையைக் காட்டியிருக்கிறார் அன்புராஜ். அந்த வீட்டிலிருந்த சிசிடிவி கேமராக்களைக் கொண்டு அன்புராஜை கண்டுபிடித்திருக்கின்றனர் காவலர்கள்.

சென்னையில் மினி ராபின் ஹுட் : 10 ஆண்டுகள் திருடிய நபர் - சிக்கியது எப்படி?
"கடைய எப்ப சார் திறப்பீங்க?" - வடிவேலு பாணியில் மதுபானம் திருடிய இருவர் - எங்கே?

பிடிபட்ட அன்புராஜிடம் இருந்து 11 சவரன் நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளது. தாம்பரம் நீதிமன்றத்தில் அவரை ஆஜர் படுத்தியுள்ளனர். இதனிடையே அவர், "ஆதரவற்ற மக்களின் உணவு உடைப் போன்ற அடிப்படை வசதிகளுக்காக திருடி சிறைக்கு செல்வதில் எந்த கவலையும் இல்லை" என்று கூறியதாகக் கூறப்படுகிறது.

சென்னையில் மினி ராபின் ஹுட் : 10 ஆண்டுகள் திருடிய நபர் - சிக்கியது எப்படி?
கூகுள் உயரதிகாரி கடத்தி திருமணம்? அட்ராங்கி ரே பட பாணியில் ஓர் அதிர்ச்சி சம்பவம்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com