பெரியார், மோடிக்கு பிறந்தநாள்! முதல்வர் கூறிய இரண்டு விதமான வாழ்த்துகள் - Decode

இன்று ட்விட்டரில் பிரதமர் மோடி மற்றும் தந்தை பெரியாருக்கு தலைவர்கள் அனைவரும் வாழ்த்துக் கூறி வருகின்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் இருவருக்கும் கூறிய வாழ்த்துகள் கவனம் பெற்று வருகிறது.
modi - periyar
modi - periyarTwitter
Published on

இன்று தந்தை பெரியாரின் பிறந்தநாள் மற்றும் பிரதமர் மோடிக்கும் பிறந்தநாள். வெவ்வேறான சித்தாந்தங்களை பின்பற்றக் கூடியவர்களுக்கு ஒரே நாளில் பிறந்தநாள் வருவது கடந்த சில ஆண்டுகளாக அரசியல் களத்தை அதகளப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் இன்று ட்விட்டரில் பிரதமர் மோடி மற்றும் தந்தை பெரியாருக்கு தலைவர்கள் அனைவரும் வாழ்த்துக் கூறி வருகின்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் இருவருக்கும் கூறிய வாழ்த்துகள் கவனம் பெற்று வருகிறது.

பெரியாருக்கு முன்னதாகவே ட்விட்டரில் மோடியை வாழ்த்தி ஒரு பதிவினை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின். பெரியார் ட்விட்டரில் இல்லை என்பதால் மோடிக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டிருக்கலாம்.

"மண்புமிகு பிரதமர் 'திரு' நரேந்திர மோடி அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்" என அவர் குறிப்பிட்டிருந்தார். பொதுவாக நரேந்திர மோடிக்கு வாழ்த்து கூறுபவர்கள் ஶ்ரீ என்ற அடைமொழி அல்லது ஜி என்ற பின்னொட்டை பயன்படுத்துவார்கள். ஆனால் முதல்வர் ஸ்டாலின் தமிழ் வார்த்தையான 'திரு' -வை பயன்படுத்தியிருக்கிறார்.

modi - periyar
பிரதமர் மோடியை நேரில் சந்தித்தும் பிறந்தநாள் வாழ்த்து கூற மறுத்த புதின் - என்ன காரணம்?

பாஜக தலைவர் அண்ணாமலை மோடிக்கு கூறிய வாழ்த்தில் ஶ்ரீ.நரேந்திர மோடி அவர்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் இன்று இதுவரையில் தந்தை பெரியாருக்கு அவர் வாழ்த்துக் கூறவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அண்ணாமலை பெரியாருக்கு வாழ்த்துகூறியிருந்தார்.

பொதுவாக பாஜகவினர் மற்றும் வலதுசாரியினர் பெரியாரை ஈ.வே.ரா என்றோ அல்லது ராமசாமி என்றோ தான் குறிப்பிடுவர்கள். அதனை உடைத்து "தந்தை பெரியார்" எனக் குறிப்பிட்டிருந்தார் அண்ணாமலை. அந்த நேரத்தில் பாஜக கூட்டணியான அதிமுக ஆட்சியிலிருந்தது குறிப்பிடத்தக்கது.

அண்ணாமலையின் வாழ்த்து பாஜகவிலும் பிறகட்சிகளிலும் பல விமர்சனங்களைப் பெற்றது. கடந்த ஆண்டு திமுக அரசு, பெரியாரின் பிறந்தநாளை சமூகநீதி தினமாக அறிவித்த போது, "பெரியாருக்கு முன்னதாகவே பலர் சமூக நீதி குறித்துப் பேசியிருக்கின்றனர். அவர்களை இருட்டடிப்பு செய்யக் கூடாது" என்று பேசினார் அண்ணாமலை.

modi - periyar
உலகின் பிரபலமான தலைவர்; பிரதமர் மோடி முதலிடம் - பட்டியலில் இருக்கும் மற்ற தலைவர்கள் யார்?

பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தி வாழ்த்து கூறிய ஸ்டாலின் இவ்வாறு ட்வீட் செய்திருந்தார், "பிறப்பால் பேதம் கற்பித்து, தீண்டாமை நிலவிய சமூகத்தில், புரட்டுகளுக்குள் புதைந்துகிடந்த அழுக்குகளை அம்பலப்படுத்தி, இந்த மண்ணில் வாழும் பெரும்பான்மையான மக்களும் சுயமரியாதையோடு வாழ்ந்திடும் வரலாற்றைப் படைத்த புரட்சியாளர் தந்தை பெரியார் வழிநடப்போம்! தமிழர் இனமானம் காப்போம்!" பெரியார் பற்றிய பாராட்டாக மட்டுமில்லாமல் உறுதிமொழியாகவே இதனை பகிர்ந்திருக்கிறார் ஸ்டாலின்.

modi - periyar
"பாஜகவுக்கு திமுக அஞ்சுகிறது"- அடித்துப் பேசும் சவுக்கு சங்கர்

பெரியர் பிறந்தநாளுக்கு நெட்டிசன்கள் மற்றும் தலைவர்களின் வாழ்த்துகள்,

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com