Morning News Today : கந்துவட்டிக் கொடுமைக்கு முடிவு - ஆபரேஷன் கந்துவட்டி செயல் திட்டம்
Morning News Today : கந்துவட்டிக் கொடுமைக்கு முடிவு - ஆபரேஷன் கந்துவட்டி செயல் திட்டம்NewsSense

Morning News Today : எரிபொருள் வாங்க இந்தியா மட்டுமே உதவியிருக்கிறது - இலங்கை பிரதமர்

இலங்கை கடந்த சில மாதங்களாக வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கிறது. இதனால் அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிராகத் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Published on

எரிபொருள் வாங்க இந்தியா மட்டுமே உதவியிருக்கிறது - இலங்கை பிரதமர்

இலங்கை கடந்த சில மாதங்களாக வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கிறது. இதனால் அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிராகத் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொருளாதார நெருக்கடி, போராட்டங்கள் காரணமாக இலங்கையில் எரிபொருள், அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்டவையின் விலை பல மடங்கு அதிகரித்திருக்கிறது. இதிலிருந்து மீண்டுவர இலங்கை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. உலக நாடுகளிடமும் உதவி கேட்டு இலங்கை கோரிக்கை விடுத்திருக்கிறது.

சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை அரசு கடனுதவி கோரியுள்ளது. ஆனால், இலங்கைக்கு இதுவரை சர்வதேச நாணய நிதியம் கடனுதவி வழங்கவில்லை. இந்நிலையில், இந்தியாவைத் தவிர வேறு எந்த நாடும் எங்களுக்கு எரிபொருள் வாங்க பண உதவி வழங்கவில்லை என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். இலங்கைக்கு இந்தியா எரிபொருள், மருந்துப்பொருட்கள், பணம் என 27 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்குக் கடனுதவி வழங்கியிருக்கிறது.

Vignesh shivan - nayanthara
Vignesh shivan - nayantharaNewssense

மாமல்லபுரம் நட்சத்திர ஓட்டலில் இன்று நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை நயன்தாராவுக்கும் அவரின் காதலன் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் இன்று மகாபலிபுரத்தில் திருமணம் நடைபெற்றிருக்கிறது.

திருமண விழாவுக்கு குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின், நடிகர்கள் ரஜினிகாந்த், ஷாருக் கான் உள்ளிட்ட பிரபலங்கள் திருமண நிகழச்சியில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்த உள்ளனர்.

Morning News Today : கந்துவட்டிக் கொடுமைக்கு முடிவு - ஆபரேஷன் கந்துவட்டி செயல் திட்டம்
நயன்தாரா விக்னேஷ் : மகாபலிபுரத்தில் திருமணம்,எத்னிக் டிரெஸ் கோட் - சில சுவாரஸ்ய தகவல்கள்

கோவை விமான நிலையத்தில் தானியங்கி ரோபோக்கள்

கோவை சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா போன்ற நகரங்களுக்கும் சார்ஜா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

கோவையில் இருந்து தினமும் 20-க்கு மேற்பட்ட விமானங்கள் இயக்கப்படுகின்றன. ஆயிரக்கணக்கான பயணிகள் பயணிக்கிறார்கள். அவர்களுக்கு உதவத் தனி உதவி மையம் விமான நிலையத்திலேயே அமைக்கப்பட்டுள்ளது. அந்த உதவி மையத்தை செல்போன் மூலம் பொதுமக்கள் தொடர்புகொண்டு தங்களுக்குத் தேவையான தகவல்களைப் பெறுகின்றனர்.

இந்நிலையில் விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு உதவும் வகையில் தானியங்கி ரோபோக்கள் இன்று அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த அதிநவீன ரோபோக்கள் செயற்கை நுண்ணறிவு கொண்டவை

Morning News Today : கந்துவட்டிக் கொடுமைக்கு முடிவு - ஆபரேஷன் கந்துவட்டி செயல் திட்டம்
விக்ரம் : டிரண்டாகும் Rolex - கமல் சூர்யாவுக்கு பரிசளித்த இந்த வாட்ச்சில் என்ன ஸ்பெஷல்?
Sylendra Babu
Sylendra Babutwitter

கந்துவட்டிக் கொடுமைக்கு முடிவு - ஆபரேஷன் கந்துவட்டி செயல் திட்டம்

தமிழகத்தில் கந்துவட்டி காரணமாக தற்கெலை செய்துகொள்ளும் சம்பவங்கள் பல வருடங்களாகத் தொடர்கின்றன.

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த போலீஸ் செல்வக்குமார் கந்துவட்டி கொடுமை காரணமாக விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து தமிழக சட்ட ஒழுங்கு டி.ஜி.பி சைலேந்திர பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், கந்து வட்டிக் கொடுமையைத் தடுக்க அனைத்து போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் அதிக வட்டி வசூல் தடைச் சட்டம் 2003-ன் கீழ் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.

நிலுவையில் உள்ள வழக்குகள், அனைத்து காவல் நிலையங்களிலும் நிலுவையில் உள்ள கந்துவட்டி புகார்கள் மற்றும் வழக்குகள்மீது உரிய விசாரணை நடத்த வேண்டும். கந்துவட்டி தொடர்பான இந்த நடவடிக்கைகளுக்கு 'ஆபரேஷன் கந்து வட்டி' என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகளை போலீசார் திறம்பட வெற்றிகரமாகச் செயல்படுத்த வேண்டும் எனத் தெரிவித்திருக்கிறார்.

Morning News Today : கந்துவட்டிக் கொடுமைக்கு முடிவு - ஆபரேஷன் கந்துவட்டி செயல் திட்டம்
ராதிகா மெர்ச்சன்ட் : முகேஷ் அம்பானி முதல் ஆமீர் கான் வரை பங்கேற்ற அரங்கேற்றம் - யார் இவர்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com