சித்த மருத்துவரான டாக்டர் ஷர்மிகா சரண் யூடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அழகு மற்றும் மருத்துவ குறிப்புகள் பகிர்வதன் மூலம் பிரபலமடைந்திருந்தார்.
தமிழ் யூடியூப் சேனல்களுக்கு இவர் தொடர்ந்து நேர்காணல் அளித்துவந்த நிலையில் இவர் மீது சில குற்றாச்சாட்டுகள் எழுந்தன.
மாட்டுக்கறி சாப்பிட்டால் செரிமானமாகாது, நுங்கு சாப்பிட்டால் மார்பகம் வளரும், ஒரு குலோப் ஜாமுன் சாப்பிட்டால் மூன்று கிலோ எடை ஒரேநாளில் கூடும் என இவர் கூறிய பல கருத்துகள் சர்ச்சையானது.
இவர் உண்மைக்கு புறம்பாக பேசுவதாக குற்றச்சாட்டு எழுப்பப்பட்டதைத் தொடர்ந்து இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவத்துறையின் இணை இயக்குனர் டாக்டர் பார்த்திபன் ஷர்மிகா மீது விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவித்திருந்தார்.
அதன்படி, இன்று அருகம்பாக்கத்தில் உள்ள சித்த மருத்துவ கல்லூரி இயக்குனரகத்தில் வழக்கறிஞர்களுடன் நேரில் ஆஜராகி விளக்கமளித்துள்ளார் ஷர்மிகா.
தமிழ்நாடு அரசின் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் இயக்குநர் கணேஷ் ஐ.ஏ.எஸ் தலைமையில் இணை இயக்குநர் பார்த்திபன், வல்லுநர் குழுவினர் இந்த விசாரணையை மேற்கொண்டனர்.
ஷர்மிகாவுடன் நிபுணர்கள் குழு 1 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
வாய்மொழியாக அவர் அளித்த விளக்கம் திருப்தி அளிக்காததால் வருகின்ற 10ம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமாக விளக்கம் கேட்க முடிவுசெய்யப்பட்டதாக அவர்கள் கூறியுள்ளனர்.
இதன்படி, ஷர்மிகா அளிக்கும் எழுத்துப்பூர்வமான விளக்கத்தை பார்த்துவிட்டு நிபுணர்கள் குழு கூறும் அறிவுரைப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
விசாரணை முடிந்து திரும்பும் போது ஷர்மிகாவிடம் ஊடகங்கள் கேள்வி எழுப்ப முயன்றனர். ஆனால் அவர் எந்த பதிலும் அளிக்காமல் சென்றுவிட்டார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust