”நான் கேட்டா பணம் கொடுக்காதீங்க” - மோசடி குறித்து எச்சரித்த நடிகர் வேல.ராமமூர்த்தி

இந்நிலையில், வேல. ராமமூர்த்தியின் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அந்த ஆசாமி, மற்றொரு நபரிடம் ரூ.3000 அனுப்புங்கள் எனக் கேட்டுள்ளார்.
Vela Ramamuthy
Vela RamamuthyTwitter
Published on

எழுத்தாளரும், பிரபல வில்லன் நடிகருமான வேல. ராமமூர்த்தி, தனது பெயரை பயன்படுத்தி சிலர் மோசடி செய்து வருவதாக புகாரளித்துள்ளார்.

வேல. ராமமூர்த்தி குருதி ஆட்டம், குற்றப் பரம்பரை, பட்டத்து யானை உள்ளிட்ட புத்தகங்களை எழுதியவர். இதுதவிர தமிழ் திரைப்படங்களில் இவர் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தற்போது இவரது பெயரை பயன்படுத்தி சிலர் மோசடியில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார் ராமமூர்த்தி.

கடந்த சில ஆண்டுகளாக சைபர் கிரைம் அதிகரித்து வரும் நிலையில், இதனை பயன்படுத்தி சிலர் பணம் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெயர் தெரியாத ஆட்களிடம் இருந்து பணம் வேண்டும் என்பது போன்ற குறுஞ்செய்திகள், அழைப்புகள் வந்தால் நம்ப வேண்டாம் என தொடர்ந்து எச்சரிக்கைகள் கொடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் மோசடிகளும், அதனால் ஏமாறுபவர்களின் எண்ணிக்கையும் குறைந்ததாக தெரியவில்லை.

Vela Ramamuthy
ஆன்லைனில் விஸ்கி ஆர்டர் செய்த பெண்ணிடம் 5.35 லட்சம் மோசடி - என்ன நடந்தது?

சமூக வலைத்தளங்களில் பிரபலங்களை தொடர்புகொள்வது எளிதாகியுள்ள நிலையில், பிரபலங்களின் பெயர்களை வைத்தும் சிலர் பணம் பறிக்கின்றனர். இந்நிலையில், வேல. ராமமூர்த்தியின் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அந்த ஆசாமி, மற்றொரு நபரிடம் ரூ.3000 அனுப்புங்கள் எனக் கேட்டுள்ளார்.

ஃபோன் பே செயலியின் கியூ ஆர் கோடு அனுப்பி, அதை ஸ்கேன் செய்து அதன் மூலம் பணம் அனுப்புமாறு கேட்டுள்ளனர். இந்த செய்தியை அறிந்த எழுத்தாளர், தன் ஃபேஸ்புக்கில் , “நண்பர்களே உஷார்!எனது பெயரை பயன்படுத்தி, ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் மூலம் சிலர் பணம் கேட்டு ஏமாற்றுவதாக கேள்விப்பட்டேன். தயவு செய்து யாரும் ஏமாறவேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்." என்று பதிவிட்டிருந்தார்

Vela Ramamuthy
ஒரே ஒரு குறுஞ்செய்தியில் 1 கோடி மோசடி : சர்ச்சையில் சிக்கிய தடுப்பூசி நிறுவனம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com