Happy Pongal 2023 : உங்கள் நண்பர்களுக்கு பொங்கள் வாழ்த்து சொல்ல 10 Quotes!
Happy Pongal 2023 : உங்கள் நண்பர்களுக்கு பொங்கள் வாழ்த்து சொல்ல 10 Quotes!canva

Happy Pongal 2023 : உங்கள் நண்பர்களுக்கு பொங்கள் வாழ்த்து சொல்ல 10 Quotes!

பொங்கலுக்கு சில நல்ல சொற்களோடும், மேற்கோள்களோடும் வாழ்த்து சொல்ல சில ஐடியாக்கள் இதோ.
Published on
அறியாமைத் தீ எரியட்டும், அன்பெனும் இனிமை மலரட்டும்
newssense

இதோ தமிழர்களின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் தொடங்கிவிட்டது. உங்களுடைய சுக துக்கங்களில் எப்போதும் உறுதுணையாக நிற்கும் ஆருயிர் நண்பர்கள், நண்பிகள், தோழர்கள், தோழிகளுக்கு சில நல்ல சொற்களோடும், மேற்கோள்களோடும் வாழ்த்து சொல்ல சில ஐடியாக்கள் இதோ.

இந்த இனிய பொங்கல் திருநாளில் உன் வாழ்க்கை இன்னும் இனிமையாகட்டும். செல்வ வளங்கள் உன் வாழ்வைச் சூழ இறைவன் அருளட்டும். தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்.

இந்த தைத்திருநாள் முதல் உன் வாழ்க்கையில் மகிழ்ச்சிகள் மழையாய் பெய்ய, செல்வ வளங்கள் உன் இல்லத்தில் சீறிப்பாய, வெற்றிகள் வெண் சாமரம் வீச என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

உன் நல்ல எண்ணத்திற்கு, உன் வாழ்வில் எல்லாம் சிறக்கட்டும்… தேவைக்கு மேல் பொன்னும் பொருளும் கிடைக்கட்டும். தித்திக்கும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.

Happy Pongal 2023 : உங்கள் நண்பர்களுக்கு பொங்கள் வாழ்த்து சொல்ல 10 Quotes!
Besties டு Backroom Deals..எந்த வாட்ஸ் ஆப் குரூப்க்கு என்ன பெயர் வைக்கலாம்?

எந்த பலனும் எதிர்பாராமல் சூரியன் தன்னுடைய செங்கதிர்களை பூமிக்கு கொடுப்பதை போல, எப்போதும் எனக்கு அன்பையும் அரவணைப்பையும் கொடுக்கும் நண்பருக்கு இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

அறியாமைத் தீ எரியட்டும், அன்பெனும் இனிமை மலரட்டும், செல்வ வளங்கள் பொருகட்டும், நண்பனின் இல்லத்திலும் உள்ளத்திலும் மகிழ்ச்சி பொங்கட்டும். இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

பொங்கி வரும் பொங்கலைப் போல உன் உள்ளத்திலும், தங்கும் இல்லத்திலும், வாழும் நாட்டிலும் இன்பம் பொங்கட்டும், ஆருயிர் தோழிக்கு அன்பான பொங்கல் வாழ்த்துக்கள்

இந்த தைத்திருநாளில் நீ விரும்பிய அனைத்தும் உனக்கு கிடைக்க இறைவனை பிரார்த்திக்கிறேன். இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

Happy Pongal 2023 : உங்கள் நண்பர்களுக்கு பொங்கள் வாழ்த்து சொல்ல 10 Quotes!
உலக தாய்மொழி தினம் : தமிழில் வாழ்த்து சொன்ன சீனப் பெண்

அன்பும் மகிழ்ச்சியும் பொங்க, செல்வ வளங்கள் உன் வாழ்வில் அரணாக, நல்ல உடல் நலத்தோடும், மனநலத்தோடும், அருள் வளத்தோடும் வாழும் வரத்தை இறைவன் உனக்கு கொடுக்கட்டும். உளம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

இந்த பொங்கல் முதல் உன் வாழ்க்கையில் புதுமைகள் பொங்கட்டும், பெருமைகள் சேரட்டும், சோதனைகள் விலகட்டும் துன்பங்கள் கரையட்டும். இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

இந்த பொங்கலுக்கு நீ ஏற்றி வைக்கும் நெருப்பு உன் சோகங்களையும் சிக்கல்களையும் சுட்டெரிக்கட்டும். காலை இளஞ்சூரியனைப் போல உன் வாழ்க்கை ஜொலிக்க தொடங்கட்டும். இனிய தை பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

Happy Pongal 2023 : உங்கள் நண்பர்களுக்கு பொங்கள் வாழ்த்து சொல்ல 10 Quotes!
ரஜினிகாந்த் முதல் முதல்வர் ஸ்டாலின் வரை : புத்தாண்டுக்கு வாழ்த்து தெரிவித்த பிரபலங்கள்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com