வருகிறார் சோழர்: பொன்னியின் செல்வன் சோழர்களின் உண்மை முகமா? - சோழர் வரலாறு மினி சீரிஸ் 3

சோழர் வரலாற்றைப் பற்றிய கல்கியின் விளக்கம் இடைக்காலத்தில் நடந்த சோழப்பேரரசின் அனைத்து வகையான முறைகேடுகளையும் மறைக்கும் முயற்சியாக இருந்தது. சோழப் பேரரசின் மன்னர்களை முற்றிலும் ஒழுக்கமான மற்றும் உன்னதமான நபர்களாகக் காட்டுகிறார் கல்கி.
சோழர்
சோழர்Twitter

சோழர்களிடையே பெரும் வரலாற்று உணர்வு இருந்தது என்கிறார் வரலாற்றறிஞர் சீனிவாசன். பழைய கல்வெட்டுகளை மீண்டும் பொறிப்பதைத் தவிர, நினைவாற்றல் மூலம் நிகழ்வுகளைப் பதிவு செய்யும் முயற்சிகள் இருந்தன. கோனேரிராஜபுரத்தில் செம்பியன் மகாதேவியால் கட்டப்பட்ட கோவில் ஒன்று இருக்கிறது. அங்கே மகாதேவி தனது கணவரான சுந்தராதித்த சோழனுக்கு அர்ப்பணித்த ஒரு தகடு ஒன்று இருக்கிறது. மேலும் இருவரும் லிங்க வழிபாடு செய்வதும் அதில் இருக்கிறது.

இதே போன்ற முயற்சிகள் சாதாரண மக்களுக்கும் நீட்டிக்கப்பட்டது. எடுத்துக்காட்டாக தஞ்சை பிரகதீஸ்வர் கோவிலின் சுவர்களைக் கட்டிய கைவினைஞர்களில் ஒருவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு அரிய வெண்கலத் துண்டு உள்ளது.

சோழர்
வருகிறார் சோழர்: உலக நாகரிகத்தில் சோழர்களின் பங்களிப்பு - சோழர் வரலாறு மினி தொடர் 2
சோழர்
வருகிறார் சோழர் : தென் கிழக்கு ஆசியா வரை வெற்றி கண்ட Cholas - சோழர் வரலாறு மினி தொடர் 1
தஞ்சை பெரிய கோவில்
தஞ்சை பெரிய கோவில்canva

பல நூற்றாண்டுகளாக சோழர்கள் உருவாக்கிய கலை முயற்சிகள் காலம் காலமாக கைவினைஞர்களால் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டது. அவர்கள் அலங்காரப் பொருட்களைத் தொடர்ந்து தயாரித்து வந்தனர். தஞ்சை மற்றும் கும்பகோணத்திற்கு அருகே உள்ள சுவாமிமலை கிராமத்தில் பரம்பரை பரம்பரையாக இந்த கலைச் சின்னங்களை உருவாக்கி வருகின்றனர். பழங்காலக் கலை நூல்களில் குறிப்பிடப்படும் மறைந்து போன மெழுகு வார்ப்பு செயல் முறையை இக்கைவினைஞர்கள் பயன்படுத்துகிறார்கள்.

பூம்புகாரில் சோழர்களின் அரசு உருவாக்கிய கலை மையத்தில் அனைத்து சமூகங்களைச் சேர்ந்த மக்களையும் வேலைக்கு அமர்த்தப்பட்டார்கள். இது கைவினைக் கலைகளின் ஜனநாயகமயமாக்கலுக்கு ஒரு சிறந்த எடுத்துக் காட்டாகும். இதன் மூலம் கலைப்படைப்புகள் என்பது கோவிலில் மட்டும் குவிக்கப்படாமல் அவற்றின் பரவலான புழக்கம் மற்றும் ஏராளமான கலைப் பணியாளர்கள் இருப்பதையும் உறுதி செய்கிறது.

பொன்னியின் செல்வனும் சோழர் வரலாறும்

வல்லுநர்கள் கருத்துப்படி தென்னிந்தியா வரலாற்றின் பல இழைகளில் சோழர்களைப் பற்றி மிக விரிவாக எழுதப்பட்டுள்ளன. சோழர்கள் விட்டுச்சென்ற ஏராளமான கல்வெட்டுகள் மற்றும் நினைவுச் சின்னங்கள் மூலம் வரலாற்றை நாம் அறிகிறோம். ஆங்கிலேயர்களின் காலனிய ஆட்சியின் போது தென்னிந்தியாவைப் பற்றிய வரலாற்று ஆய்வின் முக்கியமான மையமாக சென்னை இருந்தது. சோழர்கள் விட்டுச் சென்ற கலைப் படைப்புகள் மூலம் அவர்கள் இந்த ஆய்வில் தனித்து நின்றார்கள்.

இதுபோக சோழர்கள் இந்தோனேசியா மற்றும் ஸ்ரீவிஜயா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒரு முன்னோடியில்லாத படையெடுப்புகளிலும் ஈடுபட்டார்கள். இந்தியா காலனிய ஆட்சியில் இருந்த போது இந்தியர்களுக்குத் தாமும் கடந்த காலத்தில் ஒரு பேரரசை ஆண்டிருக்கிறோம். அருகாமை நாடுகளை காலனிப்படுத்தியிருக்கிறோம் என்ற பெருமித அரசியல் உணர்வை சோழர்கள் குறித்த ஆய்வு வெளிக் கொண்டு வந்தது. சோழர்களின் வெளிநாட்டு வெற்றிகள் காலனித்துவம் என்றே குறிப்பிடப்படுகின்றன.

தென்கிழக்கு ஆசியாவில் இந்துக் காலனித்துவத்தின் பல அலைகள் எவ்வாறு இருந்தன என்பது பற்றிப் புகழ்பெற்ற தமிழ் வரலாற்றாசிரியர் நீலகண்ட சாஸ்திரி எழுதியுள்ளார். ஆனால் இது பொருத்தமானதோ, துல்லியமானதோ இல்லை. ஏனெனில் தென்கிழக்கு ஆசியாவில் இருந்த உலகளாவிய கலாச்சாரத்தில் சமஸ்கிருதக் கூறுகளும் ஒரு அங்கமே அன்றி அதுவே முழுமையல்ல.

சோழர்
பொன்னியின் செல்வன் : பழையாறை கோவிலின் சிறப்புகள் என்ன?

சோழர்கள் குறித்த புனைவுதான் பொன்னியின் செல்வன்

1950களில் சுதந்திரத்திற்கு பிந்தைய தேசிவாத சகாப்தத்தில் கல்கியின் பொன்னியின் செல்வன் எழுதப்பட்டது. இக்காலகட்டத்தின் முக்கியத்துவம் என்னவென்றால் ஒரே நேரத்தில் இந்திய வரலாற்றை எழுதுவதும், தமிழ் தேசியத்தைப் போற்றுவதும் நடந்தது. முதலாம் ராஜராஜனின் ஆரம்பக்கால நாட்களை வைத்து ஒரு வரலாற்று புதினமாக எழுதப்பட்ட பொன்னியின் செல்வன், கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளிவந்தது.

இத்தொடர் வெளிவந்த காலத்தில் சுதந்திரத்திற்குப் பிறகு பல்வேறு விவாதங்கள் நடந்து வந்தன. அதில் தமிழ்நாடு குறித்தும், தமிழ் கலாச்சாரம் குறித்தும், இந்திய ஒன்றியத்தில் தமிழகத்தின் இடம் என்ன என்பது குறித்தும் விவாதங்கள் நடந்து வந்தன.

கல்கி ஒரு சுதந்திரப் போராட்ட வீரராகவும் இருந்தார். தென்னிந்தியாவில் சுதந்திரத்திற்காகக் கடுமையாகப் போராடிய சுதந்திரப் போராட்ட வீரர்கள் விடுதலை பெற்ற புதிய இந்தியாவில் என்ன கண்டார்கள்? இங்கே தோன்றிய இந்தியா எனும் புதிய நாட்டில் இந்திதான் முதன்மையான மொழி என்பது நிலைநாட்டப்பட்டதோடு, பல உள்ளூர் மொழிகள் புறக்கணிக்கப்பட்டன. இந்தப் பின்னணியில் கல்கி போன்ற எழுத்தாளர்கள் தமிழக அரசர்களின் பெருமைமிக்க வரலாற்றை எழுத முனைந்ததில் ஆச்சரியமில்லை.

சோழர் கல்வெட்டுகள்
சோழர் கல்வெட்டுகள்

பொன்னியின் செல்வன் நாவல் மூலம் தனது வாசகர்கள் அனைவரும் பெருமைப்படத்தக்கத் தமிழகத்தின் கடந்த காலத்தை ஒரு கற்பனையான புனைவின் மூலம் வழங்க கல்கி முயன்றார். அவரது நாவல் இன்று வரை ஒரு பரவலான கலாச்சார செல்வாக்கையும், தமிழ் மக்களிடையே ஒரு வழிபாட்டு உணர்வையும் தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது.

இருப்பினும் திரைப்பட வரலாற்றாசிரியர் எஸ். தியோடர் பாஸ்கரன், தமிழ் வரலாற்றை எழுதுவதில் பொன்னியின் செல்வன் உண்மையில் எந்த முக்கியத்துவத்தையும் கொண்டிருக்கவில்லை என்கிறார். இது வணிகரீதியான ஒரு பாப்புலரான நாவல். இந்நாவல் ராஜாக்கள், போர்கள், சதிகள் போன்ற பலவற்றை உள்ளடக்கிய ஒரு சாகசக் கதை என்றும் அவர் கூறுகிறார்.

சுதந்திரத்திற்கு இறகு தமிழக வரலாறு, பண்பாட்டைப் போற்றுவது என்பதை தி.மு.க செய்து வந்தது. ஆனால் காங்கிரசுக்காரரும், சி.ராஜகோபாலாச்சாரியின் சீடருமான கல்கி திமுகவின் எதிர் முகாமில் இருந்தார். இப்போது கல்கி இருந்திருந்தால் ஒரு வலதுசாரியாகவே பார்க்கப்படுவார். இந்து மதத்தைக் கடுமையாக எதிர்க்கும் பௌத்த மதத்தின் மீது கல்கிக்கு கடும் விமர்சனங்கள் இருந்தன.

சோழர்
பொன்னியின் செல்வன் : திருமழபாடி வைத்தியநாதசாமி கோயிலின் சிறப்புகள் என்ன?

சோழர்கள் உன்னதமானவர்களா?

மேலும் சோழர் வரலாற்றைப் பற்றிய கல்கியின் விளக்கம் இடைக்காலத்தில் நடந்த சோழப்பேரரசின் அனைத்து வகையான முறைகேடுகளையும் மறைக்கும் முயற்சியாக இருந்தது. சோழப் பேரரசின் மன்னர்களை முற்றிலும் ஒழுக்கமான மற்றும் உன்னதமான நபர்களாகக் காட்டுகிறார் கல்கி. ஆனால் தாங்கள் உன்னதமானவர்கள் இல்லை என்பதை சோழர்கள் விட்டுச்சென்ற கல்வெட்டுகள் பலவும் கூறுகின்றன.

எடுத்துக்காட்டாகப் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் சோழர் இலங்கைப் போரில் ஈடுபட்டுள்ளது விவரிக்கப்படுகிறது. மேலும் அதில் சாதாரண மக்கள் சென்றுவரும் ஸ்தூபிகள், மற்றும் விகாரைகள் போன்றவற்றைத் தாக்க விரும்பவில்லை என்று ராஜராஜ சோழன் கூறுவதாக வருகிறது.

உண்மை என்ன?

சோழர்களின் சொந்த கல்வெட்டுகளே நகரங்களை எரித்ததையும், பல இடங்களில் கொடூரமாக சூறையாடியதையும் எடுத்துக் கூறுகின்றது. மேலும் இலங்கையில் பல ஸ்தூபிகள், விகாரைகளை உடைத்து உள்ளே இருந்த பொருட்களை சோழப் படைகள் கொள்ளையடித்தது பற்றிப் பல சிங்கள ஆதாரங்கள் குறிப்பிடுகின்றன.

சோழர்
வருகிறார் சோழர்: உலக நாகரிகத்தில் சோழர்களின் பங்களிப்பு - சோழர் வரலாறு மினி தொடர் 2
சோழர்கள்
சோழர்கள்Twitter

ஆந்திரா,கர்நாடகாவில் சோழர்கள் ஹீரோக்கள் இல்லை

பழங்கால மற்றும் இடைக்கால தமிழ் மக்கள் ஒரே மாதிரியான குழுவாக இருந்ததில்லை. மேலும் தென்னிந்தியாவிலேயே சோழர்களைப் பற்றிய கருத்துகள் வேறுபடுகின்றன என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். சான்றாக இன்றைய ஆந்திரப்பிரதேசம் மற்றும் கர்நாடகாவில் உள்ள மக்கள் சோழர்களை ஹீரோக்களாகப் பார்க்கப் போவதில்லை. சோழர்கள் தமது இடங்களை ஆக்கிரமித்துக் கொள்ளையடித்தார்கள் என்றே அவர்கள் பார்ப்பார்கள். இதற்கு ஆதாரமாகச் சோழர்களின் கல்வெட்டே இருக்கும் போது யார் மறுக்க முடியும்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com