ஜெகத்ரட்சகன் : திமுக-வின் அதானியா? - முழுமையான பின்னணி

40 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் இருக்கும் ஜெகத்ரட்சகன் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகராகவும் கலைஞரின் செல்லபிள்ளையாகவும் இருந்திருக்கிறார். இவரது மதிப்பு 65,000 கோடிக்கும் அதிகமென்றும், திமுகவின் வங்கியாகவே செயல்பட்டிருக்கிறார் என்றும் கூறுகின்றனர்.
ஜெகத்ரட்சகன் : திமுக-வின் அதானியா? - முழுமையான பின்னணி
ஜெகத்ரட்சகன் : திமுக-வின் அதானியா? - முழுமையான பின்னணிTwitter

மத்திய அமைப்புகளான வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறையின் நடவடிக்கைகள் சமீபத்தில் அதிகரித்துள்ளன. அந்த வகையில் திமுக அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பொன்முடி உள்ளிட்டோரைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத் ரட்சகனின் வீடு அலுவலகங்கள் உட்பட 50 இடங்களில் சோதனை நடத்தியது வருமானவரித்துறை.

ஜெகத்ரட்சகன் பெரும் தொழிலதிபராகவும், நல்ல பேச்சுத்திறன் உள்ள அரசியல்வாதியாகவும் இருந்துவருகிறார். இவர் மீதான வருமானவரித்துறை நடவடிக்கைகள் புதிதில்லை என்றாலும் இந்த முறை முக்கிய ஆதாரங்கள் சிக்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

40 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் இருக்கும் ஜெகத்ரட்சகன் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகராகவும் கலைஞரின் செல்லபிள்ளையாகவும் இருந்திருக்கிறார். இவரது மதிப்பு 65,000 கோடிக்கும் அதிகமென்றும், திமுகவின் வங்கியாகவே செயல்பட்டிருக்கிறார் என்றும் கூறுகின்றனர். யார் இவர்? இவரது சாம்ராஜ்ஜியம் எவ்வளவு பெரிது விரிவாக தெரிந்துகொள்ளலாம்.

ஜெகத்ரட்சகன் விழுப்புரத்தில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தவர். எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகனாக இருந்தவருக்கு அரசியலிலும் ஆர்வம் இருந்திருக்கிறது. எம்.ஜி.ஆரை தெரிந்துகொண்டு அவரிடம் பணிக்கு சேர்ந்ததுதான் இவரது அரசியல் வாழ்க்கையின் முதல்படி.

எம்.ஜி.ஆரின் குட் புக்கில் இருந்ததால் கட்சியில் பலரையும் தெரிந்துவைத்திருந்தார். எம்.ஜி.ஆர் திமுகவில் இருந்து பிரிந்ததும் அதிமுகவில் சேர்ந்தார்.

முதன்முதலாக 1980ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டவர், உத்திரமேரூரில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1984 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டவர் செங்கல்பட்டு தொகுதி எம்.பி ஆனார்.

எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பிறகு, எம்.ஆர். வீரப்பன், ஜெயலலிதா இடையிலான பிரச்னையில் வீரப்பன் பக்கம் நின்றார். பின்னர் திமுகவில் ஐக்கியமானார்.

ஜெகத்ரட்சகன் பெருமாள் பக்தர். ஆழ்வார்கள் ஆய்வு மையம் ஒன்றை உருவாக்கியுள்ளார். ஆழ்வார்கள் பற்றி அசத்தலாக உரையாற்றக்கூடியவர். அவரது பேச்சை கருணாநிதியே வியந்து பார்ப்பாராம்.

1999ம் ஆண்டு கருணாநிதியின் தலைமையில் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டார். 2004ம் ஆண்டு வீர வன்னியர் பேரவை என்ற தனி இயக்கத்தை உருவாக்கினார். வன்னியர் சங்கத்துக்கும் இந்த இயக்குத்துக்கும் உரசல்கள் ஏற்பட்டது.

2009ம் ஆண்டு கருணாநிதி பேச்சுக்கு கட்டுப்பட்டு திமுகவில் இணைந்தார். இவரது வன்னியர் பேரவையையும் திமுகவுடன் இணைத்துக்கொண்டார்.

காங்கிரஸ் மத்தியில் ஆட்சி செய்த காலகட்டத்தில் மத்திய இணையமைச்சராகவும் இருந்துள்ளார். பெரும்பாலும் எம்.பியாக செயல்பட்ட இவரிடம் எப்படி மிகப் பெரிய அளவில் சொத்து சேர்ந்தது?

ஜெகத்ரட்சகன் : திமுக-வின் அதானியா? - முழுமையான பின்னணி
உடைந்த ADMK - BJP கூட்டணி: நாடகமா? முடிவா? - திமுக, காங்கிரஸ் தலைவர்கள் சொல்வதென்ன?

அதிமுகவில் இருந்த காலகட்டத்திலேயே எம்.ஜி.ஆரின் பினாமியாக செயல்பட்டவர் ஜெகத்ரட்சகன். முதன்முதலாக தனியார் கல்லூரிகள் தொடங்கப்பட்டபோது சென்னை, செங்கல்பட்டு சுற்றுவட்டாரத்தில் பல மருத்துவ, பொறியியல் கல்லூரிகளைத் தொடங்கினார்.

கல்விநிலையங்கள் மட்டுமல்லாமல் தொழிற்சாலைகள், நிலக்கரி சுரங்கம், துறைமுகம், மருத்துவம், மின்சாரம், மீடியா, மதுபானம் எனப் பல தொழில்களில் கால்பதித்துள்ளார். இந்தியாவைத்தாண்டி இலங்கை மற்றும் பிற நாடுகளிலும் இவரது வணிகம் பரந்துவிரிந்திருக்கிறது.

ஜெகத்ரட்சகன் : திமுக-வின் அதானியா? - முழுமையான பின்னணி
செந்தில் பாலாஜி: எந்த வழக்கில் கைது செய்யப்பட்டார்? அரசியல் பின்னணி என்ன? முழு விவரம்

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தனது சொத்துமதிப்பு 114 கோடி எனக் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் இவரது உண்மையான மதிப்பு இதைவிட பலமடங்கு அதிகம் என அரசியல் வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

இதேப்போல அதிகம் பணம் விளையாடக்கூடிய ஒருவர் செந்தில் பாலாஜி. அவரும் அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்தவரே. திமுகவின் தேர்தல் செலவுகளை பார்த்துக்கொள்ளும் பெரும்புள்ளிகளாக இருப்பவர்களை குறிவைத்து மத்திய அரசு காய்நகர்த்துவதாக அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஜெகத்ரட்சகன் : திமுக-வின் அதானியா? - முழுமையான பின்னணி
"ஊழல் செய்ய 3 சட்டங்களை திருத்தியது பாஜக" - Ex. IAS சசிகாந்த் செந்தில் அதிரடி!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com