கலைஞர் 100: "திமுகவில் ஏன் சேரவில்லைன்னு கலைஞர் கேட்டார்" - கமல்ஹாசன் பேசியது என்ன?

கலைஞர் 100 புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய கமல் வெறும் புகழுரையாக இல்லாமல் பல சுவாரஸ்யமான சம்பவங்களைக் குறிப்பிட்டு பேசினார்.
கலைஞர் 100: "திமுகவில் ஏன் சேரவில்லைன்னு கலைஞர் கேட்டார்" - கமல்ஹாசன் பேசியது என்ன?
கலைஞர் 100: "திமுகவில் ஏன் சேரவில்லைன்னு கலைஞர் கேட்டார்" - கமல்ஹாசன் பேசியது என்ன?Twitter

கலைஞர் 100 புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு, முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இருந்து முதல் பிரதியை பெற்றுக்கொண்டார் கமல்ஹாசன்.

தொடர்ந்து அவர் பேசியதாவது, "விளையும் பொருளெதுவும் தானாக வீடுவந்து நுழையும் என்ற நோக்குடையோன் அல்லோன். என் பயணம் பெரிது. செல்லும் பாதை நெடிது. வழித்துயரம் தவிர்க்க துணைத்தேடேன், என் படைக்கு சிலர் போதும் நான் ஒருவனே போதும் என்னும் குலோதுங்கனின் கவிதை சரியாக பொருந்துவது.

ஆதிக்க சாதி வீட்டில் நாயனம் வாசிக்க மாட்டேன் என்று சிறுவயதிலேயே மறுக்கும் தன்மை அவருக்கு இருந்திருக்கு. கொள்கைக்காக காதலை விட்டுக்கொடுத்த கதையெல்லாம் நான் சிறுவயதிலேயே கேட்டிருக்கிறேன்.

இரண்டு முறை ஆட்சிக்கலைப்பு, இரண்டு முறை கட்சியில் பிளவு, மிசா, எமர்ஜென்சி, நள்ளிரவில் கைது, வயோதிகம் வந்து இறந்த பின்னும் தனக்கான இடம் கேட்டுப் போராட்டம். குளவிக்கூட்டின் புழுபோல கொட்டப்பட்டு கொட்டப்பட்டே தயாரிக்கப்பட்டவன் நான் என்பது அவர் கூற்று.

நான் வட்டார வழக்கில் சினிமா வசனம் பேசுவேன் '12Bல வள்ளுவர் இன்னாயா சொல்லிருக்கார்' என இந்த அளவு அவரது பேருந்தில் திருக்குறள் வைக்கும் திட்டம் பாதித்திருக்கிறது.

கலைஞர் எக்ஸ்பிரஸ் வேகத்தில் திரைக்கதை எழுதுவார் என கேள்விப்பட்டிருக்கிறேன். கலைவாணர் படத்துக்கு எழுதிக்குவிக்கும் போது காகிதம் பறக்குமாம். அதை கலைவாணர் எடுத்து பொறுக்கி அடுக்கி வைப்பாராம்.

உங்களிடம் பேச வேண்டியதை எழுதிக் கொண்டுவந்திருக்கிறேன். ஆனால் 69 ஆண்டுகளுக்கு முன்னர் கலைஞர் எழுதிய வசனம் நினைவில் இருக்கிறது. நடிக்க வருபவர்களை கலைஞர் வசனம் தான் பேசச்சொல்வார்கள், வாய் சுத்தமாக இருக்கிறதா என பார்ப்பது இவரது வசனத்தை வைத்துதான்.

நான் கலைஞரிடம் திரைக்கதைகளைப் பகிர்ந்துகொள்ள தொடங்கிய பிறகு இத்தாலியில் எரிமலை குழம்பால் செய்யப்பட்ட பேனா ஒன்றை அவருக்கு பரிசளித்தேன். சரியான கைகளில் பேனாவைக் கொடுத்திருக்கிறேன் என்ற பெருமை எனக்கு உண்டு.

எனக்கு முதல் 100 நாள் படம் 'சட்டம் என் கையில்'. அப்போது எம்.ஜி.ஆர் ஆட்சி நடந்துகொண்டிருந்தது. விழாவில் கலைஞர் பங்கெடுத்திருந்தார். தயாரிப்பாளர் டி.என்.பாலுவை விழாவிலேயே கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

நான் தயாரிப்பளருக்கு நன்றி சொல்ல திரும்பியபோது அவர் மேடையில் இல்லை. அடுத்ததாக பேசிய கலைஞர், "சட்டம் என் கையில் என்ற படத்தை இயக்கி தயாரித்த நண்பர் சட்டத்தை தன் கையில் எடுத்துக்கொண்டுவிட்டார், தப்பித்து சென்றுவிட்டார்" என நகைச்சுவையோடு பேசினார். அப்போது காவலர்கள் சுற்றி நின்றுகொண்டிருந்தனர்.

டி.என்.பாலுவை கடத்தி கொண்டு சென்றது என் அண்ணன் சாருஹாசன். திமுக வக்கீல் அவர். இதற்காக நான் பல இடங்களில் மன்னிப்புக் கேட்கவேண்டியிருந்தது.

கலைஞர் 100: "திமுகவில் ஏன் சேரவில்லைன்னு கலைஞர் கேட்டார்" - கமல்ஹாசன் பேசியது என்ன?
"'துணிவு' இல்லாதவனுக்கு தூக்கம் இல்லை" வைரலாகும் கலைஞர் கருணாநிதியின் 9 வருட பழைய ட்வீட்

கலைஞரை குஷி படுத்தவே நான் குள்ள அப்புவாக அவரிடம் சென்று அபூர்வ சகோதரர்கள் படத்திற்கு பரிசு வாங்கினேன். அப்போது என்னை பார்த்தவர் ஒரு ரசிகனாகவே மாறிவிட்டார்.

கலைஞர் எனக்கு கலைஞானி என்ற பட்டத்தைக் கொடுத்தார். தசாவதாரம் படத்தில் மணல்கொள்ளை பற்றி என்னை பேசச் சொன்னது அவர்தான். தசாவதாரம் படத்தை பார்த்துவிட்டு என் கண்ணத்தை பிடித்து கிள்ளினார். என்னயா இங்கிலீஸ் படம் மாதிரி எடுத்துருக்கான் என பல இடங்களில் பாராட்டி பேசியிருக்கிறார்.

என்னை ஏன் இன்னும் திமுகவில் சேரவில்லை எனக் கேட்டு ஒரு தந்தி அனுப்பினார். எனக்கு பயமும் பதற்றமும் ஏற்பட்டது என்ன பதில் சொல்வதெனத் தெரியவில்லை. பதில் அனுப்பாமல் இருந்துவிட்டேன். ஆனால் அதைப் புரிந்துகொண்டு அவர் என்னிடம் எதுவும் கேட்காமல் விட்டுவிட்டார்." எனத் தொடர்ந்து பேசினார் கமல்ஹாசன்.

கலைஞர் 100: "திமுகவில் ஏன் சேரவில்லைன்னு கலைஞர் கேட்டார்" - கமல்ஹாசன் பேசியது என்ன?
”ராஜராஜ சோழன் காலத்தில் இந்து மதம் கிடையாது” : வெற்றிமாறனுக்கு கமல்ஹாசன் ஆதரவா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com