நாடு முழுவதும் பருவமழை தொடங்கிவிட்டது. வழக்கத்துக்கு மாறாக பல இடங்களில் பருவகாலம் தொடங்குவதற்கு முன்பே கிளைமேட் மாற்றிவிட்டது.
சிலர் இந்த காலநிலைக்கு சுற்றுலா செல்ல வேண்டும் என்று நினைப்பார்கள். சாரல் மழைத்துளியுடன், இதமான குளிர் காற்று வீச, நீங்கள் ஒரு இடத்தில் தங்கினால் எப்படி இருக்கும்?
அப்படி தமிழ்நாட்டில் டெண்ட் போட்டு தங்க இருக்கும் மலைப்பிரதேசங்கள் குறித்து தான் சொல்லபோகிறோம்.
தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமாக இருக்கும் மலைவாசஸ்தலங்களில் ஒன்று கொடைக்கானல். இங்கு இருக்கும் அழகிய ஏரிகள், பனிமூடிய மலைகள் நம்மை பிரமிக்க வைக்க தவறாது. அதுவும் இந்த மாதம் சென்றால் சொல்லவே வேண்டாம், அவ்வளவு இதமாக இருக்கும்.
கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பல அமைதியான முகாம் இடங்கள் உள்ளன. கேம்பிங் மட்டும் இல்லாமல் கிளம்பிங் இடங்களும் உள்ளன.
மேற்குத் தொடர்ச்சி மலையின் பசுமையான காடுகளுக்கு நடுவே அமைந்துள்ள மேகமலை பல ரகசிய இடங்களை மறைத்து வைத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
எழில் கொஞ்சும் இயற்கையை நீங்கள் அனுபவிக்க விரும்பினால் மேகமலை சரியான தேர்வாக இருக்கும். மலையேற்றம் செய்து அழகிய நீரோடைகள், பசுமையான மலை என பல இடங்களை பார்க்கலாம்.
நாமக்கல்லில் இருந்து 50 கிமீ தொலைவில் அமைந்துள்ள கொல்லி மலை, அதன் சாகசம் நிறைந்த வளைவுகளால் 'மௌண்டெயின் ஆஃப் டெத்' என அழைக்கப்படுகிறது.
1000 முதல் 1300 மீ உயரத்தில் அமைந்துள்ள இது தோராயமாக 70 ஹேர்பின் வளைவுகள் கொண்டுள்ளது. இந்த மலைகளை பெரிதாக யாரும் தீண்டவில்லை.
கடல் மட்டத்திலிருந்து 6000 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த அழகிய மலைவாசஸ்தலம், பசுமையான தேயிலைத் தோட்டங்கள், ஆழமான பள்ளத்தாக்குகள், நீர்வீழ்ச்சிகள் என இயற்கை காட்சிகளை காண அவ்வளவு இடங்கள் உள்ளன.
இந்த இடத்தில் முகாமிட்டு இரவில் தங்கி பாருங்கள், மறக்க முடியாத இரு அனுபவம் கிடைக்கும்.
மேற்குத் தொடர்ச்சி மலையின் பசுமைப் பரப்பில் மறைந்துள்ள ஏற்காடு, இயற்கை அழகுடன், அமைதியைத் தேடி பயணிப்பவர்களுக்கு சிறந்த இடமாகும்.
ஏற்காட்டில் உள்ள அழகிய இடங்களில் ஏதேனும் ஒரு இடத்தில் கூடாரங்களை அமைத்து அதன் அழகை ரசிக்கலாம். ஏற்காடு ஏரி மற்றும் கிள்ளியூர் நீர்வீழ்ச்சி போன்ற இடங்கள் கேம்பிங்கிற்கு ஏற்ற ஸ்பாட்டாக இருக்கும்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust