மாவீரன் : சிவகார்த்திகேயன் பேசும் சென்னையின் அரசியல் - படம் சொல்வதென்ன?

சிதைந்துப் போயிருக்கும் மக்களின் வாழ்க்கையில் இருந்து அவர்கள் வசிக்கும் தரமற்ற கட்டிடங்களை மையக் கருவாகக் கொண்டு நகர்ந்தது மாவீரன் படத்தின் கதை.
மாவீரன் : சிவகார்த்திகேயன் பேசும் சென்னையின் அரசியல் - படம் சொல்வதென்ன?
மாவீரன் : சிவகார்த்திகேயன் பேசும் சென்னையின் அரசியல் - படம் சொல்வதென்ன?Vikatan/ Maaveeran

மாவீரன் படம் தொடங்கப்பட்ட போதே இந்த படம் பேசும் அரசியல் யாரையும் குறிப்பிட்டதல்ல என்ற மறுப்பு திரையிடப்பட்டது.

ஆனால், அந்த படத்தில் பேசப்படும் பிரச்னைகளை பார்க்கும் போது சென்னையில் இருந்து துரத்தியடிக்கப்பட்ட மக்களை பற்றி நினைக்காமல் இருக்க முடியாவில்லை.

சிங்கார சென்னை, சென்னை 2000, அழகுமிக சென்னை , சீர்மிகு சென்னை, ஸ்மார்ட் சிட்டி எனப் பல பெயர்களில் சென்னையை அழகான ஊராக மாற்ற அரசு பல திட்டங்களை மேற்கொள்கிறது.

இதற்காக பூர்வீகமாக சென்னையில் வாழ்ந்த மக்களிடம் இருந்து நிலங்கள் பறிக்கப்பட்டன. சென்னையில் ஆங்காங்கே குடிசைப் பகுதியில் இருந்து விரட்டியடிக்கப்பட்டு அடுக்கு மாடிகளில் அடைக்கப்பட்ட மக்களின் கதையைத் தான் மாவீரன் பேசுகிறது.

1971ம் ஆண்டு முதன் முதலாக குடிசை மாற்று வாரியம் கொண்டுவரப்பட்டது. கலைஞர் கருணாநிதி கொண்டுவந்த அந்த திட்டம் சென்னையில் உள்ள குடிசைகளை அங்கீகரித்து, அவர்கள் இருந்த இடத்திலயே கௌரவமாக வசிக்கும் வண்ணம் அடுக்குமாடிகளை கட்டிக்கொடுத்தது.

KP Park
KP Park Vikatan

1990க்கு மேல் உலக வங்கியின் நிதி சென்னை குடிசை மாற்று வாரியத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. சென்னையின் மக்கள் மீது எந்த ஒரு அனுதாபமும் காட்டாத சர்வதேச நிறுவனங்கள் அவர்கள் வாழப்போகும் இடத்துக்கான திட்டங்களை உருவாக்கின.

விளைவாக, சென்னையில் இருந்து 20,30,40 கிலோ மீட்டர் தூரத்துக்கு மக்கள் விரட்டியடிக்கப்பட்டனர். அவர்கள் வேலைப்பார்க்கும் பூக்கடைகள், செருப்புக் கடைகள், அலுவலகங்கள், துப்புறவு செய்யும் இடங்கள், பள்ளிக் கூடங்கள் என எல்லா வாழ்வாதாரத்தையும் இழந்து கண்ணகி நகர், பெரும்பாக்கம் பகுதிகளுக்கு குடியேறினர்.

ஆண்களுக்கும் பெண்களுக்கும் வாழ்வாதாரம் கிடையாது. வறுமை அவர்களது வீட்டில் தீயாக பற்றிக்கொண்டது. அதனால் கொசுங்கியது குழந்தைகளின் வாழ்க்கை தான்.

பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லாத இளைஞர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளனர். பெண்கள் மீதான பாலியல் அத்துமீறல்கள், குழந்தை திருமணங்கள் அதிகரித்தன.

செம்மஞ்சேரி
செம்மஞ்சேரிvikatan

செம்மஞ்சேரியில் கட்டிக்கொடுக்கப்பட்ட வீடுகளின் அளவு 158 சதுர அடி தான். அந்த வீட்டில் வளர்ந்த குழந்தைகள் இருக்க முடியாது என்பதனால் 15,16 வயதில் பெண்களைத் திருமணம் செய்துகொடுப்பது இன்றளவும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இப்படி சிதைந்துப் போயிருக்கும் மக்களின் வாழ்க்கையில் இருந்து அவர்கள் வசிக்கும் தரமற்ற கட்டிடங்களை மையக் கருவாகக் கொண்டு நகர்ந்தது மாவீரன் படத்தின் கதை.

இது கே.பி பார்க் பகுதியில் கட்டப்பட்ட கட்டடங்களை நேரடியாக குறிப்பிட்டது.

மாவீரன் : சிவகார்த்திகேயன் பேசும் சென்னையின் அரசியல் - படம் சொல்வதென்ன?
ஈரான் : உச்சத்தில் வறுமை, பாலியல் தொழில் செய்யும் பெண்கள் - கண்ணீர் சிந்த வைக்கும் நிலைமை

அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட இந்த வீடுகள் மிகவும் மோசமான நிலையில் கட்டப்பட்டிருந்ததால் மக்களால் அங்கு குடியிருக்க முடியவில்லை.

இவர்களை அடுக்கு மாடி வீடுகளில் குடியமர்த்தாமல் எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத தகர கொட்டகைகளில் தங்க வைத்தனர்.

அடுக்குமாடி வீடுகளை ஆராய்ந்த ஐஐடி நிறுவன நிபுணர்கள் அவை தரமற்றதாக கட்டப்பட்டிருப்பதை உறுதி செய்தனர். அந்த கட்டடத்தில் வீடு இருந்தும் தகர கொட்டகையில் இருந்த மக்கள் தங்களது பழைய வீடுகள் இடிக்கப்பட்டதால் வேறு வழியின்றி தரமற்ற கட்டடங்களில் வசிக்கின்றனர்.

KP Park
KP ParkVikatan

அவர்களுக்கு தண்ணீர் வசதி கிடையாது, லிஃப்ட் வசதியும் கிடையாது. சுகாதாரம் இல்லாத கட்டடங்கள். தொட்டால் கையோடு வரும் சுவர்களுக்கு நடுவில் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். தேவையான தண்ணீரை 9 மாடி தூக்கிச்செல்ல வேண்டிய நிலை இருக்கிறது.

இதேநிலையில் வாழும் மக்களிடம் ஒரு மாவீரன் தோன்றி, இதற்கு காரணமான அரசியல்வாதியை எதிர்ப்பதும், இடிந்துவிழும் கட்டடத்தில் இருந்து மக்களை காப்பாற்றுவதும் தான் சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் படத்தின் கதை.

இதில் ஃபேப்டஸி அம்சங்களை சேர்த்து, நகைச்சுவையுடன் ரசிக்கும் விதமாக வழங்கியுள்ளார் இயக்குநர் மடோன் அஸ்வின்.

மாவீரன் : சிவகார்த்திகேயன் பேசும் சென்னையின் அரசியல் - படம் சொல்வதென்ன?
அரசியல் முதல் பயங்கரவாதம் வரை : உலகையே கட்டுப்படுத்தும் 13 குடும்பங்கள் - யார் இவர்கள்?

இந்த தரமற்ற கட்டடத்தை கட்டிய பிஎஸ்டி கட்டுமான நிறுவனம், இப்போது தமிழக அரசின் ஃபின் டெக் கட்டுமானத்தைக் கட்டும் அடுத்த டெண்டரை எடுத்துள்ளது.

மக்கள் நலனுக்காக தொடங்கப்பட்ட குடிசை மாற்று வாரியம் ஏதோ கட்டுமான டெண்டர்விடும் நிறுவனம் போல நடந்துகொள்வது தான் இந்த நிலைக்கு காரணம்.

இன்னும் துயரமாக, பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா என்ற பெயரில் மத்திய அரசு குடிசை மாற்று வீடுகளை வழங்க மக்களிடமே 1.5 லட்சம் பணம் கேட்கிறது. இந்த அவலங்களைத் தட்டிக் கேட்க நிஜத்திலும் பல மாவீரர்கள் வருவார்களா?

மாவீரன் : சிவகார்த்திகேயன் பேசும் சென்னையின் அரசியல் - படம் சொல்வதென்ன?
சென்னை: மாநகருக்குள் ஒரு நரகம்- 22 ஆண்டுகளாக வன்முறை, நோய், வறுமையில் வாடும் மக்களின் கதை!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com