எலான் மஸ்க் : புகைப்படங்களை ஏலம் விட்ட கல்லூரி காதலி

எலான் மஸ்க் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டு இருந்த போது ஜெனிபர் க்வின் (Jennifer Gwynne) என்பவருடன் காதல் மலர்ந்ததுள்ளது.
எலான் மஸ்க்
எலான் மஸ்க்Twitter
Published on

எலான் மஸ்க்கின் கல்லூரி நாட்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவரது முன்னாள் காதலியான ஜெனிபர் க்வின் ஏலம் விட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க் வயதானவர்கள் முதல் இளம் தலைமுறையினர் வரை பலரின் ரோல் மாடலாக திகழ்ந்து வருகிறார்.

ஆனால் அவரின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பார்த்தால் பல திருமணங்கள், பல காதலிகள் என வாழ்க்கையை கடந்து வந்துள்ளார்.

இந்நிலையில் எலான் மஸ்க்-ன் கல்லூரி காதலியான ஜெனிபர் க்வின் (Jennifer Gwynne) எலான் மஸ்க் உடனான தனது புகைப்படங்களை ஏலம் விட்டுள்ளார்.

இந்த அரிய புகைப்படங்கள் RR என்ற ஏல நிறுவனத்தால் ஆன்லைனில் விற்கப்படுகிறது. இந்த ஏலம் குறைந்தபட்சம் $100 இல் தொடங்குகிறது. இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 8000 ரூபாய்.

எலான் மஸ்க்
சேவியர் அலெக்சாண்டர் மஸ்க் : தனது பாலினத்தை மாற்றிக் கொள்ள விண்ணப்பித்த எலான் மஸ்க் மகள்

இந்த புகைப்படங்கள் மஸ்க் 20 வயது கல்லூரி மாணவனாக இருக்கும் அரிய புகைப்படங்கள் ஆகும். எலான் மஸ்க் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டு இருந்த போது ஜெனிபர் க்வின் (Jennifer Gwynne) என்பவருடன் காதல் மலர்ந்ததுள்ளது.

Summary

தற்போது ஜெனிபர் க்வின் தென் கரோலினாவில் தனது வளர்ப்பு மகனுடன் வசித்து வருகிறார்.

எலான் மஸ்க்
எலான் மஸ்க் கூகுள் இணை நிறுவனரின் மனைவியோடு உறவா? என்ன கூறுகிறார் அவர்?

இருவரும் காதலித்த போது இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை RR அக்ஷன் மூலம் தனது வளர்ப்பு மகனின் கல்விக் கட்டணத்திற்குப் பணம் திரட்டுவதற்காக விற்பனை செய்கிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் படுவைரலாக பகிரப்பட்டு வருகிறது.

எலான் மஸ்க்
எலான் மஸ்க் தந்தை : 70 வயதில் வளர்ப்பு மகளோடு வாழ்ந்து குழந்தை பெற்றுக் கொண்ட எரால் மஸ்க்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com