அபுதாபி வணிகத்தில் கொடிகட்டி பறக்கும் இந்திய வம்சாவளி பெண்- யார் இவர்?

“சில்லறை வர்த்தகம் எனது இரத்தத்தில் கலந்த ஒன்று" என்கிறார் 28 வயது பெண் தொழிலதிபரான ஆலியா ஜஷன்மால்
ஆலியா ஜஷன்மால்
ஆலியா ஜஷன்மால்Newssense
Published on

“சில்லறை வர்த்தகம் எனது இரத்தத்தில் கலந்த ஒன்று" என்கிறார் 28 வயது பெண் தொழிலதிபரான ஆலியா ஜஷன்மால். அவரது பெற்றோர் இந்திய, சிரிய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். அமீரகத்தின் அபுதாபியில் பிறந்து வளர்ந்த ஆலியாவின் குடும்பம் 1919 முதலே தொழில் முனைவோர் குடும்பமாக உள்ளது. சிறு வயது முதலே ஆலியா இத்தகைய தொழில் குடும்பத்தில் வளர்ந்தவர்.

அவரது தாத்தா 50 களிலேயே ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வந்தவர். தனது தொழிலால் குடும்பத்தின் வணிகத்தை விரிவுபடுத்தினார். அவரது பாதையில் தான் அடிப்படை வர்த்தகப் பாடங்களைக் கற்றுக் கொண்டதாக கூறுகிறார் ஆலியா.

2021 ஆம் ஆண்டில் அவரது வணிக கூட்டாளியான அல்கேஷ் த்ராவணியோடு சேர்ந்து தொழிலை துவங்கினார் ஆலியா. இணைய வழி சில்லறை வர்த்தகம் தான் அவரது துறை. உலகம் முழுவதுமுள்ள ஃபேஷன், அழகு, வீட்டுப் பொருட்கள், செல்லப்பிராணிகள் பராமரிப்பு பொருட்கள் அனைத்தையும் ஒன்றிணைத்து ஆன்லைனில் விற்பனை செய்கிறார். பல வேறுபட்ட கலாச்சாரங்களை ஒரு கூரையின் கீழ் இணைக்கும் இம்முயற்சி தனது சொந்தக் கனவுத் திட்டம் என்கிறார்.

ஆரம்பத்தில் அலுவலகம் பிடித்து வணிக உரிம கட்டணம் செலுத்தி பிறகு சரக்கு இருப்பு, பார்சல் அனுப்புவது, விளம்பரம், சந்தைப்படுத்தல், இணையதளம் என தொழிலை அமைத்துக் கொண்டார். அவரது கூட்டாளியான அல்கேஷ் தனது சொந்தப் பணத்தை இந்த தொழிலில் முதலீடாக போட்டிருக்கிறார். இவர்களது இந்த புதிய ஆன்லைன் சில்லறை வர்த்தக கடை முதலீட்டில் மேற்கண்ட செலவுகள் போக இணையக் கட்டணம், கணக்கு மென்பொருள் கட்டணம், புகைப்படச் செலவு, பார்சல் பொருள் செலவு ஆகியவையும் அடங்கும்.

Abu Dhabi
Abu DhabiTwitter

தொழிலின் எதிர்காலத்தை முன்னிட்டு விலைகளை குறைத்து விற்பனை செய்தல்:

துவக்கத்தில் கோவிட் 19 காரணமாக சிரமங்கள் இருந்தன. பின்னர் பொருட்களை வாங்குவதிலும், விற்பதிலும் விலைகளோடு சமரசம் செய்து கொண்டனர். குறைந்த விலையில் விற்பதால் எதிர்காலத்தில் நமது விற்பனை பெருகும் என்கிறார் ஆலியா. மேலும் பொருட்களை ஒரு ஆண்டுக்கு கொள்முதல் செய்யும் போது ஆறு மாத கட்டணத்தை முன்பணமாக செலுத்துவதாகவும் கூறுகிறார். இதனால் அவருக்கு பொருட்களை விற்போர், வாங்குவோர் இருவருமே பயனடைகிறார்கள். இவருக்கும் பொருட்களை வாங்கும் போது தள்ளுபடி விலை கிடைக்கிறது.

ஆலியா ஜஷன்மால்
பாகிஸ்தான் வாழ் தமிழர்களின் வரலாறு - அட்டகாச தகவல்கள் இதோ
Abu Dhabi
Abu DhabiFacebook

தொழிலின் முக்கியமான ஆரம்ப கட்டத்தில் தகுதியான தொழிற் கூட்டாளியோடு பணியாற்றுதல்:

தொழிலின் நிதித் தேவைக்காக தனது வணிக கூட்டாளியை சார்ந்திருப்பதாகவும், அவரை சரியாக தேர்ந்தெடுத்தால்தான் தொழிலின் எதிர்காலம் வெற்றி பெறும் என்கிறார் ஆலியா. தொழில் நிலை பெறுவதற்கு வாடிக்கையாளர் சேவை முக்கியமானது என்கிறார். தனது தொழிலின் நோக்கம் அதீத ஆடம்பரமான பொருட்கள் அனைத்தையும் ஒரு வாடிக்கையாளர் எளிதாக ஒரு தளத்தில் பெறும் வகையில் இருக்க வேண்டும் என்கிறார். நிறுவனத்தின் இலாபம் மீண்டும் தொழிலிலேயே முதலீடு செய்யப்படுவதாகவும் கூறுகிறார்.

ஆலியா ஜஷன்மால்
ஜோய் ஆலுக்காஸ் : தொட்டது எல்லாம் பொன் - அரபு நாட்டில் கோலோச்சும் இந்தியர்
ஆலியாவின்  சேமிக்கும் பழக்கம்
ஆலியாவின் சேமிக்கும் பழக்கம்Twitter 

ஆலியா ஜஷன்மால் கற்றுக் கொண்ட மூன்று முக்கியமான பாடங்கள்

1. தெளிவான பயன்பாட்டு உத்தி.

ஆலியா ஸ்விட்சர்லாந்து நாட்டின் உறைவிடப் பள்ளி ஒன்றில் படித்தார். அங்கே அவருக்கு கிடைத்த வராந்திர உதவித் தொகையை வைத்து தனது செலவுகளுக்கான திட்டத்தை போட்டுப் பழகினார். இதனால் பணம் வாரம் முழுவதும் காலியாகாமல் இருக்கும். இப்பழக்கத்தின் மூலம் பணத்தை எந்த இனத்திற்கு எப்படி எப்போது செலவு செய்ய வேண்டுமென்பதை கற்றுக் கொண்டார். தான் செலவு செய்யும் பணம் எங்கே போகிறது என்பதில் தெளிவு வேண்டும். இது தான் கற்றுக் கொண்ட முதல் வணிக பாடம் என்கிறார்.

2. நல்ல வாடிக்கையாளர் சேவையின் பங்கை அறிய பல்வேறு கலாச்சாரங்களைச் சேர்ந்தவர்களுடன் பணியாற்றுவது.

ஆலியாவின் வேலை ஆஸ்திரேலியப் பகுதி பசிபிக் பெருங்கடலில் இருக்கும். பிரெஞ்சு பாலினேசிய தீவான டஹிடியில் துவங்கியது. அங்கே அவர் சர்வராக பணி புரிந்தார். பின்னர் ரிசார்ட் ஒன்றின் காலை உணவு அளிக்கும் உணவகத்தின் தலைமை சர்வராக பணியாற்றினார். பிறகு அமெரிக்கா சென்று நியூயார்க்கைச் சேர்ந்த ஓட்டல் ஒன்றில் விற்பனை ஒருங்கிணைப்பாளராக பணியாற்றினார்.

ஓட்டல் துறையில் பணியாற்றியது தன் வாழ்க்கையில் மிகவும் மகிழத்தக்க அனுவபங்கள் பெறக் காரணம் என்கிறார் ஆலியா. இதன் மூலம் பரந்து பட்ட பல்வேறு கலாச்சாரங்களைச் சேர்ந்த மக்களை சந்திப்பதும் அவர்களின் தேவைளை புரிந்து கொள்வதும் நல்ல அனுபவம் என்கிறார்.

ஓட்டல் துறைக்கு பிறகு அவர் ஃபேஷன் துறைக்கு மாறினார். அங்கே தனது நண்பரோடு ஒரு சொந்த பிராண்டை நிறுவி விற்பனை செய்தார். இதன் மூலம் வாடிக்கையாளர் சேவையின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டார்.

3 மாதாந்திர வருமானத்திலிருந்து சேமிக்கும் பழக்கம்.

இத்தனை ஆண்டுகள் பணியாற்றிதில் இருந்து மாத வருமானத்தில் 10% சேமிக்க கற்றுக் கொண்டேன் என்கிறார். ஒரு தொழிலை ஆரம்பிப்பதற்கு முன்பு இத்தகைய சேமிக்கும் பழக்கம் தேவை என்பதோடு அதற்காக தமது சொந்த வரவு செலவு திட்டத்தை அமைத்துக் கொள்ள வேண்டும் என்கிறார் ஆலியா.

என்னதான் பரம்பரை தொழில் முனைவோர் குடும்பமாக இருந்தாலும் சொந்த முறையில் இந்த உலகையும், தொழிலையும் புரிந்து கொள்வதற்கு ஆலியாவின் அனுபவம் ஒரு பாடம். அப்போதுதான் ஒரு தொழிலை ஆரம்பிக்கும் தொழில் முனைவோரால் வெற்றி பெறமுடியும் என்பதை அவரது வாழ்க்கை உணர்த்துகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com