மனுஷங்க - 2 : 'அந்த சிரிப்பு போதும் சார்' - வாழ்வின் மகோன்னதத்தை பேசும் நிஜ பேரன்பு கதை

காளியப்பனின் 25 வயது மகள் சுதாவிற்கு நடக்கவோ, பேசவோ கேட்கவோ முடியாது. இன்னும் குழந்தையாகவே இருக்கும் சுதாவை பராமரிக்க நிதி உதவி ஏதுமின்றி பரிதவித்து வருகிறார் காளியப்பன்.
சுதா

சுதா

Twitter

(இந்த நவயுக காலத்தில் உலகத்தின் அனைத்து மூலைகளில் நடக்கும் விஷயங்களும் நமக்கு சுலபமாக கிடைத்துவிடுகிறது. ஆனால், நம் பக்கத்துவீட்டில், நம் தெருவில் இருக்கும் சக மனிதர்களின் கதைகளை தவிர, அப்படியான கதைகளை உங்களிடம் வந்து சேர்க்கும் சிறு முயற்சி இது. 10 பாகங்களாக வர இருக்கும் இந்த தொடரின் 2ம் பகுதி இங்கே)

எனக்கும் வயசு அம்பைத்திஅஞ்சு ஆகிப்போச்சு,அடுத்தடுத்து வீட்டுல மரணங்கள், நானும் இல்லைன்னா எம்புள்ள நிலம என்ன ஆகும்னு தெரியல, அந்த சாமி கண்ணத்தொறக்கணும்.. பேசும்போதே தொடரமுடியாமல் அழுக தொடங்குகிறார் காளியப்பன்.

காளியப்பனின் 25 வயது மகள் சுதாவிற்கு நடக்கவோ, பேசவோ கேட்கவோ முடியாது. இன்னும் குழந்தையாகவே இருக்கும் சுதாவை பராமரிக்க நிதி உதவி ஏதுமின்றி பரிதவித்து வருகிறார் காளியப்பன்.

தந்தையுடன் சுதா

தந்தையுடன் சுதா

Twitter

‘குழந்தை மாதிரி அவ'

“எனக்குச் சொந்த ஊரு இதே திண்டுக்கல்லு தான், பக்கத்துல இருக்க புளியராஜக்காப்படியில தான் இருக்கேன். சைக்கிள்ல போயி கிராமம் கிராமமா கொய்யாப்பழம் வித்துட்டு வர்றது தான் என்னோட பொழப்பு.எனக்கு மொத்தம் நாலு புள்ளைங்க.மூணு பொம்பள பிள்ளைங்க கடைசியா ஒரு பையன். சுதா தான் எனக்கு ரெண்டாவது பொண்ணு, சின்ன வயசுலயே பாக்காதா ஆஸ்பத்திரி இல்ல, போகாதா கோவில் இல்ல வேண்டாத சாமி இல்ல, ஆனா இதான் தலையெழுத்துன்னு இருந்துட்டோம், இப்போ வரைக்கு சுதா எங்களுக்கு பொறந்த குழந்தை மாதிரி தான். மீதி ரெண்டு பொண்ணுங்கள கல்யாணம் பண்ணிக்குடுத்துட்டேன்.கடைசி பையன் பத்தாவது வரைக்கும் படிச்சான், அதுக்கு மேல வசதி இல்ல, இப்போ எலக்ட்ரிசியன் வேலைக்கு போயிட்டு இருக்கான்.”

“திண்டுக்கல் கலெக்டர் ஆபீஸ் முன்னாடி தான் கொய்யாப்பழக்கடை போட்டுருந்தோம். அப்போ சுதாவையும் எங்க கூடவே தான் வச்சுருப்போம், அப்பப்போ கடைக்கு வந்தா அப்ப இருந்த கலெக்டர் ஜீவரத்தினம் நலம் விசாரிப்பாரு,அப்படி ஒரு நாள் சுதாவை பார்த்தவரு தான், மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டத்துல ஊக்கத்தொகை குடுக்க வழி பண்ணிக்குடுத்தார்,அவரோட வழிகாட்டுதல்ல அப்ப ஐநூரு ரூபாய் கிடைச்சுச்சு. கொஞ்ச வருசத்துல என்னோட மனைவிக்கு கர்பபையில கேன்சர் வந்து இறந்து போயிட்டா. அவ போயி பதினாரு வருஷம் ஆச்சு. அவளுக்கும் ட்ரீட்ட்மெண்டுனு அலையாத இடம் இல்ல. அவ இறந்துருவான்னு டாக்டர்கள் சொன்னப்போ , சொந்தக்காரங்க எல்லாம் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கன்னு சொன்னப்போஎன் மனைவி சொன்னது இதான், மத்த மூணு புள்ளைக கூட பொழச்சுக்குங்க, நடக்க முடியாத இந்த புள்ளைய புதுசா வர்றவ பார்க்கலைன்னா அந்த பாவத்துக்கும் நாம ஆளகுற மாதிரி ஆகிரும்னு கையில சத்தியம் வாங்கிக்கிட்டா, உன்ன தவிர எனக்கு யாருமில்லைன்னு சத்தியம் பண்ணிக்குடுத்தேன்,” என்றார் வைராக்கியத்துடன்.

சுதா

சுதா

Twitter

“ஒத்தையில நிக்கேன்"

முன்னாடி வேலைக்குன்னு போனப்போ, சுதாவ எங்க அப்பா வீட்டுல இருந்து பார்த்துப்பாரு..அவரும் ஆறு மாசத்துக்கு முன்ன இறந்துட்டாரு. இப்போ யாரும் இல்லாம ஒத்தையில நிக்கிறேன். அப்பா இறந்த பிறகு ,என்கிட்ட இருந்து பழகிட்டா,என் கையில ஒண்ணும் இல்ல,எல்லாம் அந்த ஆண்டவ மேல பாரத்தப் போட்டுட்டு வெளில சொல்ல முடியாம நிக்கிறேன் தம்பி என்றார்.

நாலு வயசு புள்ளையா தான் ஒடம்பளவில இருக்கா எம்மவ.. காலையில் எந்திரிச்சு ஒரே ஒரு தோசை சுட்டு ஊட்டி விடுவேன். தோசை ரொம்பபுடிக்கும் தோசை சட்டியில் தோசை ஊத்துற சவுண்ட் ஸ்ஸ்ஸ்னு இருக்கும்ல , அதே சவுண்டுல கேட்பா, நாம தான் தோச வேணும்னு புரிஞ்சுக்கணும். குளிச்சு புதுத்துணி மாத்திவிட்டு சாப்பாடு ஊட்டிவிட்டு திரும்ப பாய்ல படுக்க வச்சுருவேன். அசந்த நேரத்துல எங்கயாச்சும் வெளிய தெருவப் போயிட்டோம்னா , பாய் முழுசும் மூத்திரம் போயி கிடக்கும். திரும்ப எல்லாத்தையும் முதல்ல இருந்துப் பண்ணனும்.

சுதா

பாகிஸ்தானில் வசிக்கும் தமிழர்கள் : ஓர் ஆச்சர்ய வரலாறு!

சுதா

சுதா

Twitter

“அவளும், ஆட்டுக்குட்டியும்"

வருமானம்னு எதுவும் இல்ல. அதுவும் இந்த கொரனா வந்த பிறகு ரொம்பவே மாறிப்போச்சு,மத்த ரெண்டு புள்ளைங்களுக்கும் கல்யாணம் பண்ணி வச்சதுல கடனும் ஆகிப்போச்சு, அதை அடைக்கிறதுக்காகவே நூறு நாள் வேலைக்கு போவோம்னு சுதாவையும் கூடவே கூட்டிப்போயிட்டு வந்துட்டு இருக்கேன்..

பக்கத்து வீட்டு ஆட்டுக்குட்டிய பார்த்தா அவளா சிரிக்க ஆரம்பிச்சிருவான்னு.ஒரு ஆட்டுக்குட்டி ஒன்னு வாங்கி குடுத்துருக்கேன்.அதோட தான் அவளுக்குப் பொழுது போகுது. இப்போ மாற்றுத்திறனாளிகள் சங்கத்துல உதவித்தொகை 1500 ரூபா கிடைக்கிறதுக்கு உதவி பண்ணிருக்காங்க.எனக்கும் வயசாகிட்டே போகுது, நாளைக்கு நானே இல்லாட்டி என் புள்ளைங்க என்ன ஆகும்ங்கிற கவலையே என்னய ரொம்ப வாட்டுது....

எல்லாருக்குமான வெளிச்சம் நிச்சயம் சுதாவின் மீதும் படறும். நாம் பிரார்த்திப்போம்.

சுதா

மனுஷங்க - 1: விபத்தில் காதலி, இமைபோல் காக்கும் காதலன் | கரூர் தினேஷ் - கண்மணி காதல் கதை

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com