மாத்திரை அட்டை வடிவத்தில் திருமண அழைப்பிதழ் - இணையத்தை கவர்ந்த புகைப்படம்

தமிழகத்தை சேர்ந்த எழிலரசன் என்ற இளைஞர் தனது திருமண அழைப்பிதழை மாத்திரை அட்டையில் அச்சடித்திருக்கிறார்
எழிலரசன் திருமண அழைப்பிதழ்
எழிலரசன் திருமண அழைப்பிதழ்டிவிட்டர்
Published on

மாத்திரை அட்டை வடிவத்தில் திருமண பத்திரிக்கையை அச்சடித்துள்ளார் தமிழகத்தை சேர்ந்த நபர் ஒருவர். இதன் புகைப்படத்தை ஹர்ஷ் கோயிங்கா என்பவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, "மக்கள் இப்போதெல்லாம் எவ்வளவு கிரியேட்டிவ் ஆக யோசிக்க துவங்கிவிட்டனர்" என பதிவிட்டிருந்தார்.

திருமணம் என்பது நம் எல்லோருக்கும் மிக முக்கியமான நினைவு! அந்த நிகழ்வை எவ்வளவு சுவாரஸ்யமாக மாற்றமுடியுமோ, அவ்வளவு சுவாரஸ்யமாக மாற்றுவோம். இந்த முயற்சிகள் நமது திருமண அழைப்பிதழில் இருந்தே துவங்கும்.

Indian wedding (rep)
Indian wedding (rep)Pexels

முன்னரெல்லாம் திருமண அழைப்பிதழ்கள், வெளியில் இளஞ்சிவப்பு நிறத்திலும், உள்ளே மஞ்சள் நிறத்திலும் இருக்கும். இதில் திருமண நிகழ்வு குறித்த தகவல்கள் இடம்பெற்றிருக்கும்.

இப்போதும் அந்த அழைப்பிதழ் வடிவம் பயன்படுத்தப்பட்டாலும், மணமக்கள், தங்களது விருப்பதுக்குகந்த புதிய வித்தியாசமான வடிவங்களை தேர்ந்தெடுக்கின்றனர். நாமே நமக்கு தேவையான வடிவத்தை டிசைன் செய்துகொள்ளும் கலாச்சாரம் அதிகமாகி விட்டது.

எழிலரசன் திருமண அழைப்பிதழ்
30 ஆண்டுகளுக்கு முன் இறந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் - இந்த வினோத சடங்கு ஏன் ?
Wedding Ceremony
Wedding CeremonyPexels

அப்படி தான் தமிழகத்தை சேர்ந்த எழிலரசன் என்ற இளைஞர் ஒருவர் தனது திருமண அழைப்பிதழை மாத்திரை அட்டையில் அச்சடித்திருக்கிறார். நாம் உட்கொள்ளும் மாத்திரை அட்டையின் பின்புறத்தில் அந்த மருந்து குறித்த விவரங்கள் இருக்கும்.

அந்த வடிவத்தில் தான் இவரது திருமண தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இவர் மருந்துக்கடையில் வேலை செய்பவராதலால், தன் திருமண அழைப்பிதழை இவ்வாறு வடிவமைத்துக்கொண்டுள்ளார்.

மணமக்களின் பெயர் எழிலரசன், வசந்த குமாரி. என அச்சடிக்கப்பட்டுள்ளது.

எச்சரிக்கை, எந்த நண்பரும் உறவினரும் என் திருமணத்தை மிஸ் செய்யக் கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது.

மாத்திரை தயார் செய்ய பயன்படுத்தப்பட்ட பொருட்கள் இருக்கும் இடத்தில், மணமக்கள் குறித்த தகவல்கள் இருக்கிறது. அவர்களது பெயர், படிப்பு மற்றும் வேலை பார்க்கும் இடம் போன்றவை.

இவர்களது திருமணம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி நடைபெறவுள்ளது. மேலும், செப்டம்பர் 5 ஆசிரியர் தினம், டாக்டர் ராத கிருஷ்ணனின் பிறந்தநாள், மற்றும் அந்நாளின் இதர முக்கிய நிகழ்வுகளையும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த திருமண அழைப்பிதழை ஆர்பிஜி குழும தலைவர் ஹர்ஷ் கோயின்கா தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். அதற்கு அவர் "மக்கள் இப்போதெல்லாம் எவ்வளவு கிரியேட்டிவ் ஆக யோசிக்க துவங்கிவிட்டனர்" என தலைப்பிட்டிருந்தார்.

எழிலரசன் திருமண அழைப்பிதழ்
அழுகை சடங்கு முதல் எச்சில் துப்புவது வரை - உலகின் வித்தியாசமான திருமண கலாச்சாரங்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com