கொடைக்கானல் : மலை உச்சியில் மறைந்திருக்கும் குக்கல் குகை - ஏன் நிச்சயம் பார்க்க வேண்டும்?

மலை உச்சியில் இருக்கும் குக்கல் குகை, பருவகாலத்தில் மூடுபனியுடன் காட்சியளிக்கிறது. இந்த அழகிய காட்சி கொடைக்கானலில் தவிர்க்க முடியாத அனுபவமாக சுற்றுலா பயணிகளுக்கு இருக்கும். இந்த குகைகள் மலை உச்சியில் வாழ்ந்த பழங்குடியினரால் செதுக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
குக்கல் குகை
குக்கல் குகைTwitter
Published on

கொடைக்கானலில் இருந்து 40 கி.மீ தூரத்தில் இருக்கிறது குக்கல் குகைகள். குணா குகை பற்றி கேள்விப்பட்டதுண்டு அது என்ன குக்கல் குகைகள் என்று தானே யோசிக்கிறீர்கள்? குக்கல் குகைகள் தென்னிந்தியாவில் உள்ள பழமையான செதுக்கப்பட்ட குகைகளில் ஒன்றாகும்.

குக்கல் குகைகள் மலை உச்சியில் உள்ள காடுகளுக்குள் மறைந்துள்ளன. இது உயரமான இடத்தில் இருப்பதால் காடுகளுக்குள் மலையேற்றம் செய்ய விரும்புவர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.

செங்குத்தான பாறைகள், புல்வெளிகள் வழியாக மலையின் உச்சிக்கு செல்லும் குறுகிய பயணம் மலையேறுபவர்களுக்கு ஒரு மறக்க முடியாத அனுபவத்தை கொடுக்கும்.

மலை உச்சியில் இருக்கும் குக்கல் குகை, பருவகாலத்தில் மூடுபனியுடன் காட்சியளிக்கிறது. இந்த அழகிய காட்சி கொடைக்கானலில் தவிர்க்க முடியாத அனுபவமாக சுற்றுலா பயணிகளுக்கு இருக்கும். இந்த குகைகள் மலை உச்சியில் வாழ்ந்த பழங்குடியினரால் செதுக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

கிரானுலைட் மற்றும் சார்கோனைட் என அழைக்கப்படும் பல்வேறு வகையான பாறைகளால் செதுக்கப்பட்ட குகைகளை ஆராய்வது மட்டுமன்றி பழங்குடியினர் ஒருகாலத்தில் பயன்படுத்திய இவ்விடத்திற்கு பயணித்து அனுபவத்தை பெறலாம்.

குக்கல் குகை
கொடைக்கானல் மூணாறை இணைக்கும் Escape Road - ஆங்கிலேயர் அமைத்த இந்த வழியில் செல்ல ஏன் தடை?

இப்போது மலையேறுபவர்கள் மற்றும் முகாமிடுதலில் ஈடுபடுபவர்களின் விருப்பமான இடமாக, குக்கல் குகைகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள காடுகள் மாறிவிட்டன.

அன்றாட வாழ்க்கையின் சலசலப்பில் இருந்து விடுபட்டு இயற்கை அழகை உணர, அனுபவிக்க இது ஏற்ற இடமாகும். பல ரகசியங்களை மறைத்து வைத்திருக்கும் குக்கல் மலையில், வனத்துறையின் முன் அனுமதியுடன், நீங்கள் பழமையான காடுகளில் பாதுகாப்பாக உலா வரலாம்.

குக்கல் குகை
கொடைக்கானல் : ஏரியில் உருவாகிறதா மிதவை உணவகம்? நிச்சயம் பார்க்க வேண்டிய இடங்கள் என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com