RN Ravi
RN Ravi Twitter

தமிழ்நாடு: ‘தமிழகம்’ என குறிப்பிட்டது ஏன்? சர்ச்சை குறித்து ஆளுநர் ரவியின் விளக்கம் என்ன?

காசி மற்றும் தமிழ்நாட்டிற்கு இடையே உள்ள தொடர்பை குறிக்க தமிழகம் என்ற வார்த்தையை பயன்படுத்தினேன் என்று தொடர் சர்ச்சையில் சிக்கிய ஆளுநர் ஆர் என் ரவி விளக்கம் கொடுத்துள்ளார்.
Published on

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு தமிழ்நாட்டிலிருந்து ஏற்பாடுகளை மேற்கொண்ட அமைப்பாளர்கள் மற்றும் தன்னார்வலர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது

''தமிழ்நாட்டில் வித்தியாசமான அரசியல் சூழல் நிலவுகிறது எல்லாவற்றிற்கும் நாங்கள் திராவிடர்கள் என்று கூறுகின்றனர். இந்தியா முழுவதும் ஒரு செயல்திட்டம் இருந்தால் தமிழ்நாடு அதை வேண்டாம் என்கிறது

தமிழ்நாடு என்ற பெயரை தமிழகம் என சொல்வதுதான் சரியாக இருக்கும்'' என்று ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் தலைவர்களும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இதற்கிடையில் தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரையின்போது, தமிழ்நாடு அரசு தயாரித்துக் கொடுத்த அறிக்கையில் இடம்பெற்ற சில பகுதிகளை படிக்காமல் தவிர்த்தது சர்ச்சையானது.

ஆளுநருக்கு எதிராக முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார்.

அந்த தீர்மானத்தை முதல்வர் வாசித்துக் கொண்டிருக்கும்போதே, ஆளுநர் பேரவையில் இருந்து வெளியேறினார். இப்படி தொடர் சர்ச்சையில் சிக்கிய ஆளுநர் ஆர் என் ரவி தமிழ்நாடு பெயர் குறித்து விளக்கம் கொடுத்துள்ளார்.

RN Ravi
ஆர் என் ரவி : இதற்கு முன் ஆளுநர்கள் மாநில அரசின் உரைகளை வாசிக்காமல் இருந்திருக்கிறார்களா?
R N Ravi
R N RaviTwitter

காசி மற்றும் தமிழ்நாட்டிற்கு இடையே உள்ள தொடர்பை குறிக்க தமிழகம் என்ற வார்த்தையை பயன்படுத்தினேன். அந்த காலத்தில் தமிழ்நாடு என்பது இருக்கவில்லை.

தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை எனும் வாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த விளக்கம் என்றார்.

தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை போல பொருள் கொள்வதோ, அனுமானம் செய்து கொள்வதோ தவறானது.

வரலாற்று பண்பாட்டு சூழலில் தமிழகம் என்பதை மிகவும் பொருத்தமான வெளிப்பாடு என்ற கண்ணோட்டத்தில் குறிப்பிட்டேன்.

எனது பேச்சின் அடிப்படை புரியாமல் தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை எனும் வாதங்கள் விவாதப் பொருளாகி உள்ளது என்று ஆளுநர் ஆர் என் ரவி விளக்கம் அளித்துள்ளார்.

RN Ravi
தமிழ்நாடு : ஆளுநருக்கு தமிழிசை சப்போர்ட்; காண்டான கமல் - முழுமையான பின்னணி என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com