கோயம்புத்தூரை சொந்த மாவட்டமாக கொண்டவர் ஸ்டாலின் ஜேகப். இவர் பிரபல புகைப்படக் கலைஞர் ஆவார்.
சென்னையில் தங்கியிருந்து க்ளவுட் கிச்சன் நடத்திவந்த ஸ்டாலின் ஜேகப், What a Karwad என்ற இணைய உணவு டெலிவரி சேவையை தொடங்கியதன் மூலம் பிரபலமடைந்தார்.
இவர் நேற்று மறைமலைநகர் அருகில் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் தோழமை கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஜேகப் ஸ்டாலின் திமுக சமூக வலைத்தள பக்கங்களிலும் பங்காற்றி வந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், "நேற்றுதான் பிறந்தநாள் கொண்டாடிய நிலையில் கழகத்தின் துடிப்பான சமூக வலைத்தளச் செயல்வீரர் @stalinjacka இத்தனை இளம் வயதில் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார் என்ற செய்திகேட்டு அதிர்ச்சியடைந்தேன்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் & உடன்பிறப்புகளுக்கு எனது ஆறுதலும் ஆழ்ந்த இரங்கல்களும்!" என ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ள்ளார்.
முன்னதாக தனது பிறந்தாநாளையொட்டி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
கனிமொழி, "நேற்று தனது பிறந்தநாள் என என்னை சந்தித்து வாழ்த்து பெற்ற தம்பி ஸ்டாலின் ஜேகப் அவர்களின் புன்னகை கூட இன்னும் மறக்கவில்லை, அதற்குள் இத்தகு துயரச் செய்தி.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்கள்." என தனது துயரத்தை ட்விட்டரில் பகிர்ந்துகொண்டார்.
மேலும் பலர் ஸ்டாலின் ஜேகப்க்கு தங்களது இரங்கல்களை தெரிவித்துள்ளனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust