செயல்படாத கட்சியாக நடிகர் டி.ராஜேந்தரின் கட்சி உள்ளிட்ட 253 கட்சிகள் அறிவிப்பு!

தமிழகத்தில் கொங்குநாடு ஜனநாயக கட்சி, மக்கள் மறுமலர்ச்சி முன்னேற்றக் கழகம், எம்ஜிஆர் தொண்டர்கள் கட்சி, தேசபக்தி, புதிய நீதி கட்சி, தமிழ் மாநில காயுதே மில்லக் கழகம், தமிழர் கழகம் ஆகிய கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
டி ராஜேந்தர்
டி ராஜேந்தர்Twitter
Published on

நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படாத 86 அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து என்றும், 253 மாநிலக் கட்சிகளைச் செயல்படாதவை எனவும் இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பீகார், டெல்லி, கர்நாடகா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, தெலுங்கானா மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநில தேர்தல் அதிகாரிகளின் அறிக்கையின் அடிப்படையில், இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர் அனுப் சந்திர பாண்டே ஆகியோர் அடங்கிய ஆணையம், இந்த கட்சிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தது.

Election Commission
Election CommissionTwitter

தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துவிட்டுத் தொடர்ந்து தேர்தலில் போட்டியிடாத கட்சிகளின் பதிவு ரத்து செய்யப்படும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதாவது ஆணையத்தில் பதிவு செய்த நாளில் இருந்து தொடர்ந்து ஆறு ஆண்டுகள் ஒரு கட்சி தேர்தலில் போட்டியிடாவிட்டால், பதிவு செய்துள்ள கட்சிகளின் பட்டியலில் இருந்து அக்கட்சி நீக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் தமிழகத்தின் 7 கட்சிகள் இடம் பெற்றுள்ளது அவற்றில் ஒன்று நடிகரும் இயக்குநருமான டி.ராஜேந்தரின் லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம். சினிமாவில் கொடிகட்டிப்பறந்த டி ராஜேந்தர் அரசியலிலும் தன்னுடைய இருப்பை காட்ட நினைத்தார்.

டி ராஜேந்தர்
உணவு அரசியல் : ஆரோக்கியமான உணவு இன்றி தவிக்கும் 70% இந்தியர்கள் - என்ன நடக்கிறது இங்கே?

அரசியல் வாழ்க்கை

திமுகவில் இணைந்து தனது அரசியல் பணியை தொடங்கினார். திமுகவில் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்துள்ளார். 1996ல் சென்னை பூங்காநகர் தொகுதியில் போட்டியிட்டு தமிழக சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.

தமிழக சிறுசேமிப்பு திட்ட ஆலோசனை குழு துணைத் தலைவராகவும் பணியாற்றி உள்ளார். திமுகவிலிருந்து விலகி 1991ல் தாயக மறுமலர்ச்சி கழகம் என்று கட்சியையும் 2004 இல் இலட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியையும் தொடங்கினார்.

டி ராஜேந்தர்
எம்ஜிஆர் முதல் எடப்பாடி வரை: பிளவால் உருவான அதிமுக கட்சியின் வரலாறு - விரிவான தகவல்

தமிழகத்தில் ரத்து செய்யப்பட்ட கட்சிகள்

தமிழகத்தில் கொங்குநாடு ஜனநாயக கட்சி, மக்கள் மறுமலர்ச்சி முன்னேற்றக் கழகம், எம்ஜிஆர் தொண்டர்கள் கட்சி, தேசபக்தி, புதிய நீதி கட்சி, தமிழ் மாநில காயுதே மில்லக் கழகம், தமிழர் கழகம் ஆகிய கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல், நடிகர் டி.ராஜேந்தரின் 'இலட்சிய திராவிட முன்னேற்றக் கழகம்' செயல்படாத கட்சி என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

டி ராஜேந்தர்
"கல்யாணம் கல்யாணம்னு டார்ச்சர் பண்ணாதீங்க" - ஆடியோ லாஞ்சில் சிம்பு பேசியது என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com