The Elephant Whisperers: Oscar நாயகன் ரகு யானையை காண முதுமலையில் குவியும் சுற்றுலா பயணிகள்

ஆஸ்கர் வென்ற பிறகு மக்கள் அனைவரும் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 8 ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் வெளியான ஆவணப்படத்தை இப்போது தான் சென்று ஆர்வமாக பார்க்கிறார்கள்.
The Elephant Whisperers star becomes tourist attraction in Theppakadu Elephant Camp after Oscar win
The Elephant Whisperers star becomes tourist attraction in Theppakadu Elephant Camp after Oscar winTwitter
Published on

ஆஸ்கர் விருதுக்குப் பிறகு முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் ரகு யானையை பார்க்க ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

95 ஆவது ஆஸ்கர் விருது விழா கடந்த 13ஆம் தேதி நடைப்பெற்றது. இதில் இந்தியா சார்பாக போட்டியிட்ட, 'தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப்படம் சிறந்த ஆவண குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதை தட்டி சென்றது.

இதனையடுத்து தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்தில் நடித்த ரகு என்ற யானைக்கு fandom உருவாகியுள்ளது.

The Elephant Whisperers star becomes tourist attraction in Theppakadu Elephant Camp after Oscar win
The Elephant Whisperers: யானைகளின் தந்தையும் தாயுமான தம்பதி - ஆவணப்படம் உருவானது எப்படி?

சமூகவலைதளங்களில் மட்டுமல்லாமல் நேரில் சென்று சுற்றுலாப் பயணிகள் ஆஸ்கர் வென்று கொடுத்த ரகு யானையை பாசமாக பார்த்து வருகின்றனர்.

முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் இருக்கும் ரகு யானையை பார்க்க சுற்றுலாப் பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

இது குறித்து சுற்றுலாப் பயணி ஒருவர் கூறுகையில்,

"நான் லண்டனில் இருந்து வருகிறேன், இங்கிருந்து இரண்டு குட்டி யானைகள் ஆஸ்கார் விருது பெற்றதை அறிந்தோம். அவற்றைப் பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது, யானை எனக்கு மிகவும் பிடித்த விலங்கு, அவற்றைப் பார்த்து நான் ரசித்தேன். ரகு யானையை பார்த்ததால் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி" என்றார்.

The Elephant Whisperers படத்தின் இயக்குநர் கார்த்திகி கோன்சால்வ்ஸ் இந்த ஆவணப்படத்தை எடுக்க முதுமலை புலிகள் காப்பகத்தில் 5 ஆண்டுகள் தங்கியிருந்திருக்கிறார்.

முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாம் ஆசியாவிலேயே மிகவும் பழமையான யானைகள் முகாம் என்று கூறப்படுகிறது.

இந்த முகாம் 105 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. மோயார் ஆற்றின் கரையில் அமைந்திருக்கும் இந்த முகாமில் 28 யானைகள் உள்ளன.

ஆஸ்கர் வென்ற பிறகு மக்கள் அனைவரும் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 8 ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் வெளியான ஆவணப்படத்தை இப்போது தான் சென்று ஆர்வமாக பார்க்கிறார்கள்.

The Elephant Whisperers star becomes tourist attraction in Theppakadu Elephant Camp after Oscar win
கீரவாணி: ஆஸ்கர் வென்ற 2வது இந்திய இசையமைப்பாளர்; இந்திய இசையின் பாகுபலி - இவரது கதை என்ன? 

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com