The Elephant Whisperers: தும்பிக்கை இல்லாமல் யானைகளால் வாழ முடியாதா? wow facts

யானைகள் செய்யும் சிறு சிறு சேட்டைகள் குழந்தைகளை போலவே இருக்கும். யானைகளின் பல குணாதிசயங்கள் மனிதர்களுடன் கூட ஒத்துப்போகும். அப்படி, யானை குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களை இங்கு காணலாம்.
The Elephant Whisperers: தும்பிக்கை இல்லாமல் யானைகளால் வாழ முடியாதா? wow facts
The Elephant Whisperers: தும்பிக்கை இல்லாமல் யானைகளால் வாழ முடியாதா? wow factscanva

கடந்த டிசம்பர் மாதம் வெளியான தி எலிபண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படம் ஆஸ்கர் விருது வென்றுள்ளது. இதன் பிறகு முதுமலையில் இந்த ஆவணப்படத்தில் இடம்பெற்ற ரகு யானையை காண சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

காட்டு விலங்குகளில் அனைவருக்கும் ஃபேவரட்டாக இருப்பது யானைகள்.

யானைகள் செய்யும் சிறு சிறு சேட்டைகள் குழந்தைகளை போலவே இருக்கும். யானைகளின் பல குணாதிசயங்கள் மனிதர்களுடன் கூட ஒத்துப்போகும். அப்படி, யானை குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களை இங்கு காணலாம்.

The Elephant Whisperers: தும்பிக்கை இல்லாமல் யானைகளால் வாழ முடியாதா? wow facts
The Elephant Whisperers: Oscar நாயகன் ரகு யானையை காண முதுமலையில் குவியும் சுற்றுலா பயணிகள்

யானைகள் மறக்காது:

நிலத்தில் வாழும் பாலூட்டிகளுள் யானைகளுக்கு அறிவாற்றல் அதிகம். இவற்றின் நினைவு திறன் மனிதர்களை விடவும் வலுவானது. வருடங்கள் கடந்தும் கூட யானைகளால் அவை சந்தித்த மனிதர்களை, சென்று வந்த இடங்களை, மற்ற யானைகளை நினைவுக்கூர முடியும்.

பெண் யானைகள் வழியாக இந்த நினைவாற்றல் அடுத்த தலைமுறைகளுக்கு கடத்தப்படுகிறது. யானைகளின் ஞாபக சக்தியானது அவை உயிர்வாழ ஒரு முக்கிய கருவியாக இருக்கிறது

மொழிகள் வேறுபடுத்துதல்:

யானைகளினால் மனித பாஷையை புரிந்துகொள்ள முடியும். அதே சமயத்தில் அவற்றினால், ஒரு ஆண், பெண் அல்லது குழந்தைகளின் குரலையும் வேறுபடுத்த முடியும். குரல்களுக்கு ஏற்றவாறு அவற்றின் செயல்பாடுகளிலும் மாற்றங்கள் காணப்படுகின்றன. இதனை கென்யாவில் ஒரு முறை நடந்த சோதனையின் மூலம் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்

The Elephant Whisperers: தும்பிக்கை இல்லாமல் யானைகளால் வாழ முடியாதா? wow facts
Penguin : பறக்க முடியாத பறவை பற்றிய சில சுவாரஸ்ய உண்மைகள்! Wow Facts

நீச்சல்:

யானைகளுக்கு தண்ணீரில் விளையாடுவது மிகப் பிடித்தமான ஒரு செயல். தண்ணீரில் துள்ளி குதித்தும் தன் மீது நீரை வாரி இறைத்துக்கொண்டும் விளையாடும். விளையாடுவது மட்டுமல்ல. யானைகளுக்கு நீச்சலும் தெரியும்.

அதன் உடல் எடைக்கு ஏற்றவாறு யானைகளால் தண்ணீரில் பேலன்ஸ் செய்துகொண்டு நீந்திச் செல்ல இயலும்

அன்பு:

யானைகள் ஒன்றோடு ஒன்று மிக அன்னியோனியமாக வாழ்கின்றன. அதாவது, தன்னுடன் இருக்கும் ஒரு யானை சோகத்தில் ஆழ்ந்திருந்தால், மற்ற யானைகள் ஆறுதல் அளிக்கின்றன.

தனிமையில் வாடும் யானைக்கு அரவணைப்பது, அருகில் அழைத்து விளையாடுவது போன்றவற்றை செய்யுமாம். மனிதர்கள் மற்றவர்களுக்காக வருந்துவது போல, யானைகளும் மற்ற யானைகளுக்காக மனம் வருந்துகிறது (empathy)

PTSD:

ஆங்கிலத்தில் போஸ் ட்ராமாட்டிக் ஸ்டிரெஸ் டிசாடர் என்ற ஒரு பதம் இருக்கிறது. மனிதர்களுக்கு தங்கள் வாழ்வில் ஏற்பட்ட மிக துக்கமான, பயங்கரமான ஒரு சம்பவம் ஆழ் மனதில் பதிந்து, அது சம்பந்தமான எந்த ஒரு நிகழ்வு நடைபெறும்போதும், பயத்தை உண்டாக்கும். இதனை பிடிஎஸ்டி என பரவலாக குறிப்பிடுகின்றனர்.

யானைகளுக்கும் பிடிஎஸ்டி இருக்கிறது. தனது குடும்பத்தை சேர்ந்த அல்லது நெருக்கமான யானைகள் வேடர்களால் கொல்லப்பட்டால், அல்லது எப்போதாவது மனிதர்கள் மூலம் துன்புறுத்தப்பட்டிருந்தால் அது யானைகளின் மனதில் நீண்ட நாட்களுக்கு வடுவாகிறது

The Elephant Whisperers: தும்பிக்கை இல்லாமல் யானைகளால் வாழ முடியாதா? wow facts
Anaconda : உலகின் மிகப்பெரிய பாம்பு இது இல்லையா? அனகோண்டா பற்றிய 9 ஆச்சரிய உண்மைகள்!

தும்பிக்கை:

யானைகளால் அதன் தும்பிக்கை இல்லாமல் வாழ முடியாது. யானையின் தும்பிக்கை 40000 தசைகளால் ஆனது. இதனை வைத்து தான் சாப்பிடுதல், முகர்தல், சப்தம் எழுப்புதல், சுத்தப்படுத்திக்கொள்ளுதல் என அனைத்தையும் யானைகள் செய்துகொள்ளும்.

மேலும் கட்டியணைக்க, மற்ற யானைகளுடன், மனிதர்களுடன் தொட்டு பேச தும்பிக்கைகளை பயன்படுத்துகின்றன. குழந்தைகள் விரலை வாயில் வைத்துக்கொள்வது போல குட்டியானைகள் தங்கள் தும்பிக்கைகளை வாயில் வைத்துக்கொள்ளுமாம்.

தும்பிக்கையின் நுனியில் யானைகளுக்கு விரல்களும் இருக்கின்றன. ஆசிய யானைகளுக்கு ஒன்றும், ஆப்பிரிக்க யானைகளுக்கு இரண்டும் இருக்கும். இதை வைத்து தான் பொருட்களை எடுக்கின்றன.

இதனால் தும்பிக்கை இல்லாமல் யானைகளால் வாழ இயலாது

மணல் தான் சன்ஸ்கிரீன்:

யானைகள் தன் உடல் மீது மண்ணை வாரி இறைத்துக்கொள்வது வழக்கம். உடல்களை வெப்பத்திலிருந்து காப்பாற்றிக்கொள்ள, சூரிய ஒளியிலிருந்து சருமத்தை பாதுகாக்க மண்ணை மேலே போட்டுக்கொள்ளுமாம்.

The Elephant Whisperers: தும்பிக்கை இல்லாமல் யானைகளால் வாழ முடியாதா? wow facts
தென் ஆப்ரிக்கா: மூன்று கால்களுடன் உயிர்வாழும் யானை - இணையத்தை கவர்ந்த வீடியோ

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com