உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கான விசித்திரமான வேலைகள் உள்ளன. அவை வியக்கத்தக்க வகையில் தங்கள் ஊழியர்களுக்கு, சம்பளமாகப் பெரும் தொகையை வழங்குகின்றன. அத்தகைய நிறுவனங்களில் ஒன்று ‘பெட்பைபிள்’. செக்ஸ் மற்றும் செக்ஸ் சார்ந்த டாய்ஸ் தொடர்பான நிறுவனம் இது. செக்ஸ் சார்ந்த அனைத்துத் தகவல்களும் கிடைக்கின்ற ஒரு நிறுவனம்.
பெட்பைபிள் நிறுவனம் சமீபத்தில் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பணிக்கான காலியிடத்தை வெளியிட்டது. அது என்ன தெரியுமா? ஆன்லைன் ஆபாச வீடியோக்களை ஒருவர் பார்ப்பதற்கான பணிதான் அது.
ஆன்லைனில் வயது வந்தோருக்கான (pornographic videos) திரைப்படங்களைப் பார்ப்பதற்கும், ஆபாச திரைப்படங்கள் தொடர்பான தகவல்களுக்கும், செக்ஸ் வைத்துக்கொள்ளும் நிலை மற்றும் நேர அளவு, செக்ஸில் எத்தனை முறை புணர்ச்சி வருகின்றது என்பதற்கான எண்ணிக்கை, செக்ஸ் உச்சக்கட்ட இன்ப நிலைகள், செக்ஸ் பொசிஷன்ஸ், ஆண் மற்றும் பெண் விகிதம் போன்ற குறிப்பிட்ட தலைப்புகளில் தகவல்களைச் சேகரிக்கவும், பல மொழிகளில் இவற்றைக் கொண்டு சேர்க்கவும் இந்நிறுவனம் ஒரு மணிநேரத்திற்கு ஒரு நபருக்கு $20 (தோராயமாக ₹1515) தருவதாக அறிவித்துள்ளது.
ஆபாச ஆராய்ச்சிக்கான தலைவர் பணிக்கு, வேலைக்குச் சேர ஒருவருக்கு 21 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதில் மட்டுமே இருக்க வேண்டும். அவர்தான் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க முடியும். இந்த வேலை முழுக்க, முழுக்க நீங்கள் வீட்டிலிருந்தே செய்யலாம் 100% remote job எனச் சொல்லியுள்ளது. உலகில் நீங்கள் எங்கு இருந்தாலும் வேலை செய்யலாம் என இந்நிறுவனம் கூறியுள்ளது. இருப்பினும், பணியில் சேர்வோர் தினமும் அல்லது வாரந்தோறும் தொடர்பில் இருக்க வேண்டும்.
இந்த நிறுவனத்தின் விண்ணப்பப் படிவத்தில் விண்ணப்பதாரரின் பெயர், மின்னஞ்சல் முகவரி, வேலை நிலை, விண்ணப்பிப்பதற்கான காரணங்கள் மற்றும் ஏன் இந்த நிறுவனம் பணிக்கு உங்களைத் தேர்வு செய்ய வேண்டும் போன்ற தகவல்களையும் கேட்கிறது.
இந்நிறுவனத்தின் கூற்றுப்படி, ஆபாச வீடியோக்களின் போக்குகள்/புள்ளிவிவரங்கள் பற்றிய பல தரவுகள் பயன்படுத்தப்பட்டு
விரிவான அறிக்கையை உருவாக்க இருக்கிறது.
LAD பைபிள் உடனான உரையாடலில், பெட்பைபில் தலைமை கன்டன்ட் கிரியேட்டரான ‘எட்வினா கைட்டோ’ கூறுவது, “உலகம் முழுவதும் பில்லியன் பவுண்டுகள் கொண்ட தொழில்துறைதான், ஆபாசப் படங்களுக்கான தொழில். எனவே, நிஜ வாழ்க்கையில் உள்ள உதாரணங்கள் மூலம் மேலும் செக்ஸ் பற்றின நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ளும் யோசனையை நாங்கள் கொண்டு வந்து இருக்கிறோம். மக்களால் அதிகமாக விரும்பப்பட்டு, அதிகமாகப் பார்க்கப்பட்ட டாப் 100 செக்ஸ் பொசிஷன்ஸ் வீடியோக்களை எடுத்து, அது குறித்து ஆராயவும் தேர்ந்தெடுத்து இருக்கிறோம். இந்த ஆராய்ச்சியின் மூலம் ஆபாசப் படங்களில் நடித்த நடிகர்கள் எந்த வகையான ரோல்ப்ளேவைக் கொண்டுள்ளனர், உச்சக்கட்டத்தின் எண்ணிக்கை மற்றும் எந்தவொரு காரணத்தால் இப்படங்கள் மக்களால் அதிகம் விரும்பப்பட்டது போன்ற சில சுவாரஸ்யமான புள்ளிவிவரங்களை எங்கள் ஆராய்ச்சியில் இருந்து கற்றுக்கொள்வோம்.” என்று கூறி இருக்கிறார்.