பெங்களூரு வைச் சேர்ந்த ஸ்டாக்க்ரோ நிறுவனம் தலைமை மீம் அதிகாரியைத் தேடி வருவதாக அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
இந்த வேலையில் அமர்த்தப்படுவதற்கு மாதம் 1 லட்சம் சம்பளம் கிடைக்குமாம். மேலும், வீட்டிலிருந்தே வேலை செய்தால் போதும்.
இதையெல்லாம் கேட்கும்போது "என்ன ஜோக் காட்றிங்களா" என்ற மீம் டெம்ளேட் தான் நமக்கே தோன்றுகிறது அல்லவா?
"வழக்கத்துக்கு மாறான மீம் அதிகாரி மூலம் எங்களால் வாடிக்கையாளர்களுடன் தொடர்பை ஏற்படுத்த முடியும். எங்கள் நிறுவனம் பற்றிய பேச்சுகளை உருவாக்க முடியும்.
விளைவாக புதிதாக வருபவர்கள் எங்கள் தளத்தை ஆராய்ந்து பார்க்க விரும்புவார்கள். மீம்களின் மாயாஜாலத்தைக் காண ஆர்வமாக இருக்கிறோம்" என அந்த நிருவனத்தின் தலைமை அதிகாரியான அஜய் லகோதா கூறியுள்ளார்.
நிறுவனத்தை மக்களிடையே உற்சாகமாக வைத்திருக்கும் கடமை மீம் கிரியேட்டருக்கு உள்ளது எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், தேர்ந்தெடுக்கப்படும் நபர் ஜென் ஜி தலைமுறையினருக்கான மீம்களை தயாரிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் அந்த மீம் கிரியேட்டர் உலகின் நிதிச் சந்தை மற்றும் அதன் நடவடிக்கைகள் குறித்து தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மிகவும் போரான ஒரு ஃபைனான்சியல் வகுப்புகளை எளிமையான நச் மீம்களாக மாற்றும் திறமை உள்ளவரை அந்த நிறுவனம் தேடுகிறதாம்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust