32 ரூபாய்க்கு வாங்கப்பட்டு 11 லட்சத்துக்கு விற்பனை - ஆச்சரியத்தில் ஆழ்த்திய Harry Potter

நீங்கள் ஒரு ஹாரிபார்ட்டர் ரசிகராக இருந்தால் இந்த செய்தி உங்களுக்கானது தான். மிக மிகப் பழைய Harry Potter and the Philosopher’s Stone என்ற புத்தகம் ஏறத்தாழ 11 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் விற்கப்பட்டிருக்கிறது.
32 ரூபாய்க்கு வாங்கப்பட்ட 11 லட்சத்துக்கு விற்பனை - ஆச்சரியத்தில் ஆழ்த்திய Harry Potter
32 ரூபாய்க்கு வாங்கப்பட்ட 11 லட்சத்துக்கு விற்பனை - ஆச்சரியத்தில் ஆழ்த்திய Harry PotterTwitter
Published on

உலக திரைப்பட வரலாற்றிலும் சரி புத்தக வரலாற்றிலும் சரி தனக்கெனத் தனி இடத்தைப் பிடித்த படைப்பு ஹாரி பாட்டர். மாய உலகில் உலாவரும் சிறுவர்கள் பற்றிய அந்த கதை பெரியவர் முதல் குழந்தைகள் வரை அனைவரையும் ஈர்த்தது.

உலகம் முழுவதும் வியாபாரமான இந்த புத்தகம், நம் குழந்தைப் பருவத்தை அழகாக்கியதில் பெரும்பங்கு வகித்தது என்றே கூறலாம். இதற்கு இதனை எழுதிய ஜே.கே.ரவ்லிங்-க்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.

நீங்கள் ஒரு ஹாரிபார்ட்டர் ரசிகராக இருந்தால் இந்த செய்தி உங்களுக்கானது தான். மிக மிகப் பழைய  Harry Potter and the Philosopher’s Stone என்ற புத்தகம் ஏறத்தாழ 11 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் விற்கப்பட்டிருக்கிறது. 

Bloomsbury  என்ற பதிப்பகத்தால் 1997ம் ஆண்டு இந்த புத்தகம் பதிப்பிக்கப்பட்டுள்ளது. இது லேமினேஷன் செய்யப்பட்ட அட்டைகளைக் கொண்டுள்ளது.

இந்த புத்தகம் முதன் முதலாக அச்சிடப்பட்ட 500 புத்தகங்களில் ஒன்று. மேலும் அப்போது நூலகங்களுக்கு வழங்கப்பட்ட எடிஷனாகும்.

32 ரூபாய்க்கு வாங்கப்பட்ட 11 லட்சத்துக்கு விற்பனை - ஆச்சரியத்தில் ஆழ்த்திய Harry Potter
"Face Book எப்போது வேண்டுமானாலும் மூடப்படலாம்" - முன்னாள் ட்விட்டர் இந்தியா தலைவர்

இந்த புத்தகம் எதிர்பார்க்கப்பட்டதை விட 3 மடங்கு அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளதாக ஏலதாரர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். 

இந்த புத்தகத்தில் நூலகத்தின் அடையாள ஸ்டிக்கரும் விலையும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் அப்போதையன் விலை இந்திய மதிப்பில் 32 ரூபாய் தானாம்.

உலகில் சில பொருட்களுக்கு மட்டுமே ஆண்டுகள் செல்ல செல்ல மதிப்பு அதிகரிக்கும். வெறும் 25 ஆண்டுகளில் மிகவும் மதிப்புமிக்க இடத்தை அடைந்திருக்கிறது ஹாரி பார்ட்டர்.

32 ரூபாய்க்கு வாங்கப்பட்ட 11 லட்சத்துக்கு விற்பனை - ஆச்சரியத்தில் ஆழ்த்திய Harry Potter
Harry Potter: ஏலத்திற்கு வரும் ஹாரி பாட்டர் கண்ணாடி; விலை என்ன தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com